Skip to content

பாஸ்கர்சக்தி, சுஜாதா, க.சீ.சிவகுமார் மற்றும் பலர்

March 10, 2009

பாஸ்கர் சக்திக்கு கலைமாமணி விருது கிடைத்தது நல்லதொரு விஷயம்.  இது தொடர்பான செல்வேந்திரனின் இடுகையில் இட்ட மறுமொழி:
______________________________________________________________________________________

நல்லதொரு செய்தி செல்வா!
கீற்று தளத்தில் பாஸ்கர் சக்தியின் சில் படைப்புகளை கண்டிருக்கிறேன். இவரது எழுத்துக்களை பள்ளிப் பருவத்தில் விகடனில் வாசித்து, பின் இவரது சிநேகத்துடனான எழுத்தைத் தேடி இரண்டு புத்தகங்களை ரசித்துப் படித்திருக்கிறேன்! இவரையும் க.சீ.சிவகுமாரையும் இரட்டை எழுத்தாளர்கள் எனச் சொல்லலாம்!(இருவரும் இந்தியா டுடேயின் சிறுகதைத் தொகுப்பின் தொட்டடுத்தப் பக்கங்களில் அறிமுகமானதாக க.சீ.சிவகுமார், ‘பழுப்பு நிறப் புகைப்பட’த்தின் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார்!)
இவரது சில படைப்புகளை (கீற்று, தீம்தரிகிட, விகடன்) pdf கோப்பாக சேமித்துள்ளேன்! நிச்சயம் இவரைப் புதிதாக வாசிப்பவர்களுக்கு உவப்பாயிருக்கும் என நம்பலாம்!
போனஸ் – சிவக்குமாரின் படைப்புகள்:

ஆதிமங்கலத்து விசேஷங்கள்
கதை கட்டுரைகள் – 1
கதை கட்டுரைகள் – 2
“காதல் ஒளிக” குறுந்தொடர்
“குமார சம்பவம்” தொடர்கதை
“நீல வானம் இல்லாத ஊரே இல்லை” விகடன்.காமில் வெளிவந்த கட்டுரைத் தொடர்

______________________________________________________________________________________

சந்திரமௌளீஸ்வரனின் இடுகையில், சுஜாதா ‘கற்றதும் பெற்றதும்’ தொடரில் பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியலை அவரது நண்பர் கார்த்திக் தனது நாட்குறிப்பில் குறிப்பெடுத்திருந்ததை ஸ்கேன் செய்து போட்டிருந்தார். அந்தப் பட்டியலின் ஒருங்குறி வடிவத்தை – எவரும் எடிட்டும் வகையில் ஒரு விக்கி பக்கமாக போட்டிருகிறேன்: http://venkatramanan.wiki.zoho.com/Sujatha-books.html

5 Comments
  1. Jaganathan permalink

    Dear Ezhil Varadhan,
    Hearty Thanks for providing Ka. See. Sivakumar’s short stories in PDF format. Though I’ve read them earlier, it’s makes me to revisit Siva anna’s irony writings when I feel resurrection. Thanks again.

  2. Dear Jagan!
    I am not Ezhilvaradhan, though I am fanatic of his writings! Yes I too like the irony in SivaKumar’s writings – ‘பாஸ்போர்ட், விசா, பணம், டாலர், தினார், நீ பேசும் செல்போன், வெளிநாட்டிலிருந்து எங்களிடம் பேச வெப் காமிரா பொதிவுடன் நீ வாங்கப் போகும் லேப்-டாப். எல்லாம் செவ்வகம், செவ்வகம், செவ்வகம். உலகம் உருண்டை. உலகத்தை ஆள்வது செவ்வகம்” என்கிறேன்.’

  3. அன்பு வெங்கட்,
    சிவக்குமாரின் எழுத்துக்கள் மட்டுமல்ல.. அவரே ஒரு நல்ல நகைச்சுவையாளர்தான்.. என்ன கொஞ்சம் வாழ்வியல் சோகம் அவ்வப்போது தலைகாட்டும். உறிச்சு உப்புக்கண்டம் போட்டுருவேன் என்ற அப்பனுக்கு அது உப்புக்கு பிடித்த கண்டமாகத்தான் இருக்கும் என விட்டேத்தியாக பதில் பேசும் வேலையற்ற இளைஞன்தான் சிவா. எந்த விஷயத்தையும் அங்கத சுவையோடு சொல்லிவிடும் வல்லமை எவரையும் சுலபத்தில் நண்பராக்கிக் கொள்ளும் இனிமை கொங்கு மண்டலத்தின் பிரத்யேக குசும்பு இவை அவரின் எல்லா எழுத்துகளிலும் காணலாம். அவரது என்றும் நன்மைகள் எனக்கு என்றும் பிடித்த சிறுகதை. இப்போது ஆனந்த விகடனில் ‘குமார சம்பவம்’ தொடர் வெளிவருகிறது. வாசித்து உங்கள் அனுபத்தை பகிருங்கள்.

    அன்பாக,
    ஜெகநாதன்

  4. அன்பின் ஜெகன்

    வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!
    நான் கற்பனை செய்தவாறேதான் இருக்கிறார் க.சீ.!
    அந்தக் குசும்பு… அது நன்றாகத் தெரிந்ததுதான். இவரின் எழுத்துக்கள் எல்லாவற்றிலும் (அது துன்பியலாயிருந்தாலும்) ஒரு மெல்லிய நகை இழைந்தோடும். நமட்டுச் சிரிப்பும் ஆச்சரியமும் கல்ந்ததொரு எள்ளல்.

    மற்றபடி உங்களிடமும் சற்றே பொறாமையாகத்தான் இருக்கிறது! சிவக்குமாருடன் உங்களுக்கு நெருக்கம் அதிகம் போல!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

  5. Jaganathan K permalink

    அன்பிற்கினிய வெங்கட்,
    நலமா?
    நிச்சயம் நலமாகத்தான் இருப்பீர்கள்.. 100 ஆண்டுகளுக்கும் மேல்.
    ஏனென்று கேளுங்கள்.. இன்று காலைதான் (7 மணி இருக்கும்)
    க.சீ. சிவக்குமாரிடம் உங்கள் எதிர்வினை கடிதம் பற்றி தொலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தேன்.
    அண்ணாரிடம் தற்சமயம் இணைய தொடர்பு இல்லாததால் நீங்கள் எழுதியிருந்ததை அப்படியே படித்துக் காட்டினேன்.
    சந்தோஷப்பட்டார். சிவா இப்போது வத்லகுண்டில் இருக்கிறார் – எவ்வளவு நாள் அங்கு இருப்பார் என்று எனக்குத் தெரியாது – அவருக்கும்.
    க.சீ. சிவக்குமாரில், க என்பது கன்னிவாடி.. நான் சிலகாலம் கன்னிவாடியில் இருந்தேன் அப்போது பழக்கம். அந்த ஊரிலேயே எழுத்தாளர் என்று அறியப்பட்ட ஜீவியாய் இருந்தார். ஒரு பேரூராட்சியில் ஒருவன் எழுத்தாளன் என அறியப்படுவது அவ்வளவு சுகமல்ல, அதன் வேதனையை அனுபவப்பட்டவர்களுக்கே தெரியும்.
    எல்லோருக்கும் ஒரே மழை என்பது போல, அனைவரிடமும் குறுகிய காலத்திலேயே நட்பாகி விடும் நல்ல நண்பர் – எனக்கு மட்டுமல்ல.. உங்களுக்கும்.. இது சிவாவின் அலைபேசி – 0 98650 56425.
    பேசுங்க.. பழகிப் பாருங்க..

    அன்பாக,
    க. ஜெகநாதன்
    0 98868 14327
    பெங்களூரு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: