Skip to content

விகடனின் Moral Policing!

February 15, 2008

எம்.ஜி.ஆர்.-சிவாஜியை இழிவுபடுத்தினாரா ஜெயமோகன்? - விகடன் கட்டுரை

“எம்.ஜி.ஆர்.-சிவாஜியை இழிவுபடுத்தினாரா ஜெயமோகன்?” என்ற தலைப்பில் இன்று வெளியான விகடனில் கட்டுரை தேவையற்ற ஒரு Moral policing ஆகவே கருதுகிறேன். ஜெயமோகனே சொல்வது போல்  க்ளிஷேக்களை நகைச்சுவையாய் சாடும் அவரது அங்கத நடை வாசகர்களால் விரும்பி வாசிக்கப்படுகிறது. விகடன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்திருப்பதில் வணிக நோக்கமே பிரதானமாய் தெரிகிறது. எது எப்படியிருப்பினும், ஜெயமோகனின் வலைப்பதிவின் ஹிட் ரேட் எகிறப்போவது உண்மை!

இது தொடர்பாக நான் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்:
அன்புள்ள ஜெயமோகனுக்கு

வணக்கம். ஆனந்தவிகடன் கட்டுரை கண்டேன். அபத்தமாகவே தோன்றியது.
அரசியல்வாதிகள் போல Moral Policing செய்வதற்கு இவர்களுக்கு யார் அதிகாரமளித்தார்கள் எனத் தெரியவில்லை.
உங்கள் கட்டுரையை பிரதியெடுத்துப் போட்டதற்கே நீங்கள் விகடன் மீது வழக்குத் தொடரலாம்.
மற்றபடி க்ளிஷேக்களை நகைச்சுவையாய்ச் சாடும் உங்கள் நடையை விட்டுவிடாதீர்கள்.

என் அலுவலகத்தில் உள்ளவர்கள், என் நண்பர்கள் என ஏறக்குறைய 25 பேரிடம் உங்கள் கட்டுரைகளை மின்னஞ்சல் செய்ததுண்டு.
அனைவருமே அதிலுள்ள அங்கதத்தைத்தான் (எத்தனை த!) ரசித்தார்களே தவிர யாரும் “மனம் புண்படவில்லை”!
விகடன் ஏன் இவ்வாறு செய்தது எனத் தெரியவில்லை! என்ன நிர்ப்பந்தமோ அல்லது வணிக நோக்கமோ! விட்டுத் தொலையுங்கள்.
இன்னும் அதிகமாக இவ்வகை அங்கதங்களை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். விரைவில் தாங்கள் இக்கட்டுரைகளை புத்தகமாகவே போடலாம்.

அன்புடன்
வெங்கட்ரமணன்

P.S. ஒருவகையில் தாங்கள் விகடனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுளள்ளீர்கள். கண்டிப்பாக உங்கள் வலைப்பதிவில் ஹிட் ரேட் எகிறப் போகிறது!

From → Uncategorized

3 Comments
 1. அருமையான கட்டுரை!

  திரு. ஜெயமோஹன் அவர்களுடன் நான் கழித்த மூன்று நாட்கள் பற்றிய எனது கட்டுரைகளை
  http://www.lathananthpakkam.blogspot.com ல்
  காணலாம்.

 2. லதானந்த்!
  ஆச்சரியம் – நானும் கோயம்புத்தூர்தான் (ழ வரும் கோவைக்காரன்!)
  மற்றபடி குறிப்பிட்ட இடுகையைத் தொடுப்புக் கொடுப்பதாயிருந்தால் permalink எனப்படும் நிரந்தர சுட்டியை சுட்டுங்கள்.
  உதாரணம்:
  தங்கள் வலைப்பதிவு: http://lathananthpakkam.blogspot.com
  ஆனால் ஜெயமோகனுடன் தங்கள் அனுபவம் குறித்த இடுகை – http://lathananthpakkam.blogspot.com/2008/05/blog-post_06.html
  (இதைத் தாங்கள் மே 2008ல் எழுதியிருக்கிறீர்கள். ஆனால் 2009ல் ஒருவரிடம் இதை நீங்கள் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்றால் http://lathananthpakkam.blogspot.com/ஐ சுட்டினால் அதை சொடுக்கியவர் எவ்வளவு மண்டை காய்ந்து போவார் என்று எண்ணிப் பாருங்கள்!) – எனவே எப்போதும் பகிர்வதற்கு நிரந்தர சுட்டியே உத்தமம் – அதைக் கண்டுபிடிப்பது ஒன்றும் கம்பு சூத்திரமல்ல – அந்தத் குறிப்பிட்ட இடுகையின் தலைப்பில் சொடுக்கினால் உங்கள் உலாவியின் address barஇல் தெரிவதுதான் நிரந்தர சுட்டி!

  நன்றி
  வெங்கட்ரமணன்

Trackbacks & Pingbacks

 1. Jeyamohan vs Anandha Vikadan - Backgrounder, Tamil Blogs, MGR, Sivaji et al « Snap Judgment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: