Skip to content

மின் ஒலிப்புத்தகங்கள் – அவற்றின் நிகழ்காலம், எதிர்காலம் – கிழக்கிற்கு காத்திருக்கும் சவால்

August 11, 2008

சமீபத்தில் பா.ராகவன் அவரது குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்களை சேமித்து பி.டி.எஃப். கோப்பாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவர்களைப் பற்றிக் அங்கலாய்த்திருந்தார்! அத்துடன் அவர் குறிப்பிட்ட மற்றுமொரு செய்திதான் இதை எழுதத் தூண்டியது. கிழக்கே விரைவில்  மின் புத்தகம் கொண்டு வருவதைப் பற்றி கோடிட்டிருந்தார். ராகவன்! (இப்போதே கிழக்கு ஒலிப்புத்தகங்களை வெளியிடுகிறது.) இங்கதான் என் கேள்வியே வருது!

நண்பன் சுஜையுடன் ‘சாட்’டில் அளந்து கொண்டிருந்தபோது கிருபாவின் வலைப்பதிவு விகடன் வரவேற்பரையில் வந்துள்ளது பார்த்தாயா என்றேன்.
கேள்விப்பட்டேன். இன்னும் பார்க்கலை. அச்சில பார்த்துக்கலாம்னு இருக்கேன். சிலதெல்லாம் புத்தகத்துல பார்த்தாத்தான் திருப்தி!

ஆம்! இன்னும் கூட ராகவன் குறிப்பிட்டிருந்தபடி நானே குமுதம், விகடன் தொடர்களை சேமித்தாலும் (நண்பர்களுடம் பகிர்ந்துகொள்வதில்லை – பெரும்பாலும்!) அவற்றை படிப்பது மிகவும் அரிது! ஒரு ஆவணப்படுத்தலுக்காக, ரெஃபரன்ஸுக்காக என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

புத்தகத்தை பிரின்டவுட் போட்டுக் கொண்டாலும் சரி, பிரதியெடுத்தாலும் சரி – அந்த ஸ்பைரல் பைண்ட் அட்டையுடன், 4 பக்கங்களை ஒன்றாய் பிரித்து வைத்துக் கொண்டு (பொறியியல் மாணவர்கள் 3 பேர் செர்ந்து அஞ்சு யூனிட் ஜெராக்ஸ் போட்டுக் கொள்வோம். அனைவரும் ஒரே அறையில் அமர்ந்து படிப்போம்!) படிப்பது – வாய்ப்பே இல்லை! ஒரு திருப்தியே இருக்காது! ஆனால் மின்புத்தகம் ஒலிப்புத்தகம் – இவற்றின் கதையே வேறு! பி.டி.எஃபோ, எம்.பி.3யோ பிரதியெடுத்துப் படித்தாலும், கேட்டாலும் தரத்தில், அனுபவத்தில், ஒன்றும் குறையப் போவதில்லை! எந்த வித்தியாசமுமில்லை! அப்புறம் என்ன? கனஜோராய் எல்லாரும் திருட்டுத்தனமாய் கேட்டு, படித்துக் கொள்ளவேண்டியதுதான்!

ஆங்கிலத்தில் அமேசான் போன்றவர்கள் என்ன கம்புசூத்திரம் வைத்து இதை முறியடிக்கின்றனர் எனத் தெரியவில்லை! அங்கு அறிவுசார் சொத்துரிமை பற்றிய விழிப்புணர்வும், சுயவொழுக்கமும்  சற்று அதிகம் என்பதே என் அவதானம். ஆனால் இங்கும் நம்ம நிலைமை வேறு! கடந்த பதினைந்து வருடங்களில் யாராவது சொந்த உபயோகத்திற்கென காசு கொடுத்து விண்டோஸ் வாங்கியிருப்போமா?

இதில் விகடன் சற்றே புத்திசாலித்தனமாக (?) செயல்பட்டுள்ளது! நான் என் விகடனின் இணைய சந்தா கணக்கை புதுப்பித்தபோது விகடன் தீபாவளி மலர் 2007 – மின்புத்தகம் இலவசமாய்க் கொடுத்தார்கள்.இது ஒரு exe. ஆனால் ஒரு பெரிய தொல்லை – ஒரே கணிணியில் மட்டுமே இதைப் படிக்கமுடியும். Mac Idயை வைத்து இது சாத்தியமானது! ஆனால் யோசித்து பாருங்கள், இது கொஞ்சம் அபத்தமாகப்படவில்லை? பெரும்பாலும் புத்தக சந்தையின் இலக்குகளான இளைஞர்கள் இரண்டு கணிணிகள் உபயோகப்படுத்துபவர்கள்(அலுவலகத்தில், வீட்டில்). மேலும், அமேசான் கிண்டில், அலைபேசி, என்று எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளது நாம் படிப்பதற்கு? அப்புறம் இது exe – பி.டி.எஃப். போல லினக்ஸில் படிக்கவியலாது! இதுவும் வாடிக்கையாளரை எரிச்சலூட்டும் விஷயம்தான்! எனவே நியூ ஹரிசான் மீடியாவிற்கு மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது என்றே படுகிறது!

update on Aug 13th 2008: கணேஷ் சந்திரா நியூ ஜெர்ஸியிலிருந்து என்ன சொல்கிறாரென்றால் கிழக்குலேயே குறுந்தகடா (எம்.பி.3யா) வாங்கினா ரூ.100 தான் – ஆனா ஆடிபிள் இணையதளத்துல வாங்கினோம்னா ரூ.450தாம்! இது எனக்கு புதுசா இருக்கு! இந்த இடுகையோட தொடர்புடையதுங்கறதுனால இதை சேர்த்திருக்கேன்!

Advertisements

From → Analysis

2 Comments
 1. நிகழ்காலப் பிரச்சினை மட்டும் சொல்லி வருங்கால நுட்பச் சாத்தியங்களைச் சொல்லாமல் விட்ட மாதிரி இருக்கே..

  **
  கணிசமான எண்ணிக்கையில் உள்ள பார்வையற்றவர்களைக் கருத்தில் கொண்டாவது ஒலி நூல்கள் கூடுதலா வரணும். தமிழ்க் கணிமை ஆய்வுகளுக்கும் உதவலாம்.

  **

  நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ் நூல்களைக் கூட்டு முயற்சியில் ஒலி நூலாக மாற்ற முனையலாமா என்று ஒரு யோசனை தோன்றியது !!

 2. ரவி!
  நாந்தான் சொன்னேனே (இல்ல தெளிவாச் சொல்லலியோ!) – நான் குறிப்பிட்டிருந்தது வணிக நோக்கிலான புத்தகங்களின் எதிர்காலம்தான். கல்வி, ஆய்வு இதுக்கெல்லாம் ஒலி,மின் வடிவில் ted.com மாதிரி நிறைய இருக்கில்லயா (தமிழில் குறைவுன்னே நினைக்கிறேன்!)
  நுட்ப சாத்தியங்கள் – அதுதான் கருப்பொருளே – ஆனா நான் குறிப்பிட்டிருந்ததைத் தாண்டி எனக்குத் எதுவும் தெரியலை. ஆனால் இதில் முக்கியமானது – சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களைக் களையெடுக்கிறேன் பேர்வழியென்று வாடிக்கையாளர்களை எரிச்சலூட்டக்கூடாது! (DRMல் அதுதான் நடக்கிறதென்று நினைக்கிறேன்!)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: