Skip to content

சென்னை புத்தகக் கண்காட்சி 2009- ஜனவரி 8-18 வரை

December 25, 2008

சென்னை புத்தகக் கண்காட்சி – ஜனவரி 8-18 வரை

கண்காட்சிப் பதிவுகள்:

சென்னைப் புத்தகக் கண்காட்சி – 2009:
“சாரி சேது சொல்லுங்க.. நான் கிழக்கு ஸ்டால்ல இருக்கேன்… ஒரு நிமிஷம் இருங்க… ஏம்பா.. நான்தான் அதை அங்க வைக்க வேண்டாம்னு சொன்னேன்ல.. மத்தப் புத்தகம்லாம் எங்க..? இன்னும் வரலியா?” இப்படி ஒரு ஐந்து நிமிடம் எனக்கும் அவருக்குமிடையே ‘உரையாடல்’ தொடர்ந்தது. சரி, நேரில் பார்த்துக் கொள்வோம் என்று நினைத்து இணைப்பைத் துண்டித்தேன்.
… பத்ரியுடன் பேசிக்கொண்டிருந்தபோது குறும்பட இயக்குநர் அருண் வைத்தியநாதனும் சேர்ந்து கொண்டார். அவர் தற்போது இயக்கி முடித்த ‘அச்சமுண்டு, அச்சமுண்டு’ என்ற முழுநீளத் திரைப்படம் பற்றியும், பொதுவான தமிழ்த் திரைப்படச்சூழல் பற்றியும் நிறைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்லிக்கொண்டிருந்தார். (“ரெட் கேமரால படம் எடுத்தேன்னு சொன்னா, நெறைய பேர் கேமரா சிவப்பா இருக்குமான்னு கேக்கறாங்க!”)

சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – வாங்கிய புத்தகங்கள்:
கண்காட்சியின் மூன்றாம் நாளான 10-01-09 சனிக்கிழமை சென்னை புத்தகக் காட்சிக்குச் சென்று வந்தேன். பிரம்மாண்டமாக இருக்கும் இந்தக் கண்காட்சியில் ஒரு நாள் முழுவதும் இருந்தாலும் எல்லா அரங்குகளுக்கும் சென்று வர நேரமிருக்காது! கண்காட்சியில் வாங்கிய சில முக்கியமான/குறிப்பிடும்படியான புத்தகங்களின் விபரங்களை இங்கு தந்துள்ளேன். இவற்றுள் பெரும்பாலான புத்தகங்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே வெளிவந்தவை. (நேரமின்மை காரணமாக ஒரு சில முக்கியமான பதிப்பக அரங்குகளுக்குச் செல்ல இயலவில்லை. வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை முன்பே தயாரித்து எடுத்துச் சென்றதால் புத்தகக் கண்காட்சி்க்கென புதிதாக வெளியிடப் பெற்ற புத்தகங்களில் முழுக் கவனத்தைச் செலுத்தவில்லை).

புத்தகச் சந்தைக்குப் போனேன் – சென்னைப் புத்தகத் திருவிழா – தேவிபாரதி
முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு கூட்டம் அலைமோதியது. வழக்கமாகத் தென்படும் அதிமுக்கியஸ்தர்களில் பலரை இந்தப் புத்தகச் சந்தையில் அடிக்கடி பார்க்க முடியவில்லை என்றாலும் குடும்பத்தோடு திரண்டு வந்திருந்த வாசகர்கள் தமக்குப் பிடித்தமான புத்தகங்களைத் தேடி உற்சாகமாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். சுற்றுலாப் பொருட்காட்சி, சென்னை சங்கமம், தைத் திருநாள் கொண்டாட்டங்களைப் போல் வெகு மக்களுக்கான கொண்டாட்ட வெளியாக மாறியிருக்கிறது சென்னைப் புத்தகச் சந்தை. பல பதிப்பாளர்கள் விற்பனை மந்தம் என்று சலித்துக்கொண்டதற்கான காரணத்தை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் கவிஞர் சுகுமாரன் தானே? – சுகுமாரன்
“சார், பில்லுக்கு கார்டைத் தேய்க்கணும். உங்க பேனாவக் குடுக்கிறீங்களா? ஒரே நிமிஷம் வந்துடறேன்” என்றார். பேனாவைக் கொடுக்கத் தயக்கமாக இருந்தது. கொஞ்சம் விலை அதிகமான க்ராஸ் பேனா. மூக்கால் அழுதுகொண்டு கொடுத்தேன். அவர் வாங்கிவரப் போகும் புத்தகம் எதுவாக இருக்கும்? என்னுடைய கவிதைத் தொகுதி? கட்டுரைத் தொகுப்பு? மொழி பெயர்ப்பு?

43. எந்தவித பரபரப்புமில்லாமல் புத்தகக் கண்காட்சி நிறைவுக்கு வந்தது. – ரஜினி ராம்கி
…300 பக்க புத்தகத்தை விட பத்தாக பிரித்து 30 பக்க புத்தகமா வெளியிட்டால் சேல்ஸ் எகிறுகிறது. ஈழம், சேகுவாரா, மார்க்ஸ், மாவோ, அரவாணிகள், இந்துத்வா, பெரியார், அம்பேத்கார், பின்நவீனத்துவம், கம்யூனிஸம், நாஞ்சில், திராவிடம் வார்த்தைகள் இல்லாத புத்தகங்களோ, பதிப்பகங்களோ கிடையாது. இதையெல்லாம் தவிர்த்துவிட்டு யாராவது புரட்சி செய்வதாக இருந்தால் தேறமாட்டார்கள்.
…     வருஷா வருஷம் பெருகி வரும் சாமியார்களின் மார்க்கெட்டிங் வேலைகளுக்கு தனியிடம் ஒதுக்கலாம். புரட்சி, பகுத்தறிவு கோஷ்டிகளுக்கும் தனியிடம். இதையெல்லாம் செய்தால் அரைமணிநேரத்தில் ஷாப்பிங்கை முடித்துவிடலாம்.
…     நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானைகள் கடைசிவரை கிடைக்கவேயில்லை. சுஜாதாவின் சில நாவல்களும் கிடைக்கவில்லை. கரமுண்டார் வீட்டை தேடி ஓய்ந்து போனேன். ஆனாலும் தஞ்சை பிரகாஷ் பற்றிய புத்தகம் கிடைத்தது ஆறுதல். தீம்தரிகிடவில் பாரதியை காணவில்லை. ஞாநி வியாபார காந்தமாகிவிட்டார். ஆட்டோகிராப் எல்லாம் அள்ளிவிடுகிறார். அவ்வப்போது கிழக்கிற்கும் வந்து எட்டிப்பார்க்கிறார். ரொம்ப வருஷங்களுக்குப் பின்னர் எம்.எஸ் உதயமூர்த்தியை பார்க்க முடிந்தது. இருபது வருஷமாக அப்படியே இருக்கிறார். உயிர்மை வாசலில் சாருவும், தமிழ்ச்சி தங்க பாண்டியனும் இலக்கியம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மற்றும் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்

42. செ.பு.கா.நா.வா.பு! – முகில்

41. புத்தக விழாவில் அடியேன்- சாரு நிவேதிதா…அந்தச் சாக்கடையின் மேலே நடந்து செல்ல ஒரு பலகையும் இருந்தது. நன்கு பேலன்ஸ் செய்து அந்தப் பலகையின் மேலே நடந்து சென்றேன். அதுதான் புத்தகவிழாவின் எமர்ஜென்ஸி எக்ஸிட். அந்த வழியாகவே தினமும் போய்க் கொண்டிருக்கிறேன். இதில் இன்னொரு வசதி, நுழைவுச் சீட்டு வாங்குவதற்காக நிற்கும் க்யூவையும் தவிர்க்கலாம்.

40. விடுபட்டவை கொசுறு – உங்க நண்பர்களில் யாருக்காவது எதற்காவது வித்தியாசமான வாழ்த்து செய்தி அனுப்ப நினைத்தீர்கள் என்றால்.. http://www.sun7news.com என்ற தளத்திற்கு போய் ஒரு வாழ்த்து அனுப்புங்கள். எதிரில் இருப்பவர் அசந்துவிடுவார்கள். (நன்றி- துளசியம்மா)

39. நவீன விருட்சத்தின் பு.க. தொடர்பான 3வது பதிவு – புகைப்படங்களுடன்
பல புதியவர்களை புத்கக் காட்சியில் சந்தித்தேன். அனுஜன்யா, நிலா ரசிகன், யோசிப்பவர் என்று புதிய நண்பர்களுடன், பழைய இலக்கிய நண்பர்கள் வரை பலரையும் சந்தித்தோம். சந்தித்தோம் என்று ஏன் சொல்கிறேனென்றால் நான் மட்டும் சந்திக்க வில்லை, லதா ராமகிருஷ்ணன், ஸ்ரீனிவாஸன் என்று எல்லோரும்தான். ஆகாசம்பட்டு சேஷாசலம், இந்திரன், நாஞ்சில்நாடன், எஸ் ராமகிருஷ்ணன், காலச்சுவடு கண்ணன், சச்சிதானந்தம், திலீப் குமார் என்று பலரையும் பார்த்தோம். அசோகமித்திரனை அவருடைய புதல்வருடன் சந்தித்தேன். உரையாடல்கள் என்ற பெயரில் அவருடைய புத்தகம் ஒன்று கொண்டு வந்துள்ளேன்.
ஆழி என்ற பதிப்பகத்தின் துணிச்சல் என்னை மெய்சிலிர்க்க வைத்தது. தாண்டவராயன் கதை என்ற தலைப்பில் பா வெங்கடேசன் எழுதிய 1000 பக்க நாவல் பிரமாதமான முறையில் அச்சிடப்பட்டு வந்துள்ளது. விலை 500க்கு மேல். அதை எழுதிய பா வெங்கடேசனின் அசாத்திய துணிச்சல் படிப்பவருக்கும் வரவேண்டும். அந் நாவலின் சில பக்கங்களைப் புரட்டிப் பார்த்தேன். அசந்து விட்டேன். எப்படி FULL STOP இல்லாமல் பெரிய பெரிய பாராவாக அவரால் 1000 பக்கம் எழுத முடிந்தது என்பதுதான் என் ஆச்சரியம். இது ஒரு புறம் இருக்க ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற பவுண்ட் வால்யூம் புக் ஒன்றையும் ஆழி கொண்டு வந்துள்ளது. எழுத்தாளர்கள் தாவுதலை நான் புரிந்துகொள்கிறேன். எந்தப் படைப்பாளியையும் ஒரே பதிப்பாளருடன் இணைத்துக்கொள்ளக் கூடாது. இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. எழுத்து பத்திரிகையை நடத்திய சி சு செல்லப்பா சில படைப்பாளிகளை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்வார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

38.
புத்தகக் காட்சி 2009 – தேசிகன்
புத்தகங்களை விட அனுபவம் நமக்கு நிறைய சொல்லிக்கொடுக்கிறது. இந்த முறை புத்தகக் கண்காட்சிக்கு சென்ற போது சட்டை பையில் நூறே ரூபாயுடன் சென்றேன்!
விகடன் ஸ்டாலில் வழக்கம் போல் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் வாசன் மலரை இலவசம் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

காண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்:
விண்வெளி – கிழக்கு, ஸ்ரீதர் ஜோக்ஸ் – விகடன்
கண்காட்சியில் வாங்க வேண்டும் என்று நினைத்த புத்தகங்கள்.
நேரு முதல் நேற்றுவரை – கிழக்கு, கண்ணீரில்லாமல் – சுஜாதா, சுஜாதாவை கேளுங்கள் – குமுதம், கோபுலு – கிழக்கு

ஒரு சுவாரசியமான உரையாடல்:
விகடனுக்கு வந்த மதன் ரசிகர், “ஹாய் மதன் 2, 3, 4, 5 தான் இருக்கு; முதல் வால்யூம் எங்கே?”
“அது கிழக்கு பதிப்பகத்தில் போட்டிருக்காங்க”
”கிழக்குல நாலு புத்தகம் இருக்கு”
“அப்படியா முதல் வால்யூம் ஸ்டாக் இல்லாமல் இருக்கலாம்”
வந்தவர் சில நிமிடங்கள் யோசித்துவிட்டு லிப்கோ பதிப்பகத்துக்கு சென்று 15 ரூபாய்க்கு ஏதோ ஒரு ஸ்லோகம் புத்தகத்தை வாங்கிகொண்டு போனார்.

37. சென்னை புத்தகக் கண்காட்சியின் இறுதி நாளான நேற்று மிக நல்ல கூட்டம் இருந்தது. நல்ல விற்பனையும் இருந்தது. – ஹரன் பிரசன்னா!
கிழக்கு அரங்கில் பில் போட்டுக்கொண்டிருக்கும்போது ஞாநி வந்தார். புக் வேணுமா சார் என்றதும், ‘தினமும் உங்களைப் பார்த்தா உங்க ப்ளாக்ல என்னைப் பத்தி எழுதுவீங்கன்னு தெரியாம போயிடுச்சு. இன்னைக்கு பார்த்துட்டேன். எழுதிடுங்க’ என்றார். ‘சார், நீங்க வேற சார்’ என்றேன். ‘ரெண்டு நாள் வராம விட்டுட்டேன்’ என்றார் ஞாநி. இரவு புத்தகக் கண்காட்சி முடிந்து கிளம்பும்போது மீண்டும், ’பார்த்துட்டேன், மறந்துடாதீங்க’ என்றார். 🙂

* சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி நிச்சயம் மந்தம். கூட்டத்திலும் சரி, விற்பனையிலும் சரி, சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைவாகவே இருந்தது.
* புத்தகக் கண்காட்சி வளாகத்திற்குள்ளே உணவு அரங்கங்கள் வைப்பதை தவிர்க்கவேண்டும்.
* புத்தகக் கண்காட்சிக்கென்று ஒரு பெரிய ஈர்ப்பு இருக்கிறது. அதைத் தக்கவைத்துக்கொள்ள செய்யவேண்டிய விஷயங்களைத் தொடர்ந்து செய்யவேண்டும். திறப்புவிழாவிற்கு மக்களை ஈர்க்கும் ஒரு தலைவரை அழைப்பதில் தொடங்கி, தொடர்ந்து ஊடகங்களில் புத்தகக் கண்காட்சி பற்றி செய்திகள் வரவைப்பதுவரை பல்வேறு செயல்களைச் செய்யவேண்டும். அப்போதுதான் பத்து நாளும் மக்கள் மனதில் புத்தகக் கண்காட்சி பற்றிய நினைவு வந்துகொண்டே இருக்கும்.
* கடைசியாக ஒன்று. தொடக்க நாளில் மழை பெய்வதைத் தடுக்க பபாஸி முயலவேண்டும். 🙂

பி.கு2: ஒவ்வொரு நாளும் எதாவது எழுதவேண்டும் என்கிற தொல்லை இன்றோடு ஒழிந்தது என்பதை எண்ணும்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது! சும்மா இருப்பதே சுகம் என்றவனே உலகின் தலைசிறந்த ஞானி. 🙂

36. விரல் நுனியில் புத்தகங்கள் – சுதாங்கன்
…இந்த மன உளைச்சலுக்கு நடுவே ஒரு ஆறுதலாக வந்திருப்பது, தமிழில் ஒரு நல்ல முயற்சியாக சங்கப்பலகை இந்த தளத்திற்கு போனால், நல்ல தமிழ் புத்தகங்களை நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் வாங்கலாம். ஆனால் நீங்கள் பிரதி எடுக்க முடியாத மாதிரியான ஒரு தொழில் நுட்பம். நீங்கள் கிரெடிட் கார்டு மூலமாக வாங்கினால் மட்டுமே முழவதுமாக படிக்க முடியும். இதில் ஒரு செளகரியம் அந்த புத்தகத்தை எழதிய எழத்தாளருக்கான ராயல்டி உடனடியாக போய் சேர்ந்துவிடும். இதற்கு ஆதாரம் வேண்டுமானால், எழத்தாளர் விக்ரமனிடம் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இதை நடத்தும் எம்.ஏ.பார்த்தசாரதி, விகடனில் புகைப்பட கலைஞராக இருந்தவர்.ராஜீவ் கொலையை அந்த களேபரத்தின் நடுவே துணிச்சலாக வண்ணப்படம் எடுத்த ஒரே புகைப்படக் கலைஞர். இன்று உலகம் பூராவும் ராஜீவ் காந்தி உடலை மூப்பனாரும், ஜெயந்தி நடராஜனும் அருகில் இருந்த பார்க்கிற புகைப்படம் இவர் எடுத்ததுதான். நல்ல ரசனையுள்ளவர். வீடு வீடாக போய் எழத்தாளரை சந்தித்து தன் தளத்திற்கு புத்தகம் வாங்குகிறார்.

35. இன்று வாங்கிய புத்தக லிஸ்ட் – பத்ரி
மேலும் புத்தக்ங்கள்! – பத்ரி
தொடர்புடைய பத்ரியின் காமிக்ஸ் பற்றிய பதிவு

34. சென்னை புத்தகக் கண்காட்சி நாள்-9: மருதன்: குறிப்பிடத்தக்க மொழிபெயர்ப்புகள் பல வெளிவந்துள்ளன. இ.எம்.எஸ். (இந்தியா), ரொமிலா தாப்பர் (கட்டுரைகள்), டிடி கோசாம்பி (சில கட்டுரைகள்), தேவிபிரசாத் சட்டோபாத்யாயா (இந்திய தத்துவ இயல் ஓர் எளிய அறிமுகம் மற்றும் சில ஆராய்ச்சி கட்டுரைகள்), மார்க்கோ போலோ (பயணக் குறிப்புகள்), மாவோ (முரண்பாடுகள் பற்றி). இன்னமும் நிறைய. சரித்திரத்தின் மீது ஆர்வம் திரும்பியிருக்கிறது. குறிப்பாக, இந்திய சரித்திரம். பண்டைய இந்தியா, புராதன இந்தியா, இந்திய வரலாறு, இந்திய மக்கள் என்று பல நூல்கள்…..நண்பர் முத்துராமன் வந்திருந்தார். கிழக்கில் பணியாற்றியவர். தற்போது, தமிழக அரசியல் என்னும் பத்திரிகையில் இருக்கிறார். இலக்கிய ஆர்வலர். அலெக்ஸ் ஹெய்லியின் வேர்கள் வாங்கினார். பிறகு, கண்ணதாசன் வரிசை(அலுவலகத்துக்காக). பொடா பற்றி ஒரு நூல். அம்பேத்கர் தொகுதிகளில் சில. திராவிடர் கட்சி வரலாறு. மிர்தாவின் புத்தகம். காந்தியின் இந்துமதம்.

33. சென்னை புத்தகக் கண்காட்சி 2009: நாள் 9 & நாள் 10 – ஹரன் பிரசன்னா:
வழக்கம்போல உணவு அரங்குகளில் கூட்டத்துக்குக் குறைவில்லை. அந்த வழியில் நடக்கவே முடியவில்லை. இயற்கைப் பழங்கள் ஒரு தட்டு 15 ரூபாய். இந்தப் புத்தகக் கண்காட்சியின் சாதனை விற்பனை இதுவாகத்தான் இருக்கமுடியும். சாதனை ஏதோ ஒன்றில் வந்தால் சரிதான். நியூ ஹொரைசன் மீடியாவின் ‘நலம் வெளியீடு’ அரங்கில் நல்ல கூட்டம் இருக்கிறது. உடல்நலம் சார்ந்த எளிய தமிழ்ப் புத்தகங்களின் தேவையை இவை உணர்த்துகின்றன..
நர்மதா பதிப்பகத்தில் ‘குறுக்குத்துறை ரகசியங்கள்’ புத்தகம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு ஆசிஃப் மீரான் சிலாகித்த புத்தகம் இது. நெல்லை வட்டார மொழியில் எழுதப்பட்ட புத்தகம் என நினைக்கிறேன். இன்று நேரமிருந்தால், புரட்டிப் பார்த்து வாங்கவேண்டும். நெல்லை கண்ணன் எழுதியது. சுகுமாரன் வந்திருந்தார். சுகாவிற்கு நடந்த கதை என்ன என்று கேட்டார். சொன்னேன். இருவரும் சேர்ந்து சிரித்தோம். கவிதைப் புத்தகத்தைப் போன்ற, குறைந்த செலவிலான கையெறிகுண்டு வேறொன்று இருக்கவேமுடியாது.
பி.கு2:  இன்றும் தோழர் வந்திருந்தார். சில ஆங்கிலப் புத்தகங்களை கையில் வைத்திருந்தார். பழைய புத்தகக் கடையில் வாங்கியவையா அல்லது அங்கு விற்பதற்கா எனத் தெரியவில்லை. நானும் இன்று சில ஆங்கிலப் புத்தகங்களைக் கையில் வைத்துக்கொண்டு ‘நேரம் ஓட்டலாம்’ என்றிருக்கிறேன்.
…..
நிறைய பேர் என்னிடம் ‘தினமும் தோழர் தோழர்னு எழுதுறீங்களே, யாருங்க அந்த தோழர்’ என்றார்கள். எல்லோரிடமும் மருதன் பற்றிச் சொன்னேன்.

லக்கிலுக்கும் அதிஷாவும் வந்து, கடை போட்டிருக்கும் பதிப்பாளர்களைவிட அதிகமுறை வந்தவர்கள் என்ற சாதனையைப் படைத்தார்கள். அதிஷா சந்தனப் பொட்டு வைத்திருந்தார். லக்கிலுக் பெரியார் படம் போட்ட டீ ஷர்ட் போட்டிருந்தார்.நான் விஜய பாரதம் ஸ்டாலில் ‘மகாபாரதம்’ சொற்பொழிவு சிடி வாங்கினேன். 30 மணி நேரம் ஓடுமாம்! ஜி ஜி என்றழைத்தார்கள். ஸ்ம்ஸ்க்ருத பாரதி நடத்தும் சமிஸ்கிருத வகுப்புகள் பற்றிய தகவலைத் தந்தார்கள்.
பின்குறிப்பு: ஒருவர் அரக்கபரக்க வந்து என்னிடம் ‘ஆர்.எஸ்.எஸ். ஸ்டால் எங்க இருக்கு’ என்றார். அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை பேரையும் விட்டுவிட்டு சரியாக என்னிடம் ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ‘ஜி’க்கு விஜயபாரதம் அரங்குக்குக்கு செல்லும் வழியைக் காட்டி வைத்தேன்.

32. சாரு, தலையணை, திருமங்கலம் – யுவகிருஷ்ணா: அடுத்தாண்டு மீண்டும் ஜெமோ அட்டகாசம் ‘அசோகவனம்’ ரூபத்தில் தொடரும் எனத் தெரிகிறது. (மூவாயிரம் பக்கமாம்). இந்த நூல்கள் டூ-இன்-ஒன் பர்ப்பஸ் கொண்டவை. வாசிப்புக்கும் உதவும். வாசிப்புக்கு இடையில் தூக்கம் வந்தால் முண்டுக் கொடுத்து உறங்க தலையணையாகவும் உதவும். அட்டையில் ஸ்பாஞ்ச் வைத்து பைண்ட் செய்யும் வசதியை ஏற்படுத்தித் தர பதிப்பாளர்கள் முன்வரவேண்டும்.

சென்னை புத்தகக்காட்சி மூலமாக மீண்டும் காமிக்ஸ் புரட்சி. ஸ்டால் எண் 35, இன்ஃபோ மேப்ஸ் அரங்கில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்கள் ஐந்துரூபாய், ஆறு ரூபாய் விலைக்கு ஏராளமாக கிடைக்கிறது. ரூபாய் நூறு விலையில் பெரிய சைஸ் கவுபாய் ஸ்பெஷலும் அங்கேயே கிடைக்கிறது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பதிப்பாளர் பத்ரி, மருத்துவர் ப்ரூனோ, கவிஞர் யெஸ்.பாலபாரதி உள்ளிட்ட ஏராள பிரபலங்கள் காமிக்ஸ் புத்தகங்களை மொத்தமாக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  அவ்வரங்கில் இருக்கும் அருண் என்ற நண்பரை தொடர்பு கொண்டால் புத்தகங்களை விலை மற்றும் தரம் வாரியாக பிரித்து செட்டாக எடுத்துக் கொடுப்பார்.

சித்திரக்கதை வடிவிலான சீரிய இலக்கியம் ஒன்று இரு நூலாக விடியல் மற்றும் கீழைக்காற்றில் கிடைக்கிறது.  சிம்புதேவனின் ’கி.மு.வில்…’ முழுநீள கார்ட்டூன் தொடர் புத்தகம் நர்மதாவில் கிடைக்கிறது. நர்மதாவில் கிடைக்கும் குறிப்பிடத்தக்க இன்னொரு புத்தகம் வாத்ஸ்யாயனரின் காமசூத்திரம். ஹார்ட்பவுண்ட் அட்டையில் 400 பக்கத்துக்கும் மேலான இந்நூலில் கொக்கோக சாஸ்திரமும் இணைக்கப்பட்டிருக்கிறது.  விலை ஜஸ்ட் ருபீஸ் ஒன்ஃபிப்டி ஒன்லி.

DABBLER-Chenthil
வாங்கிய புத்தகங்கள்: மதிலுகள் -வைக்கம் முகம்மது பஷீர், அரபிக் கடலோரம்- பால் சக்காரியா, சாயாவனம்- சா.கந்தசாமி, பள்ளிகொண்டபுரம்-நீல பத்மனாபன், அந்தமான படைப்புகள், உண்மை கலந்த நாட்குறிப்புகள்-அ.முத்துலிங்கம், சுஜாதா சிறுகதைகள் தொகுதி

31. ரவி ஆதித்யா- மொத்த செலவு ரூ.2,70,010!: புத்தகக் கண்காட்சிக்கு போவதற்கு என்று சில SOP(standard operating procedure)வைத்திருக்கிறேன். இவர்களுக்காக இரண்டு நாள் விஜயம் ஏற்படுத்திக்கொண்டேன்.முதல் நாள் இவர்களோடு ஒரு நெட் பிராக்டீஸ். அடுத்த நாள் ரியல் கேம்.அந்த நெட் பிராக்டீஸ்ஸில் இவர்கள் செலவில் நான்கு புத்தகம் நைஸாகத் தேற்றி விட்டேன்.

அடுத்து பு.கண்காட்சி நடக்கும் மூன்று மாதம் முன்பே என் டைரியில் வாங்க வேண்டிய புத்தங்களைப் பற்றிய குறிப்பு எடுக்க ஆரம்பித்தல். வாங்கிய புத்தகங்களேயே வாங்காமல் இருத்தல். பெரிய நல்லி பை எடுத்துக் கொண்டு செல்லல்.முக்கியமான ஸ்டால்களின் பெயர்களைக் குறித்துக் கொள்ளுதல். எடுத்தவுடனேயே வாங்கி விடாமல் சற்று யோசித்து வாங்குதல். சப்தபதிப் போல் அடிமேல் அடி வைத்து எல்லா ஸ்டால்லயும் பார்த்து விடுவது.தூக்க முடியாத கனம் சேர்ந்தவுடன் “எஸ்யூஸ்மி” கேட்டுக்கொண்டு வெளியேப் போய் வண்டியில் வைத்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு ரெடியாதல்.  ஒரு 50 புத்தக்ங்கள் வாங்கினேன். லிஸ்ட் வேண்டாம்.

கிழக்குப் பதிப்பகம் மணிமேகலை பிரசுரம் போல்(மருதாணி இட்டுக் கொள்வது எப்படி?) ஆகி விட்டது. அடுத்து நீதான் பாஸ் No.1 Blogger போன்ற தலைப்பில் ஒரு புத்தகம் வரலாம்.

30. 32 வது புத்தகத் திருவிழா சில நினைவுக் குறிப்புகள் – நந்தா
புக் ஸ்டால்களிற்கு எந்த அடிப்படையில் நம்பர்கள் வழங்கி இருக்கிறார்கள் என்று ஆராய எடுத்துக் கொள்ளும் நேரத்தில் 4 சுடோகு பஸ்ஸில்களைத் முடித்து விடலாம் போல. …இதே இரண்டு வருடங்களுக்கு முன்பென்றால் கண்டிப்பாய் அதை வாங்கியிருப்பேன். ஒரு வேளை நான் வளர்ந்துக் கொண்டிருக்கிறேனோ? போன வருடத்தை விட இந்த வருடம் குழந்தைகளுக்கான மேப், புத்தகங்கள், CD நிரம்பிய கடைகள் அதிகரித்து விட்டாற் போலத் தோன்றியது. அந்தக் கடைகளிலும் குடும்பத்துடன் வந்திருந்தவர்களது கூட்டம் நிரம்பியது. விகடன், குமுதம், நக்கீரன், கிழக்கு பதிப்பகங்களில் எப்போதும் கூட்டம் முண்டியடித்தது. போன வருடம் குமரன் பதிப்பகத்தில் நான் வாங்கி தவற விட்டு விட்ட பாலியல் தொழிலாளியைப் பற்றிய ஆண்டாள் ப்ரியதர்ஷினியின் “மன்மத இயந்திரம்” எனும் குறுங்கவிதைத் தொகுப்பை அதே பதிப்பகத்தில் இந்த வருடம் வாங்கிய போது ரொம்ப சந்தோசமாய் இருந்தது. நான் ஃபிக்ஷன் எழுத்துக்களை ஃபிக்ஷன் எழுத்துக்கள் போல எழுதுவது சம்பவங்களின் நம்பகத்தன்மையையே கேள்விக் குறியாக்கி விடுகின்றது.

29. சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 08)-ஹரன் பிரசன்னா: கவனத்தை ஈர்த்த மேலும் சில புத்தகங்கள்: அஞ்சுவண்ணம் தெரு, கூனன் தோப்பு – தோப்பில் முகமது மீரான் – அடையாளம், மஹாகவியின் ஆறு காவியங்கள் – தொகுப்பு: எம்.ஏ. நுஃமான் – அடையாளம், இலங்கையில் சமாதானம் பேசுதல் – அடையாளம், புத்தம் அருள் அறம் – ஜி.அப்பாத்துரை – ஆழி,

28. சென்னை புத்தகக் கண்காட்சி நாள் : 8 – மருதன்: ஆழி பதிப்பகம் நம்பிக்கையளிக்கிறது. செய்நேர்த்தியுடன் சில புத்தகங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பாரதியில் ஜோதி பாசுவுக்கும் பகத் சிங்குக்கும் அதிக வரவேற்பு கிடைத்திருந்தது. Scholastic அழைத்துச்சென்று பொம்மை புத்தகங்களைக் காட்டினார் ப்ராடிஜி சுஜாதா. ரசிக்கும்படி இருந்தன. சத்யம் பிரச்னை முளைத்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது இன்னுமா புத்தகம் போடவில்லை என்று மெய்யான அக்கறையுடன் ஒருவர் கிழக்கில் வந்து கேட்டுவிட்டுப்போனதாக நண்பர் ஹரன் பிரசன்னா சொன்னார். மினி மாக்ஸில் இது சாத்தியம். பொருளாதார வீழ்ச்சி பற்றிய புத்தகம் ஒன்று வெளிவரவிருக்கிறது. இதில், மென்பொருள் துறை பற்றியும் அலசப்பட்டிருக்கிறது. பழைய கடையில் வாங்கிய புத்தகங்கள். பிர்சா முண்டா, கே.எஸ். சிங், விடியல். (நான் படிக்க விரும்பிய முக்கியமான புத்தகம். பிரிட்டனுக்கு எதிராகப் போராடிய பழங்குடி இனத்தலைவர் இந்த பிர்சா முண்டா). குர்து தேசிய இன வரலாறு, ஹாசன் அர்ஃபா, தமிழோசை. முரண்பாடு பற்றி, மாசேதுங், சரவண பாலு பதிப்பகம். தேம்பி அழாதே பாப்பா, கூகி வா தியாங்கோ, தமிழில்: எஸ்.பொ. மொத்தமாக 150 ரூபாய்.

27. கையில் சிலதான் ;ஆனால் கண்பார்த்த புத்தகங்கள் பல! – ஷைலஜா: வார்த்தை மாத இதழ்களை மாலையாகப்போட்டுக்கொண்டு காட்சி அளித்த எனி இந்தியன் .காம் கடையில் உமாமகேஸ்வரியின் அரளிவனம் வாங்கிக்கொண்டேன். …கடைசியில் தான் தெரிந்தது விஜயாபதிப்பகம் கோவையிலிருந்து புத்தகங்களை எடுத்துவரும்வாகனக்கோளாறினால் ஸ்டாலை அமைக்கவே இல்லை என்று!! விகடன் பிரசுர ஸ்டாலில் கூட்டம் அலைமோதியது மனசே ரிலாக்ஸை இன்னமும் பலர் வாங்கிக்கொண்டிருந்தார்கள். பெய்தலும்,ஓய்தலும் – வண்ணதாசன் [சந்தியா பதிப்பகம்], மரப்பாச்சி – உமா மகேஸ்வரி (மிகச்சிறந்த தொகுப்பு அதிலும் குறிப்பாக ‘மரப்பாச்சி’ சிறுகதை. அதி அற்புதமான எழுத்து), புனைவின் நிழலில் – மனோஜ் [உயிர்மை] இவைகளை தம்பிவாங்கிவிட்டதாக போனில் சொல்லிவிட்டதால் நான் மறுபடி வாங்கவில்லை. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில். . என்ற நூல் (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை) ந. முருகேச பாண்டியன் எழுதியது விலை ரூ195 என்றதால் தயங்கிவிட்டேன். கட்டைவிரல் சைஸ் காகிதடம்ளரில் காபியை பத்துரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். சூடியபூ சூடற்க சிறுகதைதொகுப்பு இவருடையதை வாங்கினேன். சமிபத்தில் எழுதிய அவரது சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். படிக்க ஆரம்பிக்கவில்லை இன்னும்.

26. சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 07)வாங்கியவை: பண்டைய வேதத் தத்துவங்களும் வேத மறுப்புப் பௌத்தமும் – நா.வானமாமலை – அலைகள், காந்தியின் உடலரசியல் – ராமாநுஜம் – கருப்புப் பிரதிகள், ஸீரோ டிகிரி – சாரு நிவேதிதா – உயிர்மை, ஊமைச் செந்நாய் – ஜெயமோகன் – உயிர்மை, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் – சாரு நிவேதிதா – உயிர்மை, உள்ளேயிருந்து சில குரல்கள் – கோபிகிருஷ்ணன் – வம்சி, எனது இந்தியா – ஜிம் கார்பெட் – காலச்சுவடு, பள்ளிகொண்டபுரம் – நீல பத்மநாபன் – காலச்சுவடு, வெயில் நண்பன் பிரார்த்தனை ஒரு பிரதேசம் – திருச்செந்தாழை – காலச்சுவடு
குறித்து வைத்துக்கொண்டவை: உறவுகள் – எஸ். பொ. – மித்ர வெளியீடு, உலகை உலுக்கிய திரைப்படங்கள். – போதி வெளியீடு, மும்பை 26/11 – வினவு – பதிப்பகம் நினைவில்லை, மூன்றாம் பாலின் முகம் – பிரியா பாபு – சந்தியா, ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள் – சந்தியா, உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம் – உயிர்மை, அங்கிள் சாமுக்கு மண்டோ கடிதங்கள் – பயணி வெளியீடு, சாதத் ஹஸன் மண்டோ படைப்புகள் – புலம் வெளியீடு, சிறுவர் சினிமா பாகம் 2 – விஸ்வாமித்ரா – வம்சி வெளியீடு, தவளைகள் குதிக்கும் வயிறு – வா.மு. கோமு – உயிரெழுத்து

25. Dr.புருனோவின் ட்வீட்ஸ்!
ஒருquiz: லினக்ஸ் அபிமானி ஒருவர் ஒரு கூட்டத்தில் “bugs இல்லாத ஒரு விண்டோஸ் மென்பொருள் கூட கிடையாது” என்றார். நான் ஒரு மென்பொருள் கூறினேன். அதற்கு அவர் “அது ஒன்றுக்குத்தான் விண்டோஸ் லாயக்கு” என்று கூற பயங்கர சிரிப்பு. என்ன மென்பொருள் அது.
கடந்த இரு வருடங்களை விட கூட்டம் குறைவு. நான் வழக்கமாக வாங்கும் நக்கீரன், குமுதம், விகடன் பதிப்பகங்களில் புதிதாக எதுவும் தென்படவில்லை.
ரிசர்வ வங்கி ஒரு கடை வைத்திருக்கிறார்கள். நாணயங்கள், ரூபாய் குறித்து 4 சிறு வண்ண புத்தகங்கள். நான்கும் 15 ரூபாய் தான். தவற விடாதீர்கள்.
கிழக்கில் நின்றவனை தள்ளாத குறையாக நலம் கடைக்கு அனுப்பிவிட்டார்கள். 🙂 🙂 🙂 கீழைக்காற்றில் சில புத்தகங்கள்..
அது தவிர வாங்கியவை காந்தளூர் வசந்தகுமாரன் கதை (ம.செ.ஓவியங்களையும் சேர்த்திருக்கலாம்) மதுமிதா சொன்ன பாம்பு கதைகள், கிழக்கில் 3 புத்தகங்கள்.
இன்று சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கியவை, கடலை, சுண்டல், புருட் சாலட், டார்ச் லைட், மற்றும் சில புத்தகங்கள்.
முக்கிய விஷயம். கடை எண் 35ல் காமிக்ஸ் புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள். 200 ரூபாய்க்கு 30 காமிக்ஸ் (லயன், முத்து போன்றவை) காமிக்ஸ் பிரியர்கள் உடனடியாக செல்ல.

24. சென்னை புத்தகக் கண்காட்சி நாள்:6 – மருதன் நடைபாதையில் கீழ்கண்ட நூல்களை அள்ளினேன். மொத்தமாக, ரூ.550.
எதிர்ப்பும் எழுத்தும்-துணைத்தளபதி மார்க்கோஸ்-விடியல், பெரியார்:ஆகஸ்ட் 15-எஸ்.வி. ராஜதுரை-விடியல், பெரியார் மரபும் திரிபும்-எஸ்.வி. ராஜதுரை-தமிழ் முழக்கம்-இந்திய வரலாற்றில் பகவத் கீதை-பிரேம்நாத் பசாஸ்-விடியல்-சூலூர் பதிப்பகம், பண்பாட்டு மானிடவியல்-பக்தவத்சல பாரதி-வல்லினம், கிறித்தவமும் சாதியும்-ஆ. சிவசுப்பிரமணியன்-காலச்சுவடு.
பயன்படுத்தப்பட்ட நூல் ஒன்றையும் வாங்கினேன். நீரத் சவுத்திரி எழுதியது. Scholar Extraordinary. The Life of Friedrich Max Muller.

23. Books I bought – Badri
Dilbert and the way of the weasel, Scott Adams, The wonder that was India, A L Basham

22. சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 06)
இன்ஃபோ மேப்ஸ் கடையில் நிறைய காமிக்ஸ் புத்தகங்களை பத்ரி வாங்கினார். நானும் அதில் சில புத்தகங்களை வாங்க நினைத்திருக்கிறேன். ’உன்னதம்’ மாத இதழாக வெளி வந்திருக்கிறது. கௌதம சித்தார்த்தன் எனக்கு ஓர் இதழைக் கொடுத்தார். திருச்செந்தாழையின் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ‘பள்ளிகொண்டபுரம்’ புத்தகத்தை கிளாசிக் வரிசையிலும் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
தமிழினி அரங்கில் ‘காவல் கோட்டம்’ புத்தகத்தை வாங்கி எனக்கு என் நண்பர் (ரசிகர்?) ஒருவர் பரிசளித்தார்.

21. 2009 – புத்தகக் கணக்கு – லிவிங் ஸ்மைல் வித்யா
மிஷ்கின் பரிந்துரைத்த புத்தகங்கள் தனிப்பட்ட முறையிலும், சினிமா ஆர்வமுள்ள இளையவர்களுக்கும் உதவுமென்றே கருதுகிறேன்:
1. SIDDARTHA – Herman Hesse
2. DOLL HOUSE – Ibson
3. THE SOUND OF WAVES – Yukio Mishima, Vintage books USA (ISBN:9780 6797 52684)
4. பஞ்சதந்திரக் கதைகள் (தமிழில்)
5. வடக்கன் வீர கதா Script (தமிழில்) – சுரா, காவ்யா பதிப்பகம்
6. GRIMM’S FAIRY TALE – Jacob Ludwig Carl Grimm, Pantheon Books (ISBN:9780 3947 09307) (Rose But, The Queen Bee, The Frog Prince போன்ற குறிப்பிட்ட சில கதைகள் மட்டும்)
7. ON DIRECTING FILM – David Mamet, Penguin, (ISBN:9780 1401 27226)
8. CRONICALS OF DEATH FORETOLD – Gabrial Garcia Marquez
9. OUTSIDER – Albert Camus, Penguin, (ISBN:9780 1411 82506, 9780 1402 74172)
10. LONE WOLF AND CUB, VOL(1) – Kazuo Koike
11. METAMORPHOSIS – Franz Kafka, Penguin, (ISBN:9780 1431 05244, 9780 1402 83365)
இப்புத்தக கண்காட்சியில் முதல் புத்தகமாக, குமரன் தாஸ் எழுதிய கட்டுரைத் தொகுப்பான “தமிழ்த் திரையின் நிழல் அரசியலும், நிஜ அரசியலும்” வாங்கினேன். சந்தியா பதிப்பகம் வெளியுட்ட திருநங்கை ப்ரியா பாவுவின், “மூன்றாம் பாலின முகம்” என்ற நாவலை எனது ஆவணக் காப்பகத்திற்காக வாங்கிக் கொண்டேன். எனது அபிமான எழுத்தாளர் ஆதவண் தீட்சண்யாவின் “எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப் பக்கங்கள்” நூலையும்.

20. தேர்தல் அரசியல்! – ஆர். முத்துக்குமார்: முக்கியமாக தேர்தல் அரசியல் : காமராஜ் முதல் கருணாநிதி வரை என்ற புத்தகம் கண்ணில்பட்டது. 1952 தேர்தல் தொடங்கி 1999 நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார் ஆசிரியர் தி. சிகாமணி. முதல் நாற்பது பக்கங்களை பேருந்தில் அமர்ந்தபடியே படித்தேன். என் பார்வையில் இது மிக முக்கியமான புத்தகம். இன்னும் நிறைய தேடவேண்டும்.

19. 23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும்
நான் அங்கு வந்துகொண்டிருக்கும்போது அட்டைப்பெட்டிகளைக் கொண்டு போகும் ஒருவரை விலை கேட்டேன். எல்லாம் பிராந்தி பாட்டில் வைக்கும் அட்டைப் பெட்டிகள். 100 ரூபாய்க்கு எனக்கு 20 அட்டைப் பெட்டிகள் கிடைத்தன. எனக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. ஒவ்வொரு அட்டைப் பெட்டியாய் எடுத்து புத்தகங்களை அடுக்கி ப்ரவுன் டேப் வைத்து ஒட்டினேன். 14 பெட்டிகள் தேறின. எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த ஆட்டோவில் வைத்துப் புத்தகக் காட்சிக்குக் கிளம்பினேன்.
நான் அங்கு வந்துகொண்டிருக்கும்போது அட்டைப்பெட்டிகளைக் கொண்டு போகும் ஒருவரை விலை கேட்டேன். எல்லாம் பிராந்தி பாட்டில் வைக்கும் அட்டைப் பெட்டிகள். 100 ரூபாய்க்கு எனக்கு 20 அட்டைப் பெட்டிகள் கிடைத்தன. எனக்கு தாங்க முடியாத மகிழ்ச்சி. ஒவ்வொரு அட்டைப் பெட்டியாய் எடுத்து புத்தகங்களை அடுக்கி ப்ரவுன் டேப் வைத்து ஒட்டினேன். 14 பெட்டிகள் தேறின. எல்லாவற்றையும் எனக்குத் தெரிந்த ஆட்டோவில் வைத்துப் புத்தகக் காட்சிக்குக் கிளம்பினேன். 147 உடனே சொல்ல வரவில்லை என்பதால் 147 147 147 147 147 என்று மனப்பாடம் செய்வதைப் போல் சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே வந்தேன். நண்பர்கள் சிரித்தார்கள்.

18. 23வது புத்தகக் காட்சியும், நவீன விருட்சம் கடையும் 2
இந்த ஆண்டு 9ஆம் தேதி புத்தகக் காட்சிசாலையில் என் ஸ்டாலுக்கு வந்திருந்தார் வெளி ரங்கராஜன். அவர் என்னுடைய பல ஆண்டு நண்பர். நாங்கள் இருவரும் சண்டைப் போட்டுக்கொண்டாலும் நட்புடன் இருப்போம். இந்த முறை அவரைப் பார்த்தபோது, மனிதரை நோக அடிக்கும்படி ஒரு கேள்வி கேட்டேன். இந்த ஆண்டு விளக்குப் பரிசு வைதீஸ்வரனுக்குக் கொடுத்துள்ளீர்கள்…. ஏன் அவருடைய பாராட்டுக்கூட்டத்தை எந்த விளம்பரமும் இல்லாமல் நடத்தினீர்கள் என்றேன்.
…முதலில் ஆரம்பித்த ரங்கராஜன் தயங்கி தயங்கிப் பேச ஆரம்பித்ததாக தோன்றியது. தேனுகா ஒரு கட்டுரை வாசித்தார். அக்கட்டுரையை சீக்கிரம் முடிக்கும்படி கேட்டுக்கொண்டார் ரங்கராஜன். ஞானக்கூத்தன் நகைச்சுவை உணர்வுடன் பேசினார். கூட்டம் முடிந்தது. போட்டோகாரர்கள் போட்டோ எடுத்தார்கள். லதா ராமகிஷ்ணன், திலீப்குமார் என்றெல்லாம் பேசினார்கள்.

17. சென்னை புத்தகக் கண்காட்சி நாள் :5 – நடைபாதைக் கடைகள்: மருதன்
ஐந்து புத்தகங்கள் எடுத்தேன். மகாத்மா புலே தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் (பல்கலைப் பதிப்பகம்), தத்துவம் என்னும் ஆயுதம், அமில்கர் கப்ரால் (விடியல்), ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், ஆனந்த் டெல்டும்ப்டெ, தமிழில்: எஸ்.வி. ராஜதுரை (விடியல்-புத்தா), வால்ட்டர் பெஞ்சமின்: நிலைமறுக்கும் வாழ்வு, மாம்மே ப்ராடர்சன் (விடியல்), ஆணாதிக்கமும் பெண்ணியமும், பி. இரயாகரன் (கீழைக்காற்று). மொத்தமாக 240 என்றார்….இந்திய புத்தகக்கடைகளில் விற்கப்பட்ட ஹாரி பாட்டர்களைவிட நடைபாதைகளில் விற்கப்பட்டவை அதிகம் என்று நம்புகிறேன்
…. புதிய போராளி என்னும் இதழ் கீழைக்காற்றில் கிடைத்தது. மார்க்சிய லெனினிய மாவோவிய அரசியல் ஏடு. நேபாளம், தமிழ் ஈழம், வெனிசுவேலா என்று அட்டையில் எழுதப்பட்டிருந்தது. ஓமனூர் வட்டம், சேலம் மாவட்டத்தில் அச்சிடப்பட்டு வெளிவருகிறது. நக்ஸல்பாரிகளின் அரசியல் பிரசார இதழ். தொடர்ந்து கிடைத்தால் தொடர்ந்து வாங்குவேன்.

16.சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுவந்தேன்…முனைவர் மு.இளங்கோவன் – புகைப்படங்களுடன் கூடிய பதிவு

15. ஈழத்து இலக்கியம்- விருபா (ஒரு விரிவான ஆய்வு)

14. …நான் வாங்க நினைத்த புத்தகம் எந்த கடையில் கிடைக்கும் என்று தெரியவில்லை. தேடிக் களைத்தேன். இந்த நூல் இந்த இந்த கடைகளில் கிடைக்கும் என்று ஒரு அச்சடித்த பட்டியல் அல்லது ஒரு தொடுதிரைக் கணினி / உதவி மையம். பதிப்பகங்கள், புத்தகக் கண்காட்சி அமைப்பாளர்களுக்கு சில ஆலோசனைகள்: ரவிசங்கர்

13. சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 05) – ஹரன் பிரசன்னா
இன்று முதல் வரும் எல்லா நாள்களும் முழு வேலை நாள் என்ற அறிவிப்பை வெளியிட்டது பபாஸி. சன் பண்பலையில் விளம்பரங்களைக் கேட்டேன். அது போதும் என்று நினைத்துவிட்டார்கள் போல. கிழக்கு அரங்கில் மாயவலை புத்தகம் விற்பனைக்கு வெளிவந்தது. பாரா இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது அது கை நழுவிக் காலில் விழுந்துதான் அவருக்கு அடிபட்டது என்கிற செய்தியெல்லாம் இப்போது வெளியே கசியத் தொடங்கியிருக்கிறது.

இன்று முதல் வரும் ஆறு நாள்களும் ஆகும் விற்பனையைப் பொருத்தே ஓர் அரங்கின் ஒட்டுமொத்த விற்பனை வெற்றியா தோல்வியா என்பது தெரியும். ஆறு நாள்களில் நான்கு நாள்களாவது நல்ல கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம். இயக்குநர் சுகா வந்திருந்தார். சுகுமாரனைத் தேடி கவிதையைக் கண்டடைந்தார். அந்தக் கொடுமையை அவரே எழுதுவார். கவிஞர்களிடமிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். உங்களால் மறுக்கமுடியாத வகையில், லட்டு என்று சொல்லி, எப்போது வேண்டுமானாலும் ‘வெடிகுண்டு’ ஒன்றைக் கையில் திணிப்பார்கள்.

12. சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 04) – ஹரன் பிரசன்னா
எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஞாயிற்றுக் கிழமை வந்தது. எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் வந்ததா என்றுதான் தெரியவில்லை. லக்கிலுக்கும் உண்மைத் தமிழனும் ஒன்றாக வந்து பீதியைக் கிளப்பினார்கள். கிழக்கு பதிப்பகத்தின் அடுத்த புத்தக விமர்சனத்தை, அப்புத்தகத்தின் பக்கங்களைவிட அதிகமாக எழுத முடிவு செய்திருப்பதாக உண்மைத் தமிழன் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். உடல் ஊனமுற்ற ஒருவர், கிழக்கு என்ன என்ன செய்யவேண்டும் என ஏகப்பட்ட டிப்ஸ்களை அள்ளி வழங்கிக்கொண்டிருந்தார்.
…அந்த ஸ்டால் ஒரு பிரைம் ஸ்டால். ஒரு புத்தகம் கூட அங்கே கிடையாது. இரண்டு சுவர்களிலும் பெரிய பெரிய பேனர்கள். முதல் நாள் பேனர்களும் அங்கே இல்லை. சரி, மெல்ல வருவார்கள் என்று நினைத்தேன். மெல்ல மெல்ல கூட வரவில்லை. பிரைம் ஸ்டால்களெல்லாம் புத்தகங்களை அடுக்கும் வழி தெரியாமல், முழி பிதுங்கிக்கொண்டிருக்க, இவர்கள் மட்டும் புண்ணியம் தேடி இங்கே வந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன். கிழக்கு அரங்கிலிருந்து வெளியே செல்வதற்கு, அந்த அரங்கைக் குறுக்குப் பாதையாகப் பயன்படுத்திக்கொண்டால், கொஞ்சம் நடை மிச்சமாகிறது. அந்தப் புண்ணியம் நிச்சயம் அவர்களுக்கு உண்டு.

11. அ-புனைகதை யுகம் ஆரம்பிக்கிறதோ? – மாலன் … என்றாலும் இந்தப் புத்தகச் சந்தையில் எனக்கு வெளிப்படையாகத் தெரிந்த ஒரு விஷயம்: தமிழ் வாசக ரசனை அ-புனைகதைகள் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறது. புனைகதைகள் அதிகம் வெளியிடும், தமிழினி, அன்னம் போன்ற அரங்குகளில் அதிக வாசகர்களைக் காணவில்லை. அம்பானியிலிருந்து கிலானி வரை நூல்கள் வெளியிட்டுள்ள கிழக்கில் நிற்க இடமில்லை. அநேகமாக வெகுஜன இதழ்கள், trendஐத் தீர்மானிக்கின்றன என எனக்கு ஒரு சந்தேகம். … ஆனால் இந்தச் சிறு வெளியீட்டார்களின் நூல்களை இங்கு விட்டுவிட்டால் பின் தேடிக் காண்பது அரிது. எனவே அவர்களுக்குத்தான் எனது முன்னுரிமை. காந்தளகம், பரிசல், திராவிடன், மித்ர, காலச்சுவடு, பயனியர் ஆகிய அரங்குகளில் சில நூல்கள் வாங்கினேன்.உயிர்மை,கீழைக்காற்று, தமிழ்ப் பல்கலைக் கழகம், சந்தியா, அம்ருதா ஆகியவற்றை அடுத்த வருகையின் போது பார்க்க உத்தேசம். … நெடுநாளாக எனக்குள் ஓர் கனவு உண்டு. அதை ப்ராடிஜி முயற்சி செய்து பார்க்கலாம். பெரும்பாலும் குழந்தைப் புத்தகங்கள் பெரியவர்களின் குழந்தைத்தனமாக இருக்கும் அல்லது பெரியவர்கள் தீட்ட விரும்பும் நல்லுலகாக இருக்கும். ஆனால் குழந்தைகளின் உலகம், சிந்தனை வேறு. சிறு குழந்தையாக இருந்த போது என் சகோதரி மகள் என்னிடம் கேட்டது: குதித்துக் குதித்துப் பார்த்தும் திராட்சைப் பழம் எட்டவில்லை என்றால் ஏன் நரி ஒரு ஏணியைக் கொண்டு அதை எட்ட முயற்சிக்கவில்லை? கார் ஓட்டும் பூனைகளை டிஸ்னி உலகில் சந்தித்த குழந்தைக்கு ஏணியில் நரி ஏறுவது பெரிய காரியமாகத் தோன்றவில்லை. அழ.வள்ளியப்பாவிடம் குழந்தையாக இருந்த போது என் மகன் கேட்ட கேள்வி : படரக் கொம்பில்லை என்றால் ஒரு கம்பை எடுத்து நட்டிருக்கலாமே? பாரி ஏன் ஒரு தேரை விட்டுச் செல்ல வேண்டும்? குழந்தைகளின் லாஜிக் நம்முடைய லாஜிக்கிலிருந்து வேறுபட்டது. எனவே ஏன் குழந்தைகளே குழந்தைகளுக்குப் புத்தகம் ‘எழுத’ கூடாது? அவர்களுக்கு எழுத வருமா என்பது கேள்வியே இல்லை. அவர்கள் சொல்லட்டும், NHM ஆசிரியர்களில் யாரேனும் எழுதட்டும். வாசலில் இருந்த மேடையில் உரையாற்ற வைரமுத்து வந்திருந்தார். (வடுகப்பட்டி) வராக நதியில் வந்துதித்த முத்தே என யாரோ வரவேற்புக் கவிதை வாசிப்பது காதில் விழுந்தது. நதிகளில் முத்துக் குளிக்க முற்படும் தமிழர்களின் விஞ்ஞானத்தை வியந்து கொண்டே வெளியேறினேன்.

10. புத்தக கண்காட்சியில் சில மணி நேரம். – எஸ்.ராமக்கிருஷ்ணன்
ஒரே ஆறுதல் புத்தகக் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் பெரும்பான்மையினர் இந்தக் கவர்ச்சிகளில் ஏமாறுவதில்லை. தாங்கள் என்ன புத்தகம் வாங்க வேண்டும் என்பதை ஒரளவு முடிவு செய்து கொண்டு தான் வருகிறார்கள். நண்பர்கள், தெரிந்தவர்கள் சிபாரிசு செய்யும் புத்தகங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறார்கள். சிலர் குறிப்பிட்ட கடைகளைத் தவிர வேறு கடைகளை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. மிகைப்படுத்தட்ட விளம்பர யுத்திகளால் கவர நினைக்கும் புத்தகங்களை வெளிப்படையாக கேலி செய்கிறார்கள். … பத்து நாளைக்கும் சேர்ந்து ஐம்பது ரூபாய்க்கு ஒரு டிக்கெட் போன்றோ, பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று இரண்டு நான்கு டிக்கெட்டுகளாகவே கொடுக்கும் பழக்கம் ஏற்பட்டால் தேவையான நாளில் பயன்படுத்தி கொள்ளலாம்…. சபாரி சூட் அணிந்த ஒருவர் எல்லா கடைகளிலும் கவனமாக கேட்லாக் வாங்கி சேகரித்து கொண்டு தன்வேலை முடிந்துவிட்டது என்று புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேறி போய் கொண்டிருந்தார். … இரும்பு கை மாயாவி, வேதாளம் போன்ற பழைய தமிழ் காமிக்ஸ் புத்தகம் கிடைக்கிறதா என்று ஒரு கூட்டமே அலைந்து கொண்டிருக்கிறது போலும் இரண்டு மூன்று கடைகளில் எங்கே கிடைக்கும் என்று என்னிடம் விசாரித்து கொண்டிருந்தார்கள், முடிவில் ரிதம் புக்ஸ் என்ற கடையில் தேடி நாற்பத்திரெண்டு பழைய காமிக்ஸ் புத்தகங்களை வாங்கினேன்…. சாமியார் ஜ�விற்கு போகிறார் கதை ஏதாவது தொகுப்பில் இருக்கிறதா என்று ஆர்வமாக கேட்டார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டேன். ஐஐடியில் பொறியியலில் உயர் ஆய்வு செய்வதாக சொல்லிவிட்டு தனக்கு சம்பத், நகுலன்,பா.சிங்காரம், ஜீ, நாகராஜன், போன்றவர்களை பிடிக்கும் என்றபடியே இரண்டு வருசமாகவே தமிழ் இலக்கியங்களை தேடி படிப்பதாகவும் அது தனக்குள் புதிய மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது என்று புன்னகைத்தபடியே விடைபெற்று சென்றார். இவரை போன்ற ஒரு புதிய தலைமுறை இன்று உருவாகியிருக்கிறது. அவர்கள் மரபான இலக்கிய வாசகர்கள் அல்ல. சிறுபத்திரிக்கைகளை தேடி வாங்கி வாசிப்பவர்களும் அல்ல. ஆனால் தனக்கு விருப்பமான, தனித்துவமான புத்தகங்களை தேடி வாங்குகிறார்கள். படிக்கிறார்கள். நெருங்கிய வட்டத்திற்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். சிலவேளைகளில் அதை தங்களது துறையில் வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். ஏதோவொரு விதத்தில் ஒரு நம்பிக்கையை, ஒரு அகப்பார்வையை, வாழ்வு அனுபவம் நேரடியாக தர தவறிய, தர இயலாத ஒன்றை படைப்பின் வழியாக தர முயற்சிக்கும் செயல்பாடு. சொற்களின் வழியே நினைவை, அறியாத புனைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு ரகசிய பரிவர்த்தனை. உண்மையில் வாசகன் என்பவன் யார் என்று யாரும் முடிவு செய்து விட முடியாது. அது ஒரு கற்பனை. ஒவ்வொரு எழுத்தாளனும் யாரோ ஒருவருக்கு வாசகன். ஒவ்வொரு வாசகனும் மனதளவில் ஒரு எழுத்தாளன். அவன் இன்றோ நாளையோ எழுத்தாளன் ஆக கூடும். அல்லது ஆக முடியும். அல்லது விரும்பி நிராகரிக்க கூடும். ….இன்று நான் சந்தித்தவர்களும் அத்தகைய அகவிழிப்பு கொண்டவர்களே.

நான் வாங்கிய புத்தகங்கள்.

1. இப்சன் இருநாடகங்கள். தமிழில் கா. திரவியம்.
2. தென்னிந்திய கோவில்கள். கே. ஆர். சீனிவாசன்
3. உண்மை கலந்த நாட்குறிப்புகள் . அ. முத்துலிங்கம் புதிய நாவல்.
4. குணவாகடம் . பதிப்பாசிரியர். வே. நெடுஞ்செழியன்
5. ஸ்வப்ன வாசவதத்தம். பாஸன் . தமிழில் ஹரிஹரி சாஸ்திரியார்
6. தமிழகத்தில் ஆசீவகர்கள். டாக்டர். ர. விஜயலட்சுமி
7. மாளவிகா க்னிமித்ரம். காளிதாஸர் . தமிழில் தேசிகன்
8. ஜப்பானிய காதல்பாடல்கள்
9. கீழைத் தேய கதைகள் .மார்க்ரெட் யூரிசனார். தமிழில் வெ.ஸ்ரீராம்.

1. Hot days Long Nights African Short Stories. Edt. Nadezda obradovic
2. Chitralakshana . Mulk Raj Anand.
3. Art of the western World. .Edt. Michael Wood.

9. சென்னை புத்தகக் கண்காட்சி:2009 (நாள் 3) – ஹரன் பிரசன்னா: அம்பேத்கரின் அனைத்து எழுத்துகளின் ஒட்டுமொத்த தொகுப்பு (37 பாகங்கள்) நல்ல சலுகை விலையில் கிடைக்கிறது. மொத்தமாக 1500 ரூபாய் மட்டுமே. இதை வாங்க விரும்புகிறவர்களுக்கு இதைவிட நல்ல சந்தர்ப்பம் வாய்க்காது. நிச்சயம் வாங்கவேண்டிய விஷயம் இது. காலச்சுவடு ஸ்டாலில் விளம்பரத்திற்கென்று ஒரு மானிட்டர் வைத்திருக்கிறார்கள். காலச்சுவடு 100 கருத்தரங்கில் ஒளிபரப்பபட்ட அதே விளம்பரங்கள்தான். மிக நன்றாக இருக்கிறது. தமிழினியில் காவல்கோட்டம் புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனந்தவிகடனில் இந்த வருடத்தின் சிறந்த நாவலாக இதை அறிவித்திருக்கிறார்கள். புத்தகம் வெளிவந்த 10 நாள்களுக்குள் இவ்வளவு பெரிய நாவலைப் படித்து, அதை வருடத்தின் சிறந்த நாவலாக அறிவித்த அந்த ‘உலகின் வேகமான வாசகரை’த் தேடிக்கொண்டிருக்கிறேன். யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும். கண்காட்சிக்கு வரும் வாசகர்களை ஐந்து நுழைவாயில் வழியாகவும் அனுப்புவதால், ஒரு வரிசையில் திடீரென்று கூட்டம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது.

8. சந்திரமௌளீஸ்வரன்: நண்பர் கார்த்தி ஏறக்குறைய எல்லா ஸ்டால்களிலும் ஒரு புத்தகம் வீதம் வாங்க வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டே அரங்கத்தினுள் பிரவேசம் செய்தார். I am not a man of one book or of a few select books. That is to say, there are no favourite books to which I recur again and again for inspiration or pleasure என்று சில்வர் டங் ஸ்ரீநிவாச சாஸ்திரியார் சொன்னதை அட்சரம் பிசகாமல் கடைபிடித்தார். ….அத்தனையும் படித்துவிட்டு மறு நாள் கூகிள் டாக்கில் , “ அண்ணா இந்த பொஸ்தகத்தில் அவர் ஏன் அப்படி சொன்னார்” என்று கேள்வி எழுப்புவார். அதற்கு பதில் சொல்ல எனக்கு அந்த பொஸ்தகம் படிக்க வேணும். கார்த்திக்கு முதல் முறையாக புத்தகம் சிபாரிசு செய்யும் வாய்ப்பு கிடைத்தை சந்தோஷத்தில் கலைஞரின் பொன்னர் சங்கர், அண்ணாவின் கம்பரசம் என ஒரு லிஸ்ட் தந்தேன். ஒரு நிமிஷத்தில் லட்சத்தில் ஒரு பங்கு நேரம் கூட யோசிக்காமல் வாங்கி விட்டார். இனிமேல் சாட்டில், “ தமிழரின் பெருமைகளை பறை கூறும் இது போன்ற காவியங்கள் வேறேதும் உளவா” என்று டைப் செய்வார் என எதிர்பார்க்கலாம். … வைரமுத்து, முத்தமிழ் அறிஞர், தமிழ், தமிழன், தமிழனே என்ற சில வார்த்தைகளை வைத்தே சுமார் 40 நிமிஷம் மூச்சு விடாமல் பேசினார். அகில இந்தியாவில் எங்கேயும் இந்த மாதிரி புத்தகக் காட்சிகள் நடப்பதில்லை ஆகவே தமிழன் பெருமைப்பட வேண்டும் என்று தனது Ignorance ஐ முழங்கி காமெடி செய்தார்.

வீட்டுக்கு வந்து சமத்தாய் உப்புமா சாப்பிட்டுவிட்டு வாங்கி வந்த பொஸ்தகங்களை வண்டி பாக்ஸில் இருந்து எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்து பெருமையுடன் மனைவியிடம் கணக்கு ஒப்பித்தேன். ” எதுக்கு இப்படி பொஸ்தகமா வாங்கி அடுக்கறேள் என்பதற்கு எல்லாம் ஒரு Knowledge Improvement க்குத் தான் என்று மழுப்பினாலும் ஜெயமோகனின் ரப்பர் நாவலின் முன்னுரையில் சொன்ன , “அந்தரங்கமாய், எவ்வளவு முடியுமோ அவ்வளவு வலிமையுடன் இருக்க விழையும் என் அகங்காரம் தான் என அறிகிறேன்” என்ற வாசகம் தான் பொறுத்தமாக இருக்கும் என்று என் மனசாட்சி சொல்கிறது

7. சென்னை புத்தகக் கண்காட்சி – நாள் 3 – மருதன்
… கர்த்தர் நினைவுக்கு வந்தார். இதோ, கர்த்தர், இங்கே வந்துவிட்டார். அதோ அந்த வளைவில் முந்திவிட்டார். இதோ, இதோ. வந்துகொண்டேஇருக்கிறார். வந்தேவிட்டார். நான் நிஜமாகவே திரும்பி பார்த்திருக்கிறேன். கர்த்தருக்குப் பதிலாக வைரமுத்து அழைத்தது வல்லரசை. …”இந்தியா எப்பொழுது உருப்படும் தெரியுமா? புத்தகங்களைப் பற்றி பேசும்போதுதான். கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் என்ன என்று கேளுங்கள். இங்குள்ள ஒவ்வொருவரும் புத்தகத்தின் உயிர் விளம்பரமாக மாறுங்கள்.” …

நான் வாங்கிய புத்தகங்கள்: ராகுல் சாங்கிருத்யாயனின் ஐரோப்பியத் தத்துவ இயல். ஜென்னி மார்க்ஸ் எழுதிய எங்கள் ஒருநாள் குடும்ப வாழ்க்கை. கம்யூனிஸ்ட் அறிக்கையின் கதை. ஸன் யாட் ஸென் வாழ்க்கை வரலாறு (வெ. சாமிநாத சர்மா). சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து இரு நூல்கள். Being and Unity in Western Philosophy by Herbert Herring. Political Justice, Legislative Reservation for Scheduled Castes and Social Change. (அம்பேத்கர் நினைவு உரைகள்). நைந்துபோன பல புத்தகங்களை மூட்டைகட்டி அடியில் போட்டுவைத்திருக்கிறார்கள். தொன்மம், மானுடவியல், அகழ்வாராய்ச்சி என்று நிறைய கண்ணில் பட்டன. மீண்டும் ஒரு முறை தேடவேண்டும். Indian Thought Publications-ல் இருந்து ஆர்.கே. நாராயணனின் மூன்று புத்தகங்களை செட்டாக வாங்கினார், மனைவி அனுஷா. Malgudi Days. Under the Banyan Tree & Other Stories. A Tiger for Malgudi. 250 ரூபாய். தமிழ் சரளமாக வாசிக்க வராது என்பதால், பெண் ஏன் அடிமையானாள் ஆங்கில மொழிபெயர்ப்பை அவருக்குப் பரிசளித்தேன்.

6. சென்னை புத்தகக் காட்சியில் முதல் நாள்.. – யுவகிருஷ்ணா!

… ‘சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்’ புத்தகத்துக்கு அருகில் ‘கிரிமினல்கள் ஜாக்கிரதை’ புத்தகத்தை பார்வைக்கு வைத்திருந்தது யதேச்சையானதுதான் என்று ஹரன்பிரசன்னா எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் மீது சத்தியம் செய்கிறார்.
ஒரு ஸ்டாலில் டாக்டர் ஒருவரின் செக்ஸ்நூல்கள் சூடாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்டாலுக்கு அடிக்கடி போகவேண்டும். 🙂

5. சென்னை புத்தகக் காட்சி 09 – நாள் 2, பா.ராகவன்
…வினவு தளத்தில் வெளியான பல கட்டுரைகளைத் துறை வாரியாகப் பிரித்து சிறு சிறு பிரசுரங்களாகக் கீழைக்காற்றில் வைத்திருக்கிறார்கள். இலக்கிய மொக்கைகள் நன்றாக விற்கிறது. எடுத்துப் புரட்டினால் சுண்டி இழுக்கிறது, அவர்கள் கையாளும் மொழி. இருபத்தியோராம் நூற்றாண்டில் வளமான தமிழ் என்றால் அது புரட்சிகர கம்யூனிஸ்டுகளிடம்தான். குறிப்பாக அவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளைத் திட்டும்போது எங்கிருந்துதான் அத்தனைப் பேரெழில் ஓடிவந்து ஒட்டிக்கொள்கிறதோ தெரியவில்லை. வெகுஜன சுவாரசியத்துக்கு பங்கமில்லாமல், அதே சமயம் தீவிரம் குறையாமல் நல்ல தமிழ் எழுத விரும்புகிறவர்களுக்குத் தயங்காமல் இந்தப் புத்தகங்களை சிபாரிசு செய்வேன்.

4. நான் வாங்கிய புத்தகங்கள் – மருதன்

3. ஒரு லிட்டர் காபியின் விலை ரூ.100-முகில்
….கண்ணதாசனில் அய்யங்கார் சமையல் என்று ஒன்று (அரதப்பழசாக) கண்ணில்பட்டது. எடுத்து பில்போடச் சென்றேன். அருகில் இன்னொரு புத்தகத்தோடு இருந்த நபர், ‘அவரே எழுதியிருக்கிறாரா?’ என்று கேட்டார். ‘எவர்?’ என்று சமையல் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன், ‘எல். சுஜாதா’ என்றிருந்தது.

2. சென்னை புத்தகக் கண்காட்சி 2009 – நாள் 01 – ஹரன் பிரசன்னா
சா. கந்தசாமி வந்திருந்தார். முக்தா சீனிவாசனைப் பார்த்தேன்.
…. கடைசியில் மொத்தமாக ‘நான் காலச்சுவடு, உயிர்மை, புத்தகம் பேசுது எல்லாம் படிப்பேன்’ என்றார். ‘உங்க பெயர் என்னங்க?’ ‘என் பேர்ல என்னங்க இருக்கு. அதுல ஒரு முக்கியத்துவமும் கிடையாது’ என்றார். ‘முக்கியத்துவம் இல்லைன்னா என்ன, உங்க பேரச் சொல்லுங்க’ என்றேன். ‘ரத்தினவேலு’ என்று சொல்லிவிட்டு, ‘ஒரு முக்கியத்துவமும் கிடையாது, பில்கேட்ஸ் கையில சிறந்த கோடிங் ரைட்டர்ங்கிறதுக்கான அவார்டு வாங்கினேன்றதைத் தவிர’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். கிட்டத்தட்ட 45 வயது மதிக்கத்தக்க, வெண்ணிற வேட்டியும் சட்டையும் அணிந்திருந்த மனிதர் அவர்!

புகைப்படங்கள்

1. சென்னை புத்தகக் கண்காட்சி 2009 (நாள் 02) –
….ஞாநியின் கருத்துக்குப் பின்னர் ஞாநி என்கிற ஆளுமை உண்டென்றும், அது வழக்கறிஞர் போன்ற, யாருக்குவேண்டுமானாலும் வாதாடும் குணம் போன்றதல்ல என்று நேர்ப்பேச்சில் குறிப்பிட்டார் ஜெயமோகன். அவரது கருத்துகள் ‘கருத்தேற்றப்பட்டவை’ என நான் நினைக்கவில்லை. அவர் நம்புவதைப் பேசுகிறார் என நினைக்கிறேன். அந்த வகையில் ஞாநி ஒரு முக்கியமான ஆளுமை ஆகிறார். நேற்றைய பொழுது ஞாநியோடு இப்படியாகக் கழிந்தது. நான்கு பானைகளையும் நான்கு புத்தகங்களையும் வைத்துக்கொண்டு ஒரு புத்தகக் கண்காட்சியில் பங்குபெறவே ஒரு தைரியம் வேண்டும். அந்த தைரியம் ஞாநியைத் தவிர யாருக்கு வரும்? :))))

நாள்: 2009 ஜனவரி 8 முதல் 18(ஞாயிறு) வரை
நேரம்:  வேலை நாட்களில் – மதியம் 2:30 – 8:30 வரை, விடுமுறைகளில் – முற்பகல் 11 மணி முதல் இரவு 8:30 வரை
இடம்: புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி (பச்சையப்பா கல்லூரி எதிரில்). பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமிஞ்சிக்கரை, சென்னை-30 (சென்ற ஆண்டு நடந்த அதே இடம்)

ஜனவரி 14, பொங்கல்,
நடுவில் ஒரு சனி ஞாயிறு – இதற்கேற்றார் போல் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
எதிர்பார்க்கக்கூடிய பதிப்பகங்கள்: கிழக்கு, விகடன், உயிர்மை, காலச்சுவடு, இன்னபிற ஞாபகம் வரும்போது!

மைதான வரைபடம்
பபாசியின் இணையதளத்தில் – Rows: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11
புத்தகக் கடைகளின் அணிவகுப்புப் பட்டியல் – 246 கடைகள்!

விருது பெறுபவர்கள்:
நிகழ்ச்சி நிரல்8 & 9 ஜனவரி, 10-14 ஜனவரி, 15-18 ஜனவரி

Prodigy புத்தகங்கள் – இந்த ஆண்டு புதிதாக 112 – மொத்தம் 180!

நான் எடிட் செய்த புத்தகம் – 5: ராமகியன்

முப்பத்தி இரண்டாவது சென்னை புத்தகக் கண்காட்சி மழைப் பிரச்னையில்லாமல் நல்லபடியாக இன்று தொடங்கியது. – பா.ராகவன்
….ஒரு கடையில் ஞான அருள் குரு பரத்வாஜ் சுவாமிகள் என்றொரு புத்தகத்தைப் பார்த்தேன். சட்டென்று உசிலை மணி ஞாபகத்துக்கு வந்துவிட்டார். பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கே என்று எடுத்துப் பார்த்தால், ஒரு காலத்தில் நான் தாயில் எழுதிக்கொண்டிருந்தபோது அங்கே மேட்டர் கொடுக்க வருகிற என் பழைய சிநேகிதர் பரத்! நல்ல பத்திரிகையாளராக வரவேண்டும் என்று அப்போது அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். இப்படி சாமியாராகி, சொந்த பிசினஸில் இறங்குவார் என்று கனவில்கூட நான் நினைத்துப் பார்க்கவில்லை.

எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள் – ஜெயமோகனின் ஈழ இலக்கியம்: ஒரு விமர்சனப் பார்வை
உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்)
பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள்
நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்

ஈழத்து இலக்கியம்-விருபா
….தொகுப்பு நூல்கள் என்றால் தனி விருப்பம். ஒரு புத்தகத்தின் மூலம் பல ஆக்கங்களையும், பல எழுத்தாளர்களையும் அறிந்து கொள்ள முடிகிற மகிழ்ச்சி. அதுவும் அத்தொகுப்பாளர் எந்தவித தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் ஆளாகாமல், அத்தொகுப்பினைத் தரும் போது அது இரட்டிப்பான மகிழ்ச்சியைத் தருகிறது. அவ்வாறு நான் மிகவும் விரும்பிப் படித்த, பாதுகாத்து வைத்திருக்கிற புத்தகங்களில் செ.யோகநாதன், யோ.சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட வெள்ளிப் பாதசரம் ஒன்றாகும், அதன் கனமான முன்னுரை காரணமாக தனித்துவமான ஒரு சிறப்பிடத்தைப் பெற்றுள்ள இப்புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துச் சிறுகதைகள் பலவற்றைக் கொண்டது. 1993 இல் வெளியான இந்தப் புத்தகத்தின் முன்னுரை பல தரவுகளைத் தரவல்லது, ஆகையால் இணையத்தில் இருப்பது நல்லது என்ற நோக்கில் இதனை நான் இங்கு பகிர்ந்துகொள்கிறேன்….

கண்காட்சியில் ஜெயமோகனின் நூல்கள்
‘தன்னுரை’யின் முன்னுரை!

கீழைக்காற்று நூல்கள்

ஜெயந்தி சங்கர்: புது புத்தகங்கள்

ச.ந.கண்ணன்: கிழக்கு [2008] – சிறந்த 10 புத்தகங்கள்

+2 டாப்பர்கள் 8 பேர் தங்களுடைய செண்டம் ரகசியங்களை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டது பிராடிஜி பதிப்பகத்தில் ‘மேஜிக் ஆணி’ என்கிற பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.அதிலிருந்து சில பகுதிகள்.

எழுத்தாளர் பா.ராகவன், கண்காட்சியை திருப்தியாக கண்டுகளிக்க சில முக்கியமான டிப்ஸ் தருகிறார். ஒரு ஐந்து நிமிடம் செலவழித்து நிச்சயம் படித்து விடுங்கள்!

எழுத்தாளர் பா.ரா.வின் ஒரு FAQ:சில வினாக்கள், சில புத்தகங்கள், சில எண்ணங்கள்
மேலுமொரு பா.ரா. பதிவு! – சென்னை புத்தகக் கண்காட்சி – சில விவரங்கள்
பா.ரா விட்டு விளாசுகிறார்! – Top 100 புத்தகங்கள்

எஸ்.ராமக்கிருஷ்ணனின் 8 புத்தகங்கள் வெளியீடு – ஜனவரி 5 2009 மாலை பிலிம் சேம்பர் அரங்கில் (ராணி சீதை மன்றம் அருகில்)

சாரு நிவேதிதாவின் பத்து புத்தக்ங்கள் வெளியீடு – ஜனவரி 7 மாலை 6.30 – மவுண்ட் ரோட்டில் புக் பாய்ண்ட் (ஸ்பென்ஸர் ப்ளாசா எதிரே)

எழுத்தாளர் நாகராஜன் தன்னுடைய திணை இசை சமிக்ஞை வலைப்பதிவில் இதுவரை எழுதிய முக்கிய ஆக்கங்கள் என்பதான சுமார் நூறு பதிவுகளை, இரண்டு தொகுதிகளாக,  ஆழி பதிப்பகம் தொகுப்பாக கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.
எஸ்.ராமக்கிருஷ்ணன் பதிவிலிருந்து:10 , 11 & 12 மற்றும்  13, 16 & 17 தேதிகளில் மாலையில் ஐந்து மணி முதல் எட்டு மணிவரை உயிர்மை புத்தக கடையில் வாசகர்களை சந்திப்பதற்காக வருகை தருவேன். சந்திக்க விரும்பும் நண்பர்கள் அவசியம் வரலாம்.”

தொடர்புடைய சில புத்தக வெளியீடுகள்: கிழக்கு மொட்டை மாடிக் கூட்டங்கள், தொடர்புள்ள லக்கிலுக், ஹரன்பிரசன்னா பதிவுகள், ஒலிப்பதிவுகளின் இணைப்புகள் (உபயம்:பத்ரி)

கிழக்கு வழியாக வெளியாகும் என்.சொக்கனின் புத்தகங்கள்:
1. எனக்கு வேலை கிடைக்குமா?,
2. அமுல்: ஓர் அதிசய வெற்றிக் கதை
3. ரதன் டாடா
4. அம்பானிகள் பிரிந்த கதை

ஆர்.முத்துக்குமாரின் (கிழக்கு பதிப்பகத்தின் முதன்மை துணையாசிரியர்) MiniMax குறித்தான அறிமுகம்:
அரசியல் கட்சிகள் உருவான கதை- தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க, பா.ஜ.க ஆகிய 5 புத்தகங்கள்
ஈழப்பிரச்னை குறித்து இரண்டு புத்தகங்கள் (எல்.டி.டி.ஈ., எல்.டி.டி.ஈ உள் அரசியல் – மாத்தையா தொடங்கி நேற்றைய கருணா வரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்துபோன பலருடைய கதைகள்).
123: இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் – ஆசிரியர்: பத்ரி சேஷாத்ரி (பத்ரியின் அணுசக்தி ஒப்பந்தம் குறித்தான இடுகைகள்)
* அத்வானி, ஜெயலலிதா, மாயாவதி வாழ்க்கை வரலாறுகள்
* 26/11 மும்பை தாக்குதல்
* ‘அம்பானிகள் பிரிந்த கதை’
* ஆரோக்கியம் தொடர்பாக யோகாசனங்கள், சித்த மருத்துவம், ஹெச்.ஐ.வி. எய்ட்ஸ், தலைவலி உள்ளிட்ட அடிப்படைக் கையேடுகள்.

இட்லிவடைப் பதிவு: புத்தகக் கண்காட்சி – கிழக்கு புத்தகங்கள் டாப் 10+5
1. மாயவலை – பா. ராகவன்
2. பிரபாகரன் – ஒரு வாழ்க்கை : செல்லமுத்து குப்புசாமி
3. ஒபாமா பராக்! – ஆர். முத்துக்குமார்
4. அப்துல் கலாம் : A Critical Biography – ச.ந. கண்ணன்
5. அள்ள அள்ளப் பணம் 4 (போர்ட்ஃபோலியோ மேனேஜ்மெண்ட்)
6. ஓ பக்கங்கள் 2007 – ஞாநி
7. என் ஜன்னலுக்கு வெளீயே – மாலன்
8. சூஃபி வழி – ஓர் எளிய அறிமுகம் – நாகூர் ரூமி
9. ரத்தன் டாடா – என். சொக்கன்
10. 26/11 மும்பை தாக்குதல் – ஆர். முத்துக்குமார்
11. எல்.டி.டி.ஈ. உள் அரசியல்: மாத்தையா முதல் கருணா வரை – செல்லமுத்து குப்புசாமி
12. இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு – மருதன்
13. பெண்களின் அந்தரங்கம் [ஆண்களுக்கான ஒரு கையேடு] – எழுதியது?!
14. ஆண்களின் அந்தரங்கம் [ பெண்களுக்கான ஒரு கையேடு] – எழுதியது?!
15. அமுல்: ஒரு வெற்றிக்கதை – என். சொக்கன்

பத்ரியின் நான் எடிட் செய்த புத்தகங்கள் – 1
2 – கோக-கோலா
3 – ஓர் ஐ.ஏ.எஸ் அலுவலரின் பணி அனுபவம்
4: ஒபாமா
5: கலீஃபா உமர் இப்ன் அல்-கத்தாப்
6. நான் எடிட் செய்த புத்தகம் – 6 – அமுல்

புத்தகப் பட்டியல்

செவ்வியலின் வாசலில் – ஜெயமோகன்
உயிர்மை வெளியீடாக வரவிருக்கும் ‘ஊமைச்செந்நாய்’ சிறுகதை தொகுதியின் முன்னுரை (வார்த்தை இதழில் வெளிவந்த ஊமைச்செந்நாய் சிறுகதை)

புத்தகக் கண்காட்சியில் வினவு  – 6 புத்தகங்கள்
சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !– 88 பக்கங்கள், ரூ.35
மும்பை 26/11: விளக்கமும் விவாதமும்– 88 பக்கங்கள், ரூ.35
கடவுள் கைது ! பக்தன் விடுதலை !! -பக்கம் – 56, ரூ.25

ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – முதலான கட்டுரைகள் – பக்கம் – 48, விலை ரூ.25
நூல் ஐந்து – இலக்கிய மொக்கைகள்! – பக்கம் – 56, விலை ரூ.25
ஐ.டி துறை நண்பா… – பக்கம் – 72, விலை ரூ.35

அனைத்து புத்தகங்களும் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் ( 99 – 100 ) விற்பனைக்கு.
கண்காட்சி முடிந்தவுடன் கீழைக்காற்று கடையிலும், புதிய கலாச்சாரம் அலுவலகத்திலும் பெற முடியும்.
புதிய கலாச்சாரம், 16, முல்லை நகர் வணிக வளாகம், 2ஆவது நிழற்சாலை, ( 15-ஆவது தெரு அருகில் ), அசோக் நகர், சென்னை – 600 083.-044 – 2371 8706 செல்பேசி : 99411 75876
கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002. 044 – 28412367
வெளியூர், மற்றும் வெளிநாட்டு நண்பர்கள்   vinavu@gmail.com , pukatn@gmail.com முகவரிகளில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

சில்லு மனிதனின் புன்னகை– அறிவியல் புனைவிலக்கியம், செங்கோ ( உலோ.செந்தமிழ்க் கோதை)
தொடர்பான விருபாவின் பரிசுப் போட்டி அறிவிப்புடனான பதிவு

விருபாவின் 2009 சென்னைப் புத்தகத்திருவிழா புதுவரவுகள்

உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடுகள்

காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள்: pdf கோப்புகள் – பகுதி1 (55 பக்கங்கள்), பகுதி2(11 பக்கங்கள்)

விகடனின் ஒரு அதிகாரப்பூர்வமில்லாத(!) புத்தகப்பட்டியல்

இது தொடர்பான ஒரு வலைப்பதிவு

2009-ல் நாஞ்சில் நாடன் 2010-ல் எஸ்.ராமகிருஷ்ணன் 2011-ல் ஜெயமோகன்
எழுத்தாளர் திரு.பாரதிமணி அவர்களை வாழ்த்துகிறேன்

குரல் கொடுங்கள்! ….பாராவின் தளத்திலிருந்து
99411-37700இது ஒரு தானியங்கி சேவை. ஆனால் ஒழுங்காக பதில் வந்து சேரும். சம்பந்தப்பட்ட எழுத்தாளர், ஆசிரியர், விளம்பர, விற்பனை அதிகாரிகள், பதிப்பாளர் உங்கள் வினாவுக்கேற்ற விடையளிப்பார்கள். கச்சாமுச்சாவென்று திட்டித் தீர்த்தீர்களானாலும் அது போய்ச் சேரவேண்டியவர்கள் வசம் ஒழுங்காகச் சமர்ப்பிக்கப்பட்டுவிடும்.
ஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு.- 575758. எங்களுடைய புதிய வெளியீடுகள், நாங்கள் நடத்தும் கூட்டங்கள், விழாக்கள் பற்றிய தகவல்கள் உங்களுக்கு உரிய சமயத்தில் வந்து சேர உதவியாக நிறுவப்பட்டுள்ளது. இந்த 575758 என்கிற எண்ணுக்கு நீங்கள் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினால் போதுமானது.
start NHM. அவ்வளவே. தகவல்கள் உங்களுக்கு வரத் தொடங்கும்.”

Advertisements

From → books

10 Comments
 1. i also subscribe with 575758..but you guys are not sending me the function, book release details, to my mobile no. and you guys promise to send some books to me for some review.. but i did not get right now.. what happen?

 2. Dear Arun,

  This is not the site of Kizhakku Pathippagam / New Horizon Media. You have misconstrued private site of Venkatramanan. Please send an email to support@nhm.in so that I can track what book you are supposed to get for review and revert. As to 575758, it is not working for several customers because it is being blocked “selectively” (?) by the service providers. We are reviewing this issue and find a solution quickly.

 3. Thanks Badri for the clarification!
  As always, excellent customer service!

  Venkat

 4. பா.மாரியப்பன் permalink

  பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஐந்நூறு ரூபாய் செலவழித்து புத்தகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். புத்தகங்கள் வாங்கி்யதோ நானூறு ரூபாய்க்குத்தான். வாங்க நினைத்த புத்தகங்களின் விலை அதிகமாகத் தோன்றியது. அகிலனின் வேங்கையின் மைந்தனின் விலை முந்நூறு ரூபாய். சி்த்திரப்பாவை முந்நூற்று ஐம்பது ரூபாய். நூலகத்தில் எடுத்துப் படித்துக் கொள்ளலாம் என்று திரும்பி விட்டேன்.

 5. நன்றி மாரியப்பன்.
  நீங்க ரொம்ப இலக்கியத் தரமா படிக்கிற ஆள் போல!
  உங்களாலயாவது போக முடிந்தது! என்னால் அதுகூட முடியலை (நான் சென்னைவாசிதான்! ஆனலும் இப்போதைக்கு சென்னையில் இல்லை!) சரி நம்மால்தான் முடியலை, மத்தவங்களுக்கு பிரயோஜனமா ஒரு இடுகையாவது எழுதிவெப்போம்னு இதை செஞ்சேன் 😦

 6. ha ha…naanum அகிலனின் வேங்கையின் மைந்தனின் சி்த்திரப்பாவை, paarthu vaithuvitu vanduviten..

 7. ezhilarasan.p permalink

  hello
  sir, it will be usefull your website

 8. ezhilarasan.p permalink

  hello
  sir your website is very useful so kindly your’s mobile no thank you sir

 9. OMPRAKASH permalink

  We need a bookfair in Cochin. Here i am unable to get to to get tamil books.

Trackbacks & Pingbacks

 1. 2008 - Tamil Books « Snap Judgment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: