Skip to content

தன்மீட்சி புத்தகத்தின் கட்டுரைகள்.

சமீபத்தில் சற்றே மந்தமான ஒரு பொழுதில் தோன்றிய எண்ணத்தை நான்கே நாள்களில் செயல்படுத்தி 23 கட்டுரைகளையும் ஒலிப்பதிவாக வாசித்து முடித்தேன்.
இவை பெரும்பாலும் 22- 28 வயது இளைஞர் இளைஞிகள் தங்களை தங்கள் படிப்பை/வேலைகளை மீறிய ஆளுமைகளாக உணர்கையில் உண்டாக்கும் தத்தளிப்பில் எழுதிய கடிதங்களும் அதற்கு ஜெயமோகன் எழுதிய பதில்களுமாக இருக்கின்றன (உதிரியாக வேறு சில சாதி பற்றிய கட்டுரைகளும் உண்டு). எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ளும் தொண்ணூறுகளில் பிறந்த இந்த தலைமுறை இளைஞர்களின் பிரதிநிதிகளின் குரலாக இந்தக் கடிதங்களை எடுத்துக்கொள்ளலாம். இவற்றுக்கு ஜெயமோகனின் பதில்கள் எளிமைப்படுத்தப்படாமல், கூர்மையாக அதே சமயம் எதிர்மறையாக அல்லாமல் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ள வலியுறுத்துகின்றன.
நான் சொல்வதைக்காட்டிலும் நீங்களே வாசித்தோ/காது கொடுத்து கேட்டோ புரிந்து கோல்வது உத்தமம்
Thanmeetchi

வலைப்பதிவின் சுட்டி Burp ஒலிப்பதிவு
எழுதலின் விதிகள் நீங்கள் ஆற்றவேண்டிய பணி என்ன, அதில் உங்கள் திறன் என்ன, நீங்கள் சென்றடையும் இலக்கென்ன என்பதை நீங்கள் கண்டு கொண்டீர்கள் என்றால் அதில் முற்றாக ஈடுபடுவது ஒன்றே வழி .அவ்வாறு கண்டு கொள்ளாத போதுதான் ஆழ்ந்த சோர்வும், செயலின் பயனென்ன என்ற எண்ணமும் ஏற்படுகிறது. சரி, என்ன சொன்னாலும் ஒருவர் அந்தச்சோர்வுதான் எஞ்சுகிறது என்பாரென்றால் அது அவரது வாழ்க்கை, அவ்வளவுதான். நாம் செயலாற்றியாகவேண்டும் என இயற்கையோ ஊழோ அடம்பிடிக்கவில்லை. செயலாற்றுவது நமக்கே ஒழிய வேறெதற்காகவும் அல்ல. இங்கு எவரும் எச்செயலும் ஆற்றவில்லை என்றாலும் எனக்கு ஒன்றுமில்லை என்று கீதை அதைத்தான் சொல்கிறது. https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/1—-m4a-acnaga
தன்னறம் எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும்போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். அதுவே கீதையின் மையச் செய்தி” என்றேன். ”அதை எப்படி கண்டு பிடிப்பது?” என்றான். நான் டாக்டர் நோயைக் கண்டுபிடித்த விதத்தை சொன்னேன். ”எந்தத் துறையில் உனக்கு உள்ளுணர்வு திறக்கிறதோ அதுவே உன் தன்னறம்” என்றேன் https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/2–m4a-acnb76
தன்னறமும் தனிவாழ்வும் உங்கள் பணியிடத்தில் நீங்கள் எதைச்செய்தாகவேண்டுமோ, எதைச்செய்தால் உங்கள் பணி முறையாகவும் வெற்றிகரமாகவும் நிகழுமோ அதைச்செய்வதே சரி. அதற்கு நீங்கள் சொந்தவாழ்க்கையில் நெகிழ்வானவராக இருப்பது தடையாக ஆகவேண்டியதில்லை. https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/3—m4a-acqaia
தேடியவர்களிடம் எஞ்சுவது வாழ்க்கையின்போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை என்பது மிகச்சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம்பேரின் ஆசைகளும் வேகங்களும் முட்டிமோதும் ஒரு வெளி. தற்செயல்களினாலான மாபெரும் பின்னல். அதில் ஒருவர் செயல்படமுடியுமே ஒழிய விளைவைக் கண்டிப்பாக எதிர்பார்க்கமுடியாது. எதிர்பாராமைகள்தான் வாழ்க்கையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன. https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/4—m4a-acqaif
தனிமை நீங்கள் இருப்பதைவிடப் பெரிய வெறுமையை நானும் உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய படைப்பூக்கத்தைக் கண்டுகொண்டது வழியாக அதிலிருந்து மீண்டேன் உங்களைச்சுற்றியிருக்கும் சமூகத்தில் , உலகத்தில் நீங்கள் செய்யக்கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால்போதும் இந்தச்சோர்வை வென்றுவிடலாம். அது என்ன என்பதைக் கண்டடையுங்கள். அதுவே தன்னறம். அதைச்செய்யும்போதே நீங்கள் விடுதலைபெறுவீர்கள் https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/5–m4a-acqctg
தன்னறத்தின் எல்லைகள்
ஒருவர் தனக்கு உண்மையிலேயே எது முக்கியம் என உணர்கிறாரோ அதை செய்யமுடியும் என்றே நான் நினைக்கிறேன். பலசமயம் எளிய உலகியல் ஆசைகளால் அவர் தன்னைத் திசைதிருப்பிக்கொள்கிறார். தன் அகத்துக்கு முக்கியமானதை அழித்துக்கொள்கிறார்.
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/6—m4a-acqcp6
செயலின்மையின் இனிய மது
ஆனால் அதற்குத்தேவை மறுகரை வரை விடாப்பிடியாக நீந்தும் மனநிலை. ஒருபோதும் தோற்கமாட்டேன் என்ற வேகம். எழுத்தாளனாக ஆகவேண்டும் என்பதற்காக இந்திய விண்வெளி ஆய்வுத்துறை அறிவியலாளராக இருந்த மலையாள எழுத்தாளர் சி.ராதாகிருஷ்ணன் தன் வேலையை உதறினார், வேலையில் இருந்தபடியே ஏன் எழுதக்கூடாது என்ற கேள்விக்கு ‘எழுதமுடியாமலானால் நான் பட்டினி கிடந்து சாகவேண்டும் , அதற்காகத்தான் ’ என்று பதில் சொன்னார்
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/7—-m4a-acqct4
நம் வழிகள்
அதற்கான வழிகளில் முக்கியமானது, பொதுவாக அனைவரும்செய்யக்கூடிய கேளிக்கைகள், அரட்டைகள் போன்றவற்றைத் தவிர்ப்பதே. நம் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தை அவர்கள் விரும்பும் எந்த துறையில் செலவிட்டிருந்தாலும் பெரிய வெற்றிகளை ஈட்டியிருப்பார்கள்.
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/8—m4a-acqct7
தேர்வு செய்யப்பட்ட சிலர் ஆம், ஒரு நூலை வாசிக்கத்தோன்றும் ஒருவர் இயற்கையால் கோடானுகோடிகளில் இருந்து தேர்வுசெய்யபப்ட்ட அபூர்வமான பிறவி. அவருக்கு ஒரு வரம் அளிக்கப்பட்டிருக்கிறது. அவர் தன்னை மாற்றிக்கொள்ள முடியும். தன் சூழலை மாற்றமுடியும். தெரிந்தோ தெரியாமலோ எதிர்காலத்தை மாற்றமுடியும். https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/9—-m4a-acqct9
விதி சமைப்பவர்கள் நித்யா இங்கே பேசும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. உரிமைகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அல்ல. மானுட குலத்தின் உயிரியல் இயல்பால் ஏதோ ஒருவகையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நித்யா சொன்ன கருத்தை ‘உன்னிடத்தில் இருக்கும் ஒரு தனித்திறமை என்பது மானுட இனத்துக்குச் சொந்தமானது என்பதை உணர்ந்துகொள் . அது அபூர்வமாகவே அளிக்கப்பட்டுள்ளது. அது பிற அனைத்தைவிடவும் மேலானது. ஆகவே அதை வீணடிக்க உனக்கு உரிமை இல்லை. அதை முழுமைப்படுத்தி அதன் உச்சம் நோக்கிக் கொண்டுசெல்ல நீ கடமைப்பட்டிருக்கிறாய். அதை அடைந்த நீ உன்னிடம் இல்லாதவற்றை சுட்டிக்காட்டி அதை வீணடிப்பது குற்றம்’ என்று எளிமையாகச் சொல்லலாம் https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/10—m4a-acqcuh
விதிசமைப்பவனின் தினங்கள் இலக்கியமும் நுண்ணுணர்வும் உங்களுக்கு அளிப்பது லௌகீக கௌரவம், இன்பம், நிறைவு என்று பொருள் கொள்ள வேண்டியதில்லை. அந்த எண்ணத்தையே நான் அக்கட்டுரைகளில் கண்டித்திருந்தேன். நீங்கள் உங்கள் அறைக்குள் இருந்து வாசிப்பதும் சிந்திப்பதும் வெளியே விரிந்து கிடக்கும் மனிதகுலத்துக்காக என்பதை உணருங்கள். அந்த மக்கள் ஒருவேளை ஒன்றும் வாசிக்காதவர்களாக இருக்கலாம், ஒன்றைப்பற்றியும் கவலைப்படாதவர்களாக இருக்கலாம், வாசிப்பையும் நுண்ணுணர்வுகளையும் மதிக்காதவர்களாக இருக்கலாம் , நிந்திப்பவர்களாக இருக்கலாம். ஆனால் நீங்கள் அவர்களுக்காகவே வாசிக்கிறீர்கள், சிந்திக்கிறீர்கள். நீங்கள் சிந்தனைத்திறனுடனும் நுண்ணுணர்வுடனும் படைக்கப்பட்டிருப்பதே அவர்களுக்காகத்தான். https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/13–m4a-acqcvb
சராசரி
உலகம் முழுக்க எல்லாச் சிந்தனையாளர்களும் தாங்கள் வாழும் சூழலுக்கு எதிராகவே செயல்பட்டிருக்கிறார்கள். ஆகவே அதன் பிரதிநிதியாகிய சராசரியை அவர்கள் நிராகரித்துப்பேசியிருப்பார்கள்… ஆனால் அந்தத் தன்னுணர்வால் அவன் அதிகாரத்தை நோக்கிச் செல்வானென்றால் அது அழிவை உருவாக்கும். ஒரு சமூகத்தின் அதிகாரம் அந்த சமூகத்தின் சராசரிக்குடிமகனின் கையிலேயே இருக்கவேண்டும். அந்தச்சராசரியை விட மேலானவர்களின் கையில் அல்ல.
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/12–m4a-acqd1f
பதுங்குதல்
‘பத்திரமா இருந்துக்க’ என்ற சொல்லைப்போல கேவலமான சொல் வேறு இல்லை. நான் எப்போதுமே பத்திரமாக இருந்ததில்லை. என் பையனிடமும் அதைச் சொன்னதில்லை.வாழ்க்கை வெல்வதற்கும் நிறைவதற்கும் உரியது. பத்திரமாக பதுங்கி இருப்பதற்குரியதல்ல
https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/13–m4a-acqcvb
பனித்துளியின் நிரந்தரம் வாழ்க்கையின் சாரமென்ன என்ற கேள்விக்கு சாராம்சமாக மிகப்பெரிய, மிக மர்மமான, முற்றிலும் தர்க்கபூர்வமான ஒரு பதில் இருக்கமுடியும் என்ற நம்பிக்கையே மனிதனின் மாயை. தன்னை பெரிதாக எண்ணிக்கொள்ளும் அகந்தையில் இருந்து முளைப்பதல்லவா அது? மிகச்சிறு விஷயங்களில் ததும்புகிறது வாழ்க்கையின் பொருள். ஒவ்வொரு தருணத்திலும். வெற்றியில், உச்சத்தில், மையத்தில் மட்டும் அது இல்லை. எங்கும் எக்கணத்திலும் உள்ளது. https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/14—m4a-acqcvk
நான்கு வேடங்கள் அறம், பொருள், இன்பம், வீடு என இவை நான்குமே முக்கியமானவை. எவையுமே தவிர்க்கக்கூடியவை அல்ல. ஏனென்றால் இவை ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒன்றில்லாமல் பிறிதொன்று நிறைவடையமுடியாதென்பதே வாழ்க்கையின் விதிகளில் முக்கியமானது…. அகவிடுதலை என்பது மிக நுட்பமாகவும் விரிவாகவும் உணரப்படவேண்டிய ஒன்று. வாழ்க்கையின் அலைக்கழிப்புகளில் இருந்து விடுதலை பெறுவது அது. வாழ்க்கையில் இருந்து பெறும் மனவிலக்கம் மூலமே நாம் அதை அடைகிறோம். உள்ளூர மெல்ல ஒட்டாமலாகி அதை வெளியே இருந்து பார்க்க ஆரம்பிக்கிறோம். அந்தப்பார்வை நமக்கு முழுமைநோக்கைக் கொடுக்கிறது. அதையே ஞானம் என்ற சொல் குறிப்பிடுகிறது. https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/15—m4a-acqd13
ஒரு மரம்-மூன்று உயிர்கள் ஆனால் அதிலேயே மூழ்கியவர்கள் இழப்பவை பெரிது. ஒரே மரம்தான். சில உயிர்கள் அதன் இலைகளை உண்கின்றன. சில உயிர்கள் கனிகளை. சில உயிர்கள் மலர்களின் தேனை மட்டும். தேனுண்ணும் உயிர் இலையுண்ணும் உயிரிடம் சுவை பற்றி என்ன பேசமுடியும்? எதை விளக்கமுடியும்? https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/16—–m4a-acqd0s
ஆணவமும் சோம்பலும் என்னால் ஈர்க்கப்பட்டு வரும் இளம்நண்பர்களுக்கும் இதையே சொல்வேன், நீங்கள் எவர் என உணருங்கள். அந்த ஆணவம் உங்களை நிமிரச்செய்யட்டும். சமகாலச் சிறுமைகளைக் கடந்துசெல்லமுடியும். முற்றிலும் சோம்பல் இல்லாமல் இருப்பதும் நல்ல விஷயம் அல்ல. முழுக்கமுழுக்க சுறுசுறுப்பாக இருப்பவர்கள் படைப்பூக்கம் இல்லாதவர்கள். கனவு காணாதவர்கள். சோம்பல்நிலை என்பது ஒருவகையில் நாம்நம்மை இயல்பாக நிகழவிடுவதும்கூட. சோம்பலுக்கும் வாழ்க்கையில் முக்கியமான இடம் உண்டு https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/17—m4a-acqd0t
தன்வழிச்சேரல் ஒரு சிலர் மட்டுமே மனம் திறந்து நானும் கூட அப்பவே உன்கூட வந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். என் வாசிப்பும்,இலக்கியமும் என் எல்லா சூழலிலும் நின்று எதிர்கொள்ளும் பக்குவத்தை அளித்தது என்பதில் சந்தேகமேயில்லை. https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/18–m4a-acqd17
இரண்டு முகம் இன்றைய தலைமுறையில் மிகச்சிறுபான்மையினராயினும் ஏராளமானவர்கள் தனக்கென தனிவாழ்க்கையை கோருகின்றனர். தனி அடையாளத்தை விழைகின்றனர். அவர்களே இந்த வினாக்களுக்குள் வந்து விழுகிறார்கள். இதைப் பேசிப்பேசி சற்று தெளிவுகொள்ளவேண்டியிருக்கிறது. ஏதோ ஒருவகையில் இவற்றைக் கேட்கவேண்டிய இடமென என் தளம் இருக்கிறது போலும். நான் இதைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். மீண்டும் எழுதவேண்டியிருக்கிறது https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/19—m4a-acqd1l
தன் வழிகள் ஒவ்வொருவரும் தனக்குரிய தளத்தை, தன்னால் ஆற்றப்படும் பங்களிப்பை, தனிப்பட்ட நிறைவை தேடியாகவேண்டும். அதன்பொருட்டே செயல்படவேண்டும். அதுவே நிறைவு அளிக்கும் வாழ்க்கை. ஆனால் அதற்காக ஒரு சமநிலையைப் பேணவும் வேண்டியிருக்கிறது. தன்னறத்துக்கும் சூழலுடன் ஒத்துப்போவதற்கும் நடுவே ஒரு துலாமுள் போலவே நாம் செல்லவேண்டியிருக்கிறது https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/20—m4a-acqd1m
சரியான வாழ்க்கையா நாம் வாழ்வது சரியான வாழ்க்கையா என்று நாமே மதிப்பிடுவது மிக எளிது ஒருவருடத்தை நினைவில் ஓட்டி அந்த நாட்களில் எத்தனை நாட்களை நமக்கு நிறைவளிக்கும்படி செலவிட்டிருக்கிறோம் என்று பார்ப்பதுதான். எது நமக்கு உண்மையான நிறைவையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது, அதை நோக்கி நாம் சென்றிருக்கிறோமா என்று அவதானித்தால் போதும். அந்த ஒருவருடத்தின் விரிவே மொத்த வாழ்க்கையும் https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/21—m4a-acqd21
நம்பிக்கையின் ஒளி கட்டி எழுப்புதல், உருவாக்குதல். அது முழுக்கமுழுக்க நேர்நிலைச் செயபாடு. இன்று நண்பர்கள் அனைவரும் மேலும் மகிழ்ச்சியுடன், மேலும் வெற்றிகரமாக இருப்பதைக் கண்டபோது ஏற்பட்ட மனநிறைவு மிகமிகப் பெரிய பரிசு https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/22—m4a-acqd26
தன்மீட்சி அவை எவரையும் எதுவும் செய்யவில்லை என்றே கொள்வோம். குறைந்தபட்சம் என்னை மாற்றியிருக்கின்றன. நான் மகிழ்ச்சியாக இருந்திருக்கிறேன். திரும்பி நோக்கும்போது எழுதிய காலங்களைப்போல இனியவை வேறில்லை என உணர்கிறேன். இந்தப்பேறு உலகில் மிகச்சிலருக்கே வாய்க்கிறது. அது போதும். https://anchor.fm/venkatramanan/episodes/ep-e3l03q/23–m4a-acqd2l

