Skip to content

சுஜாதா! பிரிவோம் சந்திப்போம்

February 28, 2008

சுஜாதா இனி இல்லை!
ஜீரணிப்பதற்கு சற்று சிரமமாக இருந்தாலும் அதுதான் உண்மை!
நேற்று இரவு நண்பர் அரவிந்த் குறுஞ்செய்தி அனுப்பியபோது, சந்தேகம் எல்லாம் வரவில்லை. (அப்போது இணையத்தில் நான் தேடிக் கொண்டிருந்த விஷயம் – “மெல்லத் தமிழினிச் சாகும்”!)
முன்னரே தேசிகனின் இடுகை அவரது உடல்நலக்குறைவைத் தெரிவித்திருந்தாலும் உடனே தோன்றிய ஒரு விஷயம் இதுதான். – ஏன் இவ்வளவு சீக்கிரம்? 72ல்லாம் அவருக்கு ஒரு வயதா?
சில காலம் முன் அவரது உடல்நலம் குன்றிய செய்தியைப் படித்தவுடன் எழுந்த கேள்வி இதுதான் – இவர் இறந்து விட்டால் வலைப்பதிவுகளில் எத்தனை எதிர்வினைகள் வரும்?
அது இத்தனை கொடூரமாக, இவ்வளவு விரைவில் உண்மையாயிருக்க வேண்டாம்.

(நெருங்கிய உறவுகள் தவிர்த்து) எவரது மரணம் நம்மை திகைப்படைய வைக்காது?
வயதாகி, அவர்களது செயல்களில் அது வெளிப்பட்டுக்கொண்டிருந்து இறந்தால், நாம் அவ்வளவாக அதிர்ச்சி அடைய மாட்டோம்!
ஆனால் சுஜாதாவுக்கு வயதாகிவிட்டதா? நம்மை விட இளமையாக சிந்தித்தவர், அற்புதமான நகைச்சுவை உணர்வு கொண்டவர், அபார விஷயஞானம், என எத்தனை சொன்னாலும் கட்டாயம் ஏதேனும் ஒன்று விட்டுப்போய்விடும்!
இன்று 22இலிருந்து 40
வயதினர் (அதற்கும் மேல்) எவரும் அவர் எழுத்தின் ஏதாவது ஒரு வடிவத்தால் கவரப்பட்டிருப்பர்.
அவரின் தனிப்பெரும் அடையாளம் அவரது பன்முகத்தன்மை – சாமான்யன் முதல் ரஜினிகாந்த் வரை அவரது பாத்திரவார்ப்பு அவ்வளவு நேர்த்தி.
ஒட்டுமொத்தமாக மட்டுமல்லாமல், வாசிக்கும் ஒவ்வொருவரும் அவரின் ஏதாவது ஒன்றுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

இன்று வலையில் வலம் வரும் “எனது குரு, ஆசான், வாத்தியார்” என்பது போன்ற க்ளிஷேக்கள் சிறிதளவு மிகையானாலும் பெருமளவு உண்மை.
அன்றாட நிகழ்வுகள் பலவற்றில் அவரை நினைவு கூரத்தக்க அளவு நம்மை பாதித்தவர் அவர்.
அவரே சொல்வதுபோல் அவரது வெகுஜன பத்திரிக்கை எழுத்துக்கள் மேம்போக்காக இருந்தாலும், அதன் மூலம் திவிரமான பல விஷயங்களை வாசகர்கள் தாங்களாக தேடிக்கொள்ள ஒரு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் சுஜாதா.
அவர் போல் மூன்று (அல்லது நான்கு?) தலைமுறைகள பாதிக்கும் அளவுக்கு எழுத்தில் இனி யாராவது சாதிப்பார்களா? தெரியவில்லை!

P.S அவர் இறந்த செய்தி காட்சி ஊடகங்களில் அவ்வளவாக கண்டுகொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
சன் நியூஸ் தவி்ர்த்து எந்த சேனலும் நேற்று (27 ஃபிப்ரவரி) இதை அறிவித்ததாகத் தெரியவில்லை. இது சற்றே வருத்தமாகத்தான் இருந்தது.

Advertisements

From → Uncategorized

2 Comments
 1. நானும் சானல் மாற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

  மிக மிக வருத்தமாக இருக்கிறது.
  அவரது எழுத்துகளை நமக்கு எத்தனை விதத்தில் வேண்டி இருந்தது என்பது அவரது க.பெ வரும் சமயம். ஒரு தடவைக்கு இரன்ண்டு தடவை படிக்கும்படி அதில் விஷயங்கள் எளிமையாக இருக்கும்.
  நீங்கள் சொன்னது போல் 73 என்பது இந்த காலத்தில் ஒரு வயசே இல்லை.
  அந்த மனிதர் இன்னும் கொஞ்ச வருடங்கள் இருந்திருக்கலாம்.

 2. ரேவதி!
  உங்கள் வலைப்பதிவிலிருந்து உங்களுக்கு அவரது குடும்பமும் நல்ல பழக்கம் என அறிகிறேன். அவரின் எழுத்துக்களின் வாயிலாக மட்டுமே அவரை அறிந்துள்ள எங்களைப் போன்றவர்களுக்கே வருத்தமாயிருக்கும்போது தங்களைப் போன்றவர்களின் நிலை புரிந்து கொள்ளக்கூடியதே! டுபுக்கு சொல்வது போல் இந்த விஷயத்தில் எனக்கு உங்கள் மேல் சற்று பொறாமையாகக் கூட உள்ளது! நாளை (மார்ச் 2) புகழ் அஞ்சலியில் பங்கேற்கலாம் என்றிருக்கிறேன். தங்களை சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்.

  அன்புடன்
  வெங்கட்ரமணன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: