Skip to content

“அவார்டா கொடுக்கறாங்க” மற்றும் தற்போதைய தமிழ் வாசிப்பு!

September 3, 2008

சன் டீ.வியில் தமிழ் சினிமாவின் தமிழ்த்திரையின் 75 கால வரலாற்றைக் கொண்டாடும் விதமாக இரவு பழைய படங்கள் திரையிடப்படுகின்றன் என அறிகிறேன். இப்படங்களை R.V.சுப்பிரமணியன் எனும் அமெரிக்க வாழ் தமிழர்அவார்டா கொடுக்கறாங்க?” என்ற தலைப்பில் தனது மலரும் நினைவுகளினூடாக விமர்சிக்கிறார். ‘அந்த காலத்தில்…‘ என்றில்லாமல் தான் ரசித்த படங்களைக் கட்டுடைக்கும் இவரது பாணி எனக்கு பிடித்தமானதாயுள்ளது. மேலும் மனிதருக்கு நகைச்சுவை பக்க’பலமாய்’ இருக்கிறது!(//அப்பாவை வெறுக்கும் ஏ.வி.எம். ராஜனும் தன் அம்மா ஒரு நிமிஷம் பூ – பொட்டு டயலாக் ஒன்று விட்டதும் “நீ புலம்பாமல் இருந்தால் போதும்” என்று நினைத்து சமத்தாக மனம் மாறி எல்லாரையும் ஒன்று சேர்த்துவிடுகிறார். சுபம்!//)  சுபம் என்கிற சொல் இவரது பதிவுகளில் எத்தனை முறை இடம்பெறுகிறது என்று எண்ணிச் சொல்பவருக்கு ஒரு அவார்டு கொடுத்துடலாம் (ஆனா அவரே சொல்கிற மாதிரி சுபம் என்று சொல்லி முடித்தால்தான் ஒரு திருப்தி!)

அவரது சுப்பிரமணியபுரம் விமர்சனப் பதிவில் நடந்த ‘தமிழகத்தின் தற்போதைய வாசிப்பு’ தொடர்பான ஒரு சம்பாஷணை சுவாரசியமாயிருந்ததால் இங்கு மீள்பதிகிறேன்!

RV:
வெங்கட்ரமணன்,
நன்றி! உண்மையில் இந்த ப்ளாகை என்னைத் தவிர வேறு யாரும் படிப்பார்கள் என்று நினைக்கவில்லை. பழைய போர் படங்களை பற்றி 4 கிழங்களும் (மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 அரைக் கிழங்கள் + 2 முழுக் கிழங்கள் = 4 கிழங்கள்) இரண்டு கிறுக்குகளும் படிப்பார்கள் என்றுதான் நினைத்தேன். 26 வயது இளைஞர் படிப்பது சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் எந்த வகையை சேர்ந்தவர் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். :-))
உங்கள் தளத்தைப் பார்த்தபோது இன்னும் ஒரு இருபது வருஷங்கள் கழித்துப் பிறந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது. :-)) எவ்வளவு விஷயங்களை அனாயாசமாக கையாள்கிறீர்கள்! எனக்கோ 3 ஃபோட்டோக்களை சேர்ப்பதற்குள் தாவு தீர்ந்துவிட்டது… ஜேம்ஸ் வசந்தன் பேட்டி லிங்க்குக்கும் நன்றி! அப்புறம் நீங்க 26 வயது இளைஞர், ஜப்பான் போயிருக்கீங்க, அனேகமா ஸாஃப்ட்வேர் எஞ்சினியர், இதைத் தவிர ஒண்ணூம் உங்க ப்ளாக்கிலிருந்து தெரிஞ்சுக்க முடியலை. படிச்ச வரைக்கும் கொஞ்சம் வேவ்லெங்க்த் ஒத்துப் போகும்னு தொணிச்சு. அதணால ஒரு கேள்வி – இன்னிக்கு தமிழ்லே பாப்புலரான ஆசிரியர்கள் யார் யார்? அந்தக் காலத்து சுஜாதா மாதிரி இன்னிக்கும் யாராவது விரும்பி படிக்கப்படறாங்களா? பாலகுமாரன் புச்தகங்களை பத்தி ஒரு ப்ளாக் எழுதணும்னு யோசனை, நாட்டை விட்டு வந்து 20 வருஷம் ஆயிடுச்சு, டாபிகல் விஷயங்கள் நிறைய தெரியலை…

என் மறுமொழி:
RV.
சுஜாதா இன்னிக்கும் டாப்புதான்! பாலகுமாரனுக்கும் இன்னும் மௌஸு கொறஞ்சா மாதிரி தெரியலை! ஆனா மொத்தமாகவே வாசிப்பு வழக்கம் குறைஞ்சா மாதிரி தெரியுது! (NHM பத்ரியைக் கேட்டால் இல்லைம்பார்!)

ஆனா வலையில் அடிபடற எழுத்தாளர்களுக்கும் நேரில் வாசகர்கள் ஆர்வம் காட்டறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குதுனு நினைக்கிறேன். வலையில் (உங்க தோஸ்த்!) ஜெ.மோ, சாருநிவேதிதா இவர்களையெல்லாம் ஒன்னு கொண்டாடறாங்க இல்லை பந்தாடறாங்க! ஆனா இவங்க பேரு அடிபடற அளவுக்கு புத்தகம் விற்பனை (எண்ணிக்கை அளவில்) எந்தளவு இருக்குனு தெரியலை. மட்டுமல்லாமல் இன்றைக்கு தமிழத்தில் கிழக்கு பதிப்பகத்தின் வீச்சு மிக அதிக அளவில் இருக்குது. அந்த காலத்தில் ஜெமினி வாசனின் “மாதசம்பளம்-கொடுத்து-நடிகநடிகயரை-ஊழியர்களாக-வைத்துக்கொள்ளும்-முறை” கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கிட்டத்தட்ட அதே மாதிரி இன்று கிழக்கில் புத்தகாசிரியர்கள் உள்ளனர்

மேலும் அக்காலத்தில் (70,80களில்) மணிமேகலைப் பிரசுரம் கிட்டத்தட்ட அனைத்துத் தலைப்புகளிலும் புத்தகங்கள் வெளியிட்டிருப்பார்கள்!(சுஜாதாவே ஏதோவொரு க.பெ.கட்டுரையில் “இத்தலைப்பில் ஏதாவது புத்தகம் உள்ளதா என லேனாவைக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருப்பார்!) அதேபோல் இன்று கிழக்கில் “You name it! We have it” என்று ஏகப்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. பத்தும் பத்தாததற்கு, நலம், ப்ராடிஜி, வரம் பதிப்பகம், ஒலிப்புத்தகம் என ஜமாய்க்கின்றனர். எனவே வெகுஜனப் புத்தகங்களில் கிழக்குதான் முந்துகிறது என்றே நினைக்கிறேன்(விகடன் இப்போதுதான் முழித்துக்கொண்டு பழைய தொடர்கள், வாரமலர்-குங்குமம் தொடர்கள் தொகுப்பு என ஏதோ கிம்மிக்ஸ் காட்டுகின்றனர்!).

இன்று படைப்பாளியை விட படைப்புதான்  முக்கியமாகப் படுகிறது! ஆனாலும் என்.சொக்கன், பா.ராகவன் என்று சில பேரின் எழுத்துக்கள் தனியே தெரிகின்றன். அதிலும் வாழ்க்கை வரலாறுகளில், நிறுவன வரலாறுகளில் சொக்கனது எழுத்துக் அமர்ர்களமாய் இருக்கிறது!(கிட்டத்தட்ட ஐம்பது புத்தகங்கள் எழுதிவிட்டார்!). ராகவனைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். மனிதர் பத்திரிகை அனுபவத்தை வைத்துக் கொண்டு ராஜபாட்டை நடக்கிறார்! “கிழக்கு ப்ளஸ்” என்ற தலைப்பில் கிழக்கின் இதுவரையிலான வெற்றிக்கதையை ராகவன் அவர் தளத்தில் பத்து அத்தியாயங்களாக எழுதியுள்ளார். நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.

எஸ்.ராவிற்கு விகடனின் ‘துணையெழுத்தி’ற்குப் பிறகு வாசகர்கள் அதிகரித்த மாதிரி ‘அகம்புறம்’ எழுதிய வண்ணதாசனுக்கும், நாஞ்சில் நாடனுக்குதீதும் நன்றும்’ தொடருக்கு அப்புறமும் வாசகர்கள் அதிகரிப்பாங்கனு நினைக்கிறேன்.

பெண்களிடம் ரமணிச்சந்திரன் இன்னிக்கும் கோலோச்சறாங்க. ஆனாலும் இவரொரு ஆணாதிக்கவாதின்னு சொல்றவங்களும் இருக்காங்க! (தொடர்பான நண்பன் நந்தாவின் சூடான இடுகையும் மறுமொழிகளும் வாசிப்பிற்குரியது!)

மேலும் சிறார் பருவத்தில் தமிழ் புத்தக்ங்களை விழுந்து விழுந்து படித்தவர்களின் கவனம் திரைப்படம், ஆங்கிலப் புத்தகங்கள்னு மெல்ல திசைமாறுதுனு தோணுது (எப்படி நீங்களே சுட்டிக்காட்டியுள்ளபடி தமிழ் திரைப்படங்களில் சொல்லிக்கொள்கிற நிலைமை இல்லையோ அதேபோல புத்தகங்களிலும் ஆங்கிலம் தொட்ட ஆழத்தையும் வீச்சையும் தமிழ் தொடுவதற்கு நேரமாகும் என்றே படுகிறது. அதுவரைக்கும் யாருக்கு பொறுமை இருக்கும்னு நினைக்கிறீங்க?!)

மற்றபடி…. எப்படி யோசித்தாலும் இன்று பதிப்பகங்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன! AnyIndian.com Viruba.com(விருபா பதிப்பகமல்ல – ஒரு திரட்டி தளமே என மறுமொழியில் குமரேசன் குறிப்பிடுகிறார்! பிழைக்கு மன்னிக்கவும். தகவலுக்கு நன்றி!) NHM.in, KamaDenu.com, Vikatan.com, Uyirmmai.com என பதிப்பக இணையதளங்கள் இன்று மிக முக்கியமான இடம்னு நினைக்கிறேன் (ஆனால் நான் அவற்றின் வழியே வாங்குவதை விட, அவற்றிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நேரில் சென்று வாங்குவதையே விரும்புகிறேன்!)

இது முழுக்க முழுக்க இணையம் தாராளமாய் கிடைக்கும் ஒரு வாசகனின் பார்வையே என்பதை நினைவில் கொள்ளவேண்டும்!

ஆங்… சொல்ல மறந்துட்டேன்! ‘விகடன் பொக்கிஷம்’ என வாராவாரம் வெளியிடுகிறார்கள்! 60, 70, 80களின் பேட்டிகள், திரைவிமர்சனங்கள், புகைப்படங்கள், மதன் கார்ட்டூன்கள், கோபுலு சித்திரங்கள், என எனக்கு மிகவும் பிடித்தமானதாயுள்ளது. கட்டாயம் படித்துப் பாருங்கள்!

“யப்பா! இவ்வளவு பெரிய மறுமொழியா”ன்னு போலித்தனமா வியக்க மாட்டேன்! நீங்க இந்த வாசிப்பு விஷயம் பற்றிக் கேட்டவுடனே கட்டாயம் விரிவா எழுதனும்னு நினைச்சேன்! (Either that or மாட்டினான்டா ஒருத்தன்! செத்தான்…!”) அதனாலதான் நினைவுக்கு வந்த முக்கியமான விஷயங்கள்னு எழுதினேன்! எழுதாம விட்டது நிறைய! பொறுமையா படிச்சுப் பார்த்துட்டு மறுமொழியிடவும்! இல்லை தனிமடலிடவும். ஒன்னும் அவசரமில்லை!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

பி.கு. கடைசியா ஒரு இணைப்பு! வருட வரும் பூங்காற்றையெல்லாம்! – சுஜாதாவின் மேல் தீவிர அபிமானமும், அதீத செல்லங்கொஞ்சலும் வைத்துள்ள ஒரு ரசிகையின் கடிதம்! கட்டாயம் படித்துப் பாருங்கள்!

Advertisements
6 Comments
 1. நல்ல ஒரு பதிவு. நிறைய சுவாரஸ்யத் தகல்களுடன்

 2. இப்போ தான் உங்க ஓட்டை பானையை பார்த்தேன். மிகவும் அருமை. இவ்வளவு சுட்டி கொடுக்கிறீர்களே, எப்படி முடிகிறது என தெரியவில்லை. நல்ல உழைப்பு.

  வாழ்த்துக்கள்!!!!!!!

 3. வெயிலான்!
  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!
  இத்தனை சுட்டி எப்படின்னா…ஒன்னும் கம்பு சூத்திரமில்லை! எழுதறதே ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கதான்
  அதனால நெறைய இணைப்புகள் இருக்கறாப்ல தெரியுது!

  மத்தபடி துளையுள்ளங்கறதை ஓட்டைன்னு சொல்லி பட்டுனு உடைச்சிட்டீங்களே பாஸ்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்!

 4. உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

  அன்புடன் ஆர்வி

 5. //// மற்றபடி…. எப்படி யோசித்தாலும் இன்று பதிப்பகங்கள்தான் எனக்கு நினைவுக்கு வருகின்றன! AnyIndian.com Viruba.com NHM.in, KamaDenu.com, Vikatan.com, Uyirmmai.com என பதிப்பக இணையதளங்கள் இன்று மிக முக்கியமான இடம்னு நினைக்கிறேன் (ஆனால் நான் அவற்றின் வழியே வாங்குவதை விட, அவற்றிலிருந்து குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு நேரில் சென்று வாங்குவதையே விரும்புகிறேன்!) ////

  Viruba.com பதிப்பக இணையதளம் அல்ல,
  புத்தகங்களைப் பதிப்பிப்பதில்லை,
  நாம் புத்தக விற்பனையிலும் ஈடுபடுவதில்லை,

  வாசகர்களுக்காக புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டித் தரும் ஒரு தரவு தளம்.

 6. தகவலுக்கு நன்றி குமரேசன்!
  திருத்தி விட்டேன்!

  அன்புடன்
  வெங்கட்ரமணன்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: