தன்மீட்சி புத்தகத்தின் கட்டுரைகள்.
சமீபத்தில் சற்றே மந்தமான ஒரு பொழுதில் தோன்றிய எண்ணத்தை நான்கே நாள்களில் செயல்படுத்தி 23 கட்டுரைகளையும் ஒலிப்பதிவாக வாசித்து முடித்தேன்.
இவை பெரும்பாலும் 22- 28 வயது இளைஞர் இளைஞிகள் தங்களை தங்கள் படிப்பை/வேலைகளை மீறிய ஆளுமைகளாக உணர்கையில் உண்டாக்கும் தத்தளிப்பில் எழுதிய கடிதங்களும் அதற்கு ஜெயமோகன் எழுதிய பதில்களுமாக இருக்கின்றன (உதிரியாக வேறு சில சாதி பற்றிய கட்டுரைகளும் உண்டு). எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளும் தொண்ணூறுகளில் பிறந்த இந்த தலைமுறை இளைஞர்களின் பிரதிநிதிகளின் குரலாக இந்தக் கடிதங்களை எடுத்துக்கொள்ளலாம். இவற்றுக்கு ஜெயமோகனின் பதில்கள் எளிமைப்படுத்தப்படாமல், கூர்மையாக அதே சமயம் எதிர்மறையாக அல்லாமல் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள வலியுறுத்துகின்றன.
நான் சொல்வதைக்காட்டிலும் நீங்களே வாசித்தோ/காது கொடுத்து கேட்டோ புரிந்து கோல்வது உத்தமம்
வலைப்பதிவின் சுட்டி | Burp | ஒலிப்பதிவு |
எழுதலின் விதிகள் | நீங்கள் ஆற்றவேண்டிய பணி என்ன, அதில் உங்கள் திறன் என்ன, நீங்கள் சென்றடையும் இலக்கென்ன என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்கள் என்றால் அதில் முற்றாக ஈடுபடுவது ஒன்றே வழி .அவ்வாறு கண்டு கொள்ளாத போதுதான் ஆழ்ந்த சோர்வும், செயலின் பயனென்ன என்ற எண்ணமும் ஏற்படுகிறது. சரி, என்ன சொன்னாலும் ஒருவர் அந்தச்சோர்வுதான் எஞ்சுகிறது என்பாரென்றால் அது அவரது வாழ்க்கை, அவ்வளவுதான். நாம் செயலாற்றியாகவேண்டும் என இயற்கையோ ஊழோ அடம்பிடிக்கவில்லை. செயலாற்றுவது நமக்கே ஒழிய வேறெதற்காகவும் அல்ல. இங்கு எவரும் எச்செயலும் ஆற்றவில்லை என்றாலும் எனக்கு ஒன்றுமில்லை என்று கீதை அதைத்தான் சொல்கிறது. | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/1—-m4a-acnaga |
தன்னறம் | எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும்போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே கீதையின் மையச் செய்தி” என்றேன். ”அதை எப்படி கண்டு பிடிப்பது?” என்றான். நான் டாக்டர் நோயைக் கண்டுபிடித்த விதத்தை சொன்னேன். ”எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம்” என்றேன் | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/2–m4a-acnb76 |
தன்னறமும் தனிவாழ்வும் | உங்கள் பணியிடத்தில் நீங்கள் எதைச்செய்தாகவேண்டுமோ, எதைச்செய்தால் உங்கள் பணி முறையாகவும் வெற்றிகரமாகவும் நிகழுமோ அதைச்செய்வதே சரி. அதற்கு நீங்கள் சொந்தவாழ்க்கையில் நெகிழ்வானவராக இருப்பது தடையாக ஆகவேண்டியதில்லை. | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/3—m4a-acqaia |
தேடியவர்களிடம் எஞ்சுவது | வாழ்க்கையின்போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை என்பது மிகச்சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம்பேரின் ஆசைகளும் வேகங்களும் முட்டிமோதும் ஒரு வெளி. தற்செயல்களினாலான மாபெரும் பின்னல். அதில் ஒருவர் செயல்படமுடியுமே ஒழிய விளைவைக் கண்டிப்பாக எதிர்பார்க்கமுடியாது. எதிர்பாராமைகள்தான் வாழ்க்கையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/4—m4a-acqaif |
தனிமை | நீங்கள் இருப்பதைவிடப் பெரிய வெறுமையை நானும் உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய படைப்பூக்கத்தைக் கண்டுகொண்டது வழியாக அதிலிருந்து மீண்டேன் உங்களைச்சுற்றியிருக்கும் சமூகத்தில் , உலகத்தில் நீங்கள் செய்யக்கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால்போதும் இந்தச்சோர்வை வென்றுவிடலாம். அது என்ன என்பதைக் கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச்செய்யும்போதே நீங்கள் விடுதலைபெறுவீர்கள் | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/5–m4a-acqctg |
தன்னறத்தின் எல்லைகள் |
ஒருவர் தனக்கு உண்மையிலேயே எது முக்கியம் என உணர்கிறாரோ அதை செய்யமுடியும் என்றே நான் நினைக்கிறேன். பலசமயம் எளிய உலகியல் ஆசைகளால் அவர் தன்னைத் திசைதிருப்பிக்கொள்கிறார். தன் அகத்துக்கு முக்கியமானதை அழித்துக்கொள்கிறார்.
|
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/6—m4a-acqcp6 |
செயலின்மையின் இனிய மது |
ஆனால் அதற்குத்தேவை மறுகரை வரை விடாப்பிடியாக நீந்தும் மனநிலை. ஒருபோதும் தோற்கமாட்டேன் என்ற வேகம். எழுத்தாளனாக ஆகவேண்டும் என்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வுத்துறை அறிவியலாளராக இருந்த மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணன் தன் வேலையை உதறினார், வேலையில் இருந்தபடியே ஏன் எழுதக்கூடாது என்ற கேள்விக்கு ‘எழுதமுடியாமலானால் நான் பட்டினி கிடந்து சாகவேண்டும் , அதற்காகத்தான் ’ என்று பதில் சொன்னார்
|
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/7—-m4a-acqct4 |
நம் வழிகள் |
அதற்கான வழிகளில் முக்கியமானது, பொதுவாக அனைவரும்செய்யக்கூடிய கேளிக்கைகள், அரட்டைகள் போன்றவற்றைத் தவிர்ப்பதே. நம் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தை அவர்கள் விரும்பும் எந்த துறையில் செலவிட்டிருந்தாலும் பெரிய வெற்றிகளை ஈட்டியிருப்பார்கள்.
|
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/8—m4a-acqct7 |
தேர்வு செய்யப்பட்ட சிலர் | ஆம், ஒரு நூலை வாசிக்கத்தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யபப்ட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும். தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலத்தை மாற்றமுடியும். | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/9—-m4a-acqct9 |
விதி சமைப்பவர்கள் | நித்யா இங்கே பேசும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. உரிமைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அல்ல. மானுட குலத்தின் உயிரியல் இயல்பால் ஏதோ ஒருவகையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நித்யா சொன்ன கருத்தை ‘உன்னிடத்தில் இருக்கும் ஒரு தனித்திறமை என்பது மானுட இனத்துக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்துகொள் . அது அபூர்வமாகவே அளிக்கப்பட்டுள்ளது. அது பிற அனைத்தைவிடவும் மேலானது. ஆகவே அதை வீணடிக்க உனக்கு உரிமை இல்லை. அதை முழுமைப்படுத்தி அதன் உச்சம் நோக்கிக் கொண்டுசெல்ல நீ கடமைப்பட்டிருக்கிறாய். அதை அடைந்த நீ உன்னிடம் இல்லாதவற்றை சுட்டிக்காட்டி அதை வீணடிப்பது குற்றம்’ என்று எளிமையாகச் சொல்லலாம் | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/10—m4a-acqcuh |
விதிசமைப்பவனின் தினங்கள் | இலக்கியமும் நுண்ணுணர்வும் உங்களுக்கு அளிப்பது லௌகீக கௌரவம், இன்பம், நிறைவு என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. அந்த எண்ணத்தையே நான் அக்கட்டுரைகளில் கண்டித்திருந்தேன். நீங்கள் உங்கள் அறைக்குள் இருந்து வாசிப்பதும் சிந்திப்பதும் வெளியே விரிந்து கிடக்கும் மனிதகுலத்துக்காக என்பதை உணருங்கள். அந்த மக்கள் ஒருவேளை ஒன்றும் வாசிக்காதவர்களாக இருக்கலாம், ஒன்றைப்பற்றியும் கவலைப்படாதவர்களாக இருக்கலாம், வாசிப்பையும் நுண்ணுணர்வுகளையும் மதிக்காதவர்களாக இருக்கலாம் , நிந்திப்பவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களுக்காகவே வாசிக்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள். நீங்கள் சிந்தனைத்திறனுடனும் நுண்ணுணர்வுடனும் படைக்கப்பட்டிருப்பதே அவர்களுக்காகத்தான். | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/13–m4a-acqcvb |
சராசரி |
உலகம் முழுக்க எல்லாச் சிந்தனையாளர்களும் தாங்கள் வாழும் சூழலுக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறார்கள். ஆகவே அதன் பிரதிநிதியாகிய சராசரியை அவர்கள் நிராகரித்துப்பேசியிருப்பார்கள்… ஆனால் அந்தத் தன்னுணர்வால் அவன் அதிகாரத்தை நோக்கிச் செல்வானென்றால் அது அழிவை உருவாக்கும். ஒரு சமூகத்தின் அதிகாரம் அந்த சமூகத்தின் சராசரிக்குடிமகனின் கையிலேயே இருக்கவேண்டும். அந்தச்சராசரியை விட மேலானவர்களின் கையில் அல்ல.
|
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/12–m4a-acqd1f |
பதுங்குதல் |
‘பத்திரமா இருந்துக்க’ என்ற சொல்லைப்போல கேவலமான சொல் வேறு இல்லை. நான் எப்போதுமே பத்திரமாக இருந்ததில்லை. என் பையனிடமும் அதைச் சொன்னதில்லை.வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல
|
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/13–m4a-acqcvb |
பனித்துளியின் நிரந்தரம் | வாழ்க்கையின் சாரமென்ன என்ற கேள்விக்கு சாராம்சமாக மிகப்பெரிய, மிக மர்மமான, முற்றிலும் தர்க்கபூர்வமான ஒரு பதில் இருக்கமுடியும் என்ற நம்பிக்கையே மனிதனின் மாயை. தன்னை பெரிதாக எண்ணிக்கொள்ளும் அகந்தையில் இருந்து முளைப்பதல்லவா அது? மிகச்சிறு விஷயங்களில் ததும்புகிறது வாழ்க்கையின் பொருள். ஒவ்வொரு தருணத்திலும். வெற்றியில், உச்சத்தில், மையத்தில் மட்டும் அது இல்லை. எங்கும் எக்கணத்திலும் உள்ளது. | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/14—m4a-acqcvk |
நான்கு வேடங்கள் | அறம், பொருள், இன்பம், வீடு என இவை நான்குமே முக்கியமானவை. எவையுமே தவிர்க்கக்கூடியவை அல்ல. ஏனென்றால் இவை ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்றில்லாமல் பிறிதொன்று நிறைவடையமுடியாதென்பதே வாழ்க்கையின் விதிகளில் முக்கியமானது…. அகவிடுதலை என்பது மிக நுட்பமாகவும் விரிவாகவும் உணரப்படவேண்டிய ஒன்று. வாழ்க்கையின் அலைக்கழிப்புகளில் இருந்து விடுதலை பெறுவது அது. வாழ்க்கையில் இருந்து பெறும் மனவிலக்கம் மூலமே நாம் அதை அடைகிறோம். உள்ளூர மெல்ல ஒட்டாமலாகி அதை வெளியே இருந்து பார்க்க ஆரம்பிக்கிறோம். அந்தப்பார்வை நமக்கு முழுமைநோக்கைக் கொடுக்கிறது. அதையே ஞானம் என்ற சொல் குறிப்பிடுகிறது. | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/15—m4a-acqd13 |
ஒரு மரம்-மூன்று உயிர்கள் | ஆனால் அதிலேயே மூழ்கியவர்கள் இழப்பவை பெரிது. ஒரே மரம்தான். சில உயிர்கள் அதன் இலைகளை உண்கின்றன. சில உயிர்கள் கனிகளை. சில உயிர்கள் மலர்களின் தேனை மட்டும். தேனுண்ணும் உயிர் இலையுண்ணும் உயிரிடம் சுவை பற்றி என்ன பேசமுடியும்? எதை விளக்கமுடியும்? | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/16—–m4a-acqd0s |
ஆணவமும் சோம்பலும் | என்னால் ஈர்க்கப்பட்டு வரும் இளம்நண்பர்களுக்கும் இதையே சொல்வேன், நீங்கள் எவர் என உணருங்கள். அந்த ஆணவம் உங்களை நிமிரச்செய்யட்டும். சமகாலச் சிறுமைகளைக் கடந்துசெல்லமுடியும். முற்றிலும் சோம்பல் இல்லாமல் இருப்பதும் நல்ல விஷயம் அல்ல. முழுக்கமுழுக்க சுறுசுறுப்பாக இருப்பவர்கள் படைப்பூக்கம் இல்லாதவர்கள். கனவு காணாதவர்கள். சோம்பல்நிலை என்பது ஒருவகையில் நாம்நம்மை இயல்பாக நிகழவிடுவதும்கூட. சோம்பலுக்கும் வாழ்க்கையில் முக்கியமான இடம் உண்டு | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/17—m4a-acqd0t |
தன்வழிச்சேரல் | ஒரு சிலர் மட்டுமே மனம் திறந்து நானும் கூட அப்பவே உன்கூட வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். என் வாசிப்பும்,இலக்கியமும் என் எல்லா சூழலிலும் நின்று எதிர்கொள்ளும் பக்குவத்தை அளித்தது என்பதில் சந்தேகமேயில்லை. | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/18–m4a-acqd17 |
இரண்டு முகம் | இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். இதைப் பேசிப்பேசி சற்று தெளிவுகொள்ளவேண்டியிருக்கிறது. ஏதோ ஒருவகையில் இவற்றைக் கேட்கவேண்டிய இடமென என் தளம் இருக்கிறது போலும். நான் இதைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுதவேண்டியிருக்கிறது | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/19—m4a-acqd1l |
தன் வழிகள் | ஒவ்வொருவரும் தனக்குரிய தளத்தை, தன்னால் ஆற்றப்படும் பங்களிப்பை, தனிப்பட்ட நிறைவை தேடியாகவேண்டும். அதன்பொருட்டே செயல்படவேண்டும். அதுவே நிறைவு அளிக்கும் வாழ்க்கை. ஆனால் அதற்காக ஒரு சமநிலையைப் பேணவும் வேண்டியிருக்கிறது. தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/20—m4a-acqd1m |
சரியான வாழ்க்கையா | நாம் வாழ்வது சரியான வாழ்க்கையா என்று நாமே மதிப்பிடுவது மிக எளிது ஒருவருடத்தை நினைவில் ஓட்டி அந்த நாட்களில் எத்தனை நாட்களை நமக்கு நிறைவளிக்கும்படி செலவிட்டிருக்கிறோம் என்று பார்ப்பதுதான். எது நமக்கு உண்மையான நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது, அதை நோக்கி நாம் சென்றிருக்கிறோமா என்று அவதானித்தால் போதும். அந்த ஒருவருடத்தின் விரிவே மொத்த வாழ்க்கையும் | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/21—m4a-acqd21 |
நம்பிக்கையின் ஒளி | கட்டி எழுப்புதல், உருவாக்குதல். அது முழுக்கமுழுக்க நேர்நிலைச் செயபாடு. இன்று நண்பர்கள் அனைவரும் மேலும் மகிழ்ச்சியுடன், மேலும் வெற்றிகரமாக இருப்பதைக் கண்டபோது ஏற்பட்ட மனநிறைவு மிகமிகப் பெரிய பரிசு | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/22—m4a-acqd26 |
தன்மீட்சி | அவை எவரையும் எதுவும் செய்யவில்லை என்றே கொள்வோம். குறைந்தபட்சம் என்னை மாற்றியிருக்கின்றன. நான் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். திரும்பி நோக்கும்போது எழுதிய காலங்களைப்போல இனியவை வேறில்லை என உணர்கிறேன். இந்தப்பேறு உலகில் மிகச்சிலருக்கே வாய்க்கிறது. அது போதும். | https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/23–m4a-acqd2l |