12 பேர் | 9 நாள்கள் | 5 குடும்பங்கள் | 4 தலைமுறை | 3 நாடுகள் | 2 ரெட்டை வால் ரெங்குடுக்கள் | ஒரு ட்ரிப்!

http://bit.ly/singaporemalaysia

ஐந்து பேர் நான்கு நாட்கள் முன்று ஊர்கள்!

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திரதினத்தை முன்னிட்டு வந்த மூன்று நாள்கள் (தான் நாட்கள் அல்ல!) விடுமுறையில், கூட ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பாலக்காடு & கோவை சென்று வந்தோம் (குடும்பத்திலுள்ள ஐவரும்!). திருமணமான பின் நந்தினி அவ்வப்போது அம்மாவை சீண்டிக் கொண்டேயிருந்தாள் – “ஆனா வூனா ‘கல்பாத்தி, கல்பாத்தி’ னு நீங்க இருந்த ஊரை சொல்லிக்கிட்டே இருக்கீங்க, ஆனா ஒருதரம் கூட கூட்டிக்கிட்டே போறதில்லை”னு. இந்தமுறை “போடுறா ப்ரோக்ராமை”னு அம்மா வீறுகொண்டெழுந்து டிக்கேட் வாங்கிட்டா.

வியாழனன்று (11 ஆகஸ்ட்) ஐவரும் சேர்ந்து கிளம்பும்போது வரும் வழக்கமான வேடிக்கைகள் அனைத்தும் குறையாமல் இருந்தன – நந்தினி மாலை வீட்டுக்கு சீக்கிரம் வராததால் அப்பாம்மா பதட்டமானது, அம்மாவின் புலம்பல், இதையெல்லாம் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாத அர்ச்சித்தின் விஷமங்கள், வீட்டையே கட்டி இழுத்துக்கொண்டு போகுமளவு ரகவாரியான லக்கேஜ் பைகள் (ட்ராலி, தோளில் தூக்கிக்கொண்டு போகும் யூத்தான பேக்பேக்குகள், இலையில் கட்டப்பட்ட சாப்பாட்டுப் பொட்டலங்கள் அடங்கிய கேரிபேக், அவற்றுக்கான கட்டைப்பைகள், ஐந்து தண்ணீர் போத்தல்கள், இத்யாதி), எப்போதும் வெடிக்கும் உப்புப்பெறாத சண்டைகள் (அப்பா-புள்ள, அம்மா-புள்ள, கணவன்-மனைவி, மாமனார்-மாற்றுப்பெண், அம்மா-அப்பா, அர்ச்சித்-இதர அனைவரும்!), எல்லாமிருந்தும் ஒருவழியாய் வேளச்சேரியில் 8.10 ரயிலை பிடித்தோம். சேரனில் கோவைக்கு கிளம்பினோம்.

வெள்ளியன்று காலை கோவை கோனியம்மன் கோயிலில் தரிசனம் முடித்து, தொட்டாப்ல இருக்கும் அன்னபூர்ணாவில் டிஃபன் சாப்பிட்டுவிட்டு, அப்பா தவிர நாங்கள் நால்வரும் பாலக்காட்டுக்கு வண்டி பிடித்தோம். அங்கிருந்து நான், நந்தினி & அர்ச்சித் மட்டும் குருவாயூர் (ஏசி பேருந்து!). மதியம் மூன்றரை மணிக்கு வரிசையில் நின்றோம். அர்ச்சித்துக்கு கொஞ்ச நேரம் பேப்பர் ஏரோவை வைத்து விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தேன். பயலுக்கு அங்கிருக்கும் மக்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவனுக்கு அந்த ஏரோ மட்டும்தான் உலகம்! 6 மணிக்கு சாமி தரிசனம் முடித்து (கிருஷ்ணனை போர்த்தி எடுத்துக் கொண்டு வராத குறையாக கும்பிட்டு) மம்மியூர் சென்றோம். அங்கிருந்து 7.30க்கு பாலக்காட்டுக்கு வண்டி பிடித்தோம். 10.15க்கு பாலக்காடு. நல்லவேளை உடனே ஆட்டோ கிடைத்தது, இரவு 10.30க்கு சித்தி வீட்டுக்கு வந்துவிட்டோம். சித்தப்பா வாங்கி வைத்திருந்த சேவை அமிர்தமாயிருந்தது. காலை கோவிந்தராஜபுரம் (கல்பாத்திக்கு அருகிலிருக்கும் கிராமம்) “புழை”யில் அர்ச்சித்தை (அலற அலற!) நாலு முக்கு முக்கி எடுத்தோம். நாங்களும் குளித்து சிவன் கோயில், பன்னிரண்டாம் தெரு கணபதியான் கோயில், வடக்கந்தரை, மந்தக்கரை கணபதி எல்லாம் தரிசனம் செய்து முடிதோம். பின்னர் சித்தி வீட்டில் நல்ல சாப்பாடு!

மதியம் மூன்று மணிக்கு மேல் “மலம்புழா டேம்” – சென்னையில் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்த பிறகு வாழ்க்கையில் பல ஆச்சரியங்கள் விட்டுப்போய்விட்டன – ஒருகாலத்தில் பெரும் சுவாரசியமாயிருந்த அணைக்கட்டுகள் இன்று சற்றே ஏமாற்றத்தைதான் தருகின்றன (ஆறேழு வருடங்களுக்கு முன் நண்பர்கள் திருமணத்தை ஒட்டி வைகை அணைக்கும், ஆழியாறுக்கும் சென்றபோதே இதை உணர முடிந்தது). 5 மணிக்கு கிளம்பி சின்மயானந்தா மடத்தினரால் நிர்வகிக்கப்படும் குருவாயூரப்பன் கோயிலுக்கு சென்றோம் (விக்டோரியா கல்லூரியின் அருகிலமைந்துள்ளது). சுத்தமான, அமைதியான இடம், கூட்டமே இல்லாத சூழல், கண்கவர் கிருஷ்ணன் – நிம்மதியாக சஹஸ்ரநாமம் ஒரு ஆவர்த்தி செய்து முடித்துவிட்டு வெளியே வந்தோம். திரும்பவும் ஆட்டோ பிடித்து மந்தக்கரை. கணபதியான் கோயிலை அடுத்த பஜனை மண்டபத்தி ஆடி மாதத்தை முன்னிட்டு பஜனோத்ஸவம். பஜனைப் பாடல்களைப் பிரதானமாகப் பாடும் இதுபோன்ற திருவிழாக்கள் பெரும்பாலும் வெகுஜன ஆதரவை எளிதாகப் பெற்று விடுகின்றன – இதில் நாமும் சுலபமாக இணைந்து பங்கேற்க முடிகிறது. பாடகர் ஒரு வரி பாடிமுடிக்கும்போது நாம் அடுத்த வரி பாடும்போது நாம் ஏதோவொன்றைச் செய்கிறோம் என்ற உணர்வு வருகிறது. மாறாக கர்நாடக இசைக்கச்சேரிகளில் பாடகர்கள் எவ்வளவுதான் மேதமையை வெளிப்படுத்திப் பாடினாலும் அதன் சூட்சுமங்கள் தெரிந்த, இசை முறையாக (பாடமாக/நெடுநாள் தொடர்ந்து) கற்ற ஒரு சிலரால் மட்டுமே அதில் லயிக்க முடிகிறது. ஆலாபனைகளின் முக்கியத்துவங்களை உணர முடிகிறது. செவ்வியல் (க்ளாசிக்) கச்சேரிகளில் ஒரு எளிய ரசிகனுக்கு வெகு சீக்கிரத்தில் சலிப்பு வந்துவிடக் கூடிய வாய்ப்புகளே அதிகம்.

அரைமணி நேரம் இசை கேட்ட பிறகு அங்கேயே சாப்பிட்டோம். இரவு நந்தினி மனதிலா மனதோடுதான் வீட்டுக்கு வந்தாள் (முழுவதும் கேட்க முடியவில்லை என்ற குறை!). அடுத்த நாள் காலை சீக்கிரமே எழுந்து ஸ்டேடியம் பேருந்து நிலையத்திற்கு ஆட்டோ பிடித்தோம். அங்கிருந்து பல்லச்சேனாக் காவு எனப்படும் “மீன்குளத்தி பகவதி” கோயிலுக்கு பஸ். ஆடி கடைசி ஞாயிற்றுக்கிழமையாதலால் கூட்டமான கூட்டம். நான் கவனித்தவரை மலையாளிகளை விட அருகிலிருக்கும் கோவை, பொள்ளாச்சி போன்ற ஊர்களிலிருந்து வந்திருக்கும் தமிழர், தெலுங்கர்களே அதிகம் (பின்னர் மாமாவிடம் கேட்டபோது தொழில் செய்வோர் பலர் தொழில் சிறக்க அங்கு வேண்டுதலுக்கு வருவார்கள் என்றார்). அங்கே சிறப்பு தரிசன வரிசையில் (ரூ.601 – 4 பெரியவர்கள்+ 1 சிருவர்/சிறுமிக்கு அனுமதி) நின்று சாமி பார்த்தோம். அரவணைப் பாயசத்தை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வண்டி பிடித்து மந்தக்கரைக்கே வந்து திரும்பவும் போஜனோத்ஸவத்தில் சாப்பிட்டோம் 🙂

பின்னர் அன்று மதியம் கிளம்பி மாலை கோவை வந்து சேர்ந்தோம். பாப்பநாயக்கன் பாளயத்திலுள்ள பெருமாள் கோயிலுக்கு போகவேண்டுமென்பதில் அப்பா குறியாக இருந்தார். அங்கே கவனித்த ஒரு விஷயம் – 2017ல் நிகழவிருக்கும் இராமானுஜரின் ஆயிரமாவது திருநக்ஷத்திரத்தை ஒட்டி (ஏப்ரல் மாதம் தொடங்கி) ஒவ்வொரு திருவாதிரைக்கும்  ஒரு ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசகர் (பெரும்பாலும் உபய வேதாந்திகள்) சொற்பொழிவாற்றுகிறார்கள்.  (முழுப்பட்டியல் கீழே).


ரொம்பவும் சந்தோஷமாயிருந்தது. கூடவே இதையெல்லாம் யார் கேட்க வருகிறார்கள் என்ற கவலையும்! 7.30 மணியளவில் காந்திபுரம் வந்தோம். கொஞ்ச நேரம் க்ராஸ்கட் ரோட்டில் சுற்றினோம். சாப்பிடுவது எங்கே என்று யோசனையாகவே இருந்தது. நண்பன் சேதுவுக்கு ஃபோன் போட்டேன், ஆர்யாஸை பரிந்துரைத்தான். பார்த்தால் க்ராஸ்கட் ரோட்டில் “ஃபுட் ஜாயின்ட்ஸ்” என்று சொல்லக்கூடிய சின்னச்சின்ன உணவகங்கள் ஏகப்பட்டது கண்ணில் பட்டது. “கௌரி ஃபுட் ஜாயின்ட்” என்ற ஒரு கடையில் (மாரியம்மன் கோயிலருகில்) சாப்பிட்டோம். பெரும்பாலான தெருக்கள்/பாதைகள் இன்று பார்த்தால் ரொம்ப சிறிய தூரங்களாயிருக்கின்றன. உதாரணமாய் சிவானந்தா காலனி – பவர்ஹவுஸ் செல்லும் வழி – அன்றெல்லாம் ‘இவ்வளவு தூரமா’ என்று சலித்துக்கொண்டிருக்கிறேன் – இன்று ரொம்ப சீக்கிரம் வந்து விட்டுருந்தேன்!

திங்களன்று வடவள்ளி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில் இரண்டும் பார்த்து விட்டு இரண்டு மாமாக்களின் வீட்டுக்கும் சென்றோம். “ரெட் டாக்சி”,  “உங்கள் ஆட்டோ” என்று கோவையிலும் ஓரளவு கட்டுபடியாகிற கட்டணத்தில் ஆட்டோ/டாக்சிக்கள்.

அன்று மாலை மூவரும் நான் படித்த டியூசன் சாரைக் காணச் சென்றோம். அவருக்கு மிகவும் சந்தோஷம் – அவருக்காக ஞாபகமாய் சித்திரக்கவி புத்தகத்தை எடுத்துக்கொண்டு போயிருந்தேன். அவருக்கு அதுவும் ரொம்ப பிடித்திருந்தது (சாலையில் நடக்கின்ற மாடு மூத்திரம் போகின்ற வடிவத்துக்கெல்லாம் பாட்டெழுதியிருக்கிறர்கள் என்பதை சிலாகித்துச் சொன்னார்). கூடப்படித்த பயல்கள் பற்றியெல்லாம் விசாரித்தார் – நான் அவரிடம் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, ஐந்து வருடங்கள் டியூசன் படித்திருக்கிறேன். நான் கல்லூரி சென்ற வருடம் பிறந்த அவரது இரண்டாவது மகன் கார்த்திகாநந்தன் இப்போது பன்னிரண்டாவது படித்துக்கொண்டிருக்கிறான்! முதல் மகன் விவேகானந்தன் இந்தியன் ஏர்ஃபோர்சில் பணிபுரிகிறான். க்ளிஷேவாகச் சொன்னால் “காலம்தான் எவ்வளவு வேகமா ஓடுது”! அர்ச்சித்துக்கு இடதுகை பிரதானமாக வருவதில் அவருக்கு ரொம்ப சந்தோஷம் (அவரது முதல் மகனும் நொட்டாங்கை 🙂 ). பழைய விஷயங்கள் பலவற்றை பற்றிப்பேசிக்கொண்டிருந்தோம். என்னை கோவைக்கு வந்து செட்டிலாகிவிடும்படி வலியுறுத்திச் சொன்னார். புது வீடு ஒன்று (ஆடி அமாவாசையன்று) வாங்கியிருப்பதைப் பற்றியெல்லாம் விலாவாரியாக பேசிக்கொண்டிருந்தார். நந்தினிக்கு ரொம்பவும் ஆச்சரியம் (“எப்படிங்க எல்லா விஷ்யத்தையும் உங்ககிட்ட இவ்வளவு ஓப்பனாச் சொல்றரு”ன்னு வெளில வந்தப்புறம் கேட்டா!).

பின்னர் மனசில்லா மனசோடு அவர் வீட்டிலிருந்து கிளம்பினோம். ரயில் நிலையக்திற்கு 8 மணியளவில் வந்து சேர்ந்தோம். நந்தினியின் டிக்கெட் மட்டுமே கன்ஃபர்ம் ஆகியிருந்தது. (பயணச்சீட்டில் அம்மாப்பாவிற்கு வாங்கியிருந்தது ‘லோயர் பெர்த்’ கோட்டாவில் ரெண்டுமே “கன்ஃபர்ம்டு” சீட், எங்களுக்கு இரண்டுமே ‘வெயிட்டிங்க் லிஸ்ட்’ – அதில் கன்ஃபர்ம் ஆன ஒன்று S3யில். அம்மாப்பா டிக்கெட் S8ல்!  வேற வேற டி.டி.ஆர், இரண்டுக்கும் நடுவில் என்ஜின் – பூந்து போக முடியாது! திருப்பூரில் இறங்கி அடித்து பிடித்து ஓடி அப்பாவை அங்கே செட்டில் செய்து விட்டு, ஈரோட்டில் இறங்கி மறுபடியும் ஓடி S8க்கு வந்து, ரெண்டு லோயருக்கும் நடுவில் படுத்துக்கோண்டேன்!) ஆகஸ்ட் 16, செவ்வாயன்று தூங்கி வழிந்து கொண்டே சென்னை!

அனைத்தும் ஒருவிதம் சுகம் 🙂

அசந்தர்ப்பங்கள்

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் நாம் வாழும்(?) நகர வாழ்க்கையில் பல அசந்தர்ப்பங்கள் – அவற்றில் தலையாயது… மரணம்!

உண்மையில் மரணத்தை எதனுடனும் ஒப்பிட்டு சமாதானமாவதென்று சாத்தியமில்லை. உதட்டளவில் ’81 வயசாயிடுச்சு’, ‘கல்யாணசாவு’, ‘மனுசன் மூணு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டுத்தான்யா போயிருக்கான்’, ‘நல்லவேளை இவர் இந்தம்மாவுக்கு முன்னமே போயிட்டார்’னு ஆயிரம் சொன்னாலும் உள்ளத்தளவில் – அதுவும் பிள்ளைகளுக்கு- நிச்சயம் அது ‘ஈடு செய்ய முடியாத இழப்புதான்’. ஆனால் பிற அனைவருக்கும் ஒரு சாவின் தீவிரம் உறைப்பதில்லை. அலுவலக பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் என தினசரிப் பிரச்சனைகளுக்கு மத்தியில்தான் மரணமும் குறுக்கிடுகிறது. அதுவும் வயதானவெரன்றாலோ, நாம் அவரைக் கடைசியாகப் பார்த்து ஒரு வருடத்திற்கும் மேலாகிறது என்றாலோ  நிஜத்தில் நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை.

இழப்புகளில் ஆண்கள் யாரும் (நான் உட்பட) அழுது பார்த்ததில்லை. அதிகம் அலட்டிக்கொள்ளாத ஆண்களின் இயல்பே அவனை இந்த விசயத்தில் அவஸ்தைக்குள்ளாக்குகிறது. அவனால் நினைத்தாலும் அழ முடிவதில்லை. அல்லது அவனுக்கு அழவே தோன்றுவதில்லை. எந்தவொரு எழுத்தாளனுக்கும் இந்த அபத்தமும் தீவிரமும் கூடுதலாகவே உறைத்திருக்கிறது. சுஜாதா தன் அப்பாவை இழந்தபோது எழுதிய ஒரு கட்டுரையில் சற்றே சீற்றம் தெரியும் – துக்கவீட்டிற்கு வந்து வயிறுமுட்டச் சாப்பிட்டுப்போவதன் அபத்தம். பாலகுமாரன் தன் அப்பாவை எரித்தபோது தோன்றிய உணர்ச்சிகள் கூட கதைக்கான வரி போலத்தான் சிந்தித்தேன் என்று முன்கதைச் சுருக்கத்தில் எழுதியிருக்கிறார். சமீபத்தில் இந்திரா பார்த்தசாரதியின் சிறுகதைத் தொகுப்பினை வாசித்தபோது அவரும் ஒரு வயதானவரின் இழப்பின்போது அங்கு நிலவும் (ஆனால் நிலவக்கூடாத) சகஜநிலை பற்றி விவரித்திருக்கிறார். ஐஸ்பெட்டியில் அந்த அப்பாவிற்கு கிடைத்த படுக்கையை, அதை ஏற்பாடு செய்த, கதை நாயகனின் நண்பர் பெரிதாய் சிலாகிக்கிறார். ஜெயமோகனும் சுஜாதா மரணத்தின்போதும், தன் பெற்றோரை இழுந்தபோதும் எழுந்த எண்ண அலைகளைப் பதிவு செய்திருக்கிறார். நான் வாசிக்காத பலரும் இதைப் பற்றி நிச்சயம் எழுதியிருக்கக்கூடும். இந்தளவு சிக்கல்கள் இல்லாமையாலோ அல்லது வேறு பல காரணங்களினாலோ பெண்கள் இயல்பாகவே அழுது விடுகிறார்கள்.

இந்த சமயத்தில் எஸ்.வி.ராமகிருஷ்ணனின் ‘அது அந்தக் காலம்’ கட்டுரைத் தொகுப்பு நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. காந்தி இறந்தபோது பெரும்பாலான இந்தியாவே அதை நம்ப மறுத்ததாம்! அவ்வளவு எளிதான வாழ்வு அவர்களுக்கு சித்தித்திருக்கிறது.

ஓரிண்டு வாரங்களுக்கு முன் நண்பனொருவனிடம் இதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது சோகம் உறைக்காததைப் பற்றி பேச்சு வந்தது. அப்போது அவன் சொன்னது – ‘அவர் செத்தது உன்னை பாதிக்கனும்னா அவர் இருந்தபோது நீ அவர்கிட்ட நெருக்கமாயிருந்திருக்கனும்; அன்பு செலுத்தியிருக்கனும்’! சத்தியமான வார்த்தை.

பி.கு. இதைக் குறிப்பிடாமல் இருக்கமுடியவில்லை – பாஸ்கர் சக்தியின் ‘பழுப்பு நிற புகைப்படம்’ கதை – கிட்டத்தட்ட அந்த கிராமமே ஆத்தா கிழவியின் சாவுக்குக் காத்துக் கிடக்கும்! அதில் பாஸ்கரின் சில சொல்லாடல்களையும் சம்பவங்களையும் சிரிப்பு வராமல் படிப்பது கஷ்டம்!

பிறசேர்க்கையாக விகடனில் இன்று(31/3/2011 – மறக்கமுடியாத தேதி!) வெளியான மரணத்தின் முன் ஏற்பாடுகள் கவிதை!

மரணத்தின் முன் ஏற்பாடுகள்

ராத்திரி தாண்டுவது கஷ்டமென
வைத்தியர் சொல்லிப் போனதும்
மரணத்தின் மாய வலை
விரியத் தொடங்கியது
வீட்டில்

அம்மாவும் அக்காவும்
அவசரமாய் குழந்தைகளைச்
சாப்பிடவைத்தார்கள்

தகவல் சொல்லப்பட
வேண்டியவர்களின்
தொலைபேசி எண்களைத்
தேடத் தொடங்கினார்கள்
அப்பாவும் பெரியண்ணனும்

பீரோவைப் பூட்டி
சாவியைப் பத்திரப்படுத்துவதும்
எளிதில் திருடு போகக்கூடிய
விலையுயர் பொருட்களைப்
பாதுகாப்பதுமென
ஏதேனும் வேலை இருந்தது
எல்லோருக்கும்

‘எல்லாத்துக்கும் முன்னே நின்னு
காசைக் கரியாக்காதீங்க’ என
சின்ன அண்ணனை
எச்சரிக்கத் தவறவில்லை
சிக்கன சின்ன அண்ணி

எதிர் வீட்டு கோபாலை அழைத்து
வாசலில் டியூப்லைட் மாட்டப்பட
தூக்கம் வராத அக்கம் பக்கத்தினர்
திண்ணையில் அமர்ந்து
முன்னம் நிகழ்ந்த
பல மரணங்கள்பற்றி
முணுமுணுத்துக்கொண்டு
இருந்தார்கள்

தப்படிக்கும் சின்னானும்
பந்தல் போடும் ஆறுமுகமும்கூட
முன்தொகை வாங்கிப் போன பின்
நிகழ்வின் சோகம்போல்
மழை பெய்யத் தொடங்க…
இனி நிகழ வேண்டியது
தாத்தாவின் இறப்பு மட்டுமே!

சாவுக்கு சாவே கிடையாது போல 🙂 இன்றைய விகடனில்(25-09- 2013 தேதியிட்டது) ‘வீயெஸ்வி’யின் ஒத்திகை சிறுகதை!

வெட்டி முறிக்கும் வேலை எதுவும் இல்லாத தருணங்களில், வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மோட்டு வளையத்தை உற்றுப்பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவன் நான். அந்த நேரங்களில், ஏதேதோ சிந்தனைகள் எனக்குள் வட்டமடிக்கும்; கற்பனைகள் சிறகடித்துப் பறக்கும்.

அப்படி ஒருநாள், மோட்டு வளையத்தை அதன் மீது படிந்திருந்த ஒட்டடையின் ஊடே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பகல் வேளையில் தோன்றிய கற்பனையில் நான் மரணித்தேன். அது அநாயாச மரணம். காபி குடித்துக் கொண்டிருந்தேன். அப்படியே நாற்காலியில் சரிந்தேன். தலை தொங்கிப்போயிற்று. சுவாசம் அடங்கியது. அவசரமாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். உயிர் பிரிந்து அரை மணி நேரம் ஆகிவிட்டதாக டாக்டர் அறிவித்துவிட, என் உடல் வீட்டுக்கு எடுத்துவரப்பட்டது.

நான் இறந்தது ஞாயிற்றுக்கிழமை என்பதால் மகன், மருமகள், கல்லூரியில் விஸ்காம் படிக்கும் பேத்தி அனைவரும் வீட்டில் இருந்தார்கள். கவலை தோய்ந்த முகத்துடன் மனைவி, ‘ரெண்டு மணிக்கு காபி கலந்து கொடுத்தேன். நாலு வாய் குடிச்சார். அப்படியே பிராணன் போயிடுத்து…’ என்று அங்கலாய்க்க ஆரம்பித்தாள்.

டெலிபோனில் தகவல்கள் பறந்தன. லோக்கல், நேஷனல், இன்டர்நேஷனல் என்று எல்லாத் திக்குகளிலும்… ஃபேஸ்புக்கில் பேத்தி ஸ்டேட்டஸ் அப்டேட் செய்தாள். ‘RIP’ என்று வருந்தினாள். ‘தாத்தா என்னுடைய ரோல்மாடல்’ என்று எழுதி என்னைப் பெருமைப்படுத்தினாள். ‘இப்பதான் கேள்விப்பட்டேன். அப்பாவுக்கு என்ன ஆச்சு?’ என்று என் மகனுக்கு அலைபேசி விசாரிப்புகள் வரத் தொடங்கின.

‘உடலை தரையில் கிடத்த வேண்டும்’. ‘தலையை எந்தத் திசையில் வைக்க வேண்டும்’ என்ற வழக்கமான சந்தேகம் என் விஷயத்தில் அங்கே எழும்பியது. மினி பட்டிமன்றம் ஒன்று நடந்து, வடக்குத் திசை என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும், ஹாலில் எது வடக்கு என்பது இரண்டாவது சந்தேகம். அதுவும் ஒரு மாதிரி தீர்மானிக்கப்படுவதற்குள் ஹாலில் சோஃபாக்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சுவர் ஓரத்தில் பிளாஸ்டிக் நாற்காலிகள் இரண்டு இருந்தன. வயதானவர்கள் அல்லது சமீபத்தில் முட்டியில் ஆபரேஷன் செய்யப்பட்டவர்கள் உட்காருவதற்கு!

தகவல் அறிந்து ஓடோடி வந்தான் என் மைத்துனன். ‘அத்திம்பேர் என்னை இப்படி அநாதையா விட்டுட்டுப் போயிட்டாரேடா…’ கதறினாள் மனைவி.

‘வருத்தப்படாதே அக்கா… தானும் கஷ்டப்படாம, மத்தவாளுக்கும் கஷ்டம் கொடுக்காமப் போனதுக்கு சந்தோஷப்படு. இப்படி ஒரு சாவு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும் சொல்லு?’ என்றான் மைத்துனன். தன் அப்பாவில் தொடங்கி, இப்படி அநாயாச மரணம் கிடைக்கப் பெற்றவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு சகோதரியை ஆறுதல்படுத்தினான். ‘இப்படி ஒரு சாவு எத்தனைப் பேருக்குக் கிடைக்கும்?’ என்ற கேள்விக்கு அங்கே விடை கிடைத்துக்கொண்டிருந்தது. ஆக, என்னுடைய திடீர் இறப்பு அப்படி ஒன்றும் பிரத்யேகமானதல்ல என்பதை உணர முடிந்தது.

பக்கத்து வீட்டு பரமேஸ்வரன் வந்தார். அழுக்கான எட்டு முழ வேஷ்டி. அதைவிட அழுக்காக மேல்துண்டு. இந்த மாதிரி ‘விசிட்’களுக்குப் பயன்படும் என்பதற்காகவே, நான்கைந்து வேஷ்டிகளை அழுக்காகவே ஸ்டாக் வைத்திருப்பவர்களில் ஒருவர். என் வயதுக்காரர்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாலேகூட பெட்டிக் கடைல பார்த்தேன். கிங் சைஸ் சிகரெட்டை கடைசி வரைக்கும் இழுத்து, கீழே போட்டுவிட்டு காலால் மிதிச்சு அணைச்சானே’ என்றான் பரமேஸ்வரன் என் மனைவியிடம்.

‘இந்தப் பாழாப்போற பழக்கத்தை விட்டுத்தொலைங்கோனு அடிச்சுண்டேன். இப்ப அதுவே எமனா வந்துடுத்துப் பார்த்தேளா. நீங்களாவது பெட்டிக்கடைக்குப் போறதை இனிமே நிறுத்திடுங்கோ’ என்றாள் என் மனைவி.

‘மாஸிவ் ஹார்ட் அட்டாக் ஏற்பட கெட்டப் பழக்கம் எதுவும் இருக்கணும்னு அவசியம் இல்லே. ம்… இதையெல்லாம் எப்படி இவங்களுக்குப் புரியவைக்கிறது?’ என்று முணுமுணுத்துக்கொண்டு நகர்ந்தார் பரமேஸ்வரன்.

ஹாலில் ஃப்ரீஸர் பாக்ஸ் வந்து இறங்கியது. அதில் என்னை வைத்தார்கள். மேல் மூடியைக் கவிழ்த்தார்கள். த்ரீ வே பின் பாயின்ட் தேடி ப்ளக்கைச் செருகி இணைப்புக் கொடுத்தார்கள். பரமேஸ்வரன் புருவம் உயர்த்தினார். ‘இதெல்லாம் எதுக்கு?’ என்று கேட்காமல் கேட்டார்.

‘அங்கிள்… மும்பைலேர்ந்து என் சிஸ்டர் வரணும். அதனால நாளைக்குத்தான் ‘எடுக்க’ முடியும்’ என்று மகன் விளக்கினான். என் மருமகளுக்கு, இதில் ஒப்புதல் இல்லை. ‘இப்பதானே பத்து நாளைக்கு முன்னாடி வந்து பார்த்துட்டுப் போனா. இப்ப விழுந்து அடிச்சுட்டு வருவானேன்? ‘பத்து’க்கு வந்தா போதாதா?’ என்ற தினுசில் அவள் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும்.

அவள் கவலையே வேறு. நாளை மதியம் வரை ஐஸ் பெட்டி ஓட வேண்டும். கரன்ட் விழுங்கும்; பில் எகிறும். கொஞ்சம் நாட்களாக மின்வெட்டும் கிடையாது. நான் உயிருடன் இருந்தவரை, எங்கள் அறையில் ஏ.சி. ஓடினாலே, மருமகளுக்குப் பிடிக்காது. ‘தினமும் இரண்டு மணி நேரம் ஓடினாலே போதுமே. பிறந்ததிலிருந்து இவர் ஏ.சி-லதான் தூங்கிப் பழக்கமோ?’ என்று என் காது படவே இடித்துப் பேசியிருக்கிறாள். இப்போது என்னுடைய பூத உடலும் சுகம் அனுபவிப்பதை அவளால் நிச்சயம் பொறுத்துக்கொள்ள முடியாது.

சொல்ல மறந்துவிட்டேனே… மருத்துவமனையிலிருந்து எடுத்து வரப்பட்ட உடலை தரையில் கிடத்தியதும், பரமேஸ்வரனின் யோசனையின் பேரில் புத்தம் புதிய வேஷ்டி ஒன்றை பீரோவிலிருந்து எடுத்துவந்து போர்த்தினான் என் மகன். மகராசி மருமகள் இதையும் ரசிக்கவில்லை.

‘ஏம்மா… இதுக்கு புது வேஷ்டிதான் யூஸ் பண்ணணுமா?’ என்று அவளுடைய அம்மாவிடம் ரகசியக் குரலில் கேட்டாள். அந்த அம்மாள் வந்து அரை மணி ஆகிறது. காந்தி நகரில் வீடு. தகவல் சொல்லப்பட்டதும் ஆட்டோ பிடித்து வந்துவிட்டாள்.

‘ஏண்டி… உனக்கு என்ன வந்தது? அது உன் மாமனாரோட வேஷ்டிதானே?’

‘உனக்கு ஒரு எழவும் புரியாது. புது வேஷ்டி கைவசம் இருந்தா விசேஷ நாட்கள்லே அவர் கட்டிக்கலாம் இல்லியா?’ மருமகளின் அம்மா, தலையில் அடித்துக்கொண்டு சரவணபவனில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்த காபியை எடுத்துக் குடித்தாள்.

‘எடுப்பது’ நாளைக்கு என்று முடிவாகிவிட்டதால் எல்லாமே மந்தமாக நடந்தன. மிகவும் நெருங்கிய உறவுகளில் ஒருசிலர் வந்தார்கள். இப்போது தலையைக் காட்டிவிட்டுப் போய்விட்டு மறுபடியும் நாளைக்கும் வருவார்கள். ‘செலவுக்கு எல்லாம் பணம் இருக்கு இல்லியா?’ என்று ஒரு பெரிசு கேட்டது. இப்படி ஏதாவது கேட்டு என் மகனைச் சங்கடப்படுத்துவார்கள் என்று எனக்குத் தெரியும். கோத்ரெஜ் பீரோவில் எப்போதும் ரொக்கமாக 5,000 ரூபாய் வரை வைத்திருப்பேன். வீட்டில் எல்லோருக்கும் இது தெரியும்.

‘வாத்தியாருக்குச் சொல்லியாச்சா?’

‘கிரிமேஷன் கிரவுண்ட் புக் பண்ணியாச்சா?’

‘டாக்டர்கிட்டே சர்ட்டிஃபிகேட் வாங்கியாச்சா? அதைக் காட்டினாத்தான் ‘பாடி’யை உள்ளே விடுவா!’

‘இப்ப எல்லாம் ஆன்லைன்லேயே டெத் சர்ட்டிஃபிகேட் கிடைச்சுடும். ரொம்ப அலைய வேண்டாம்.’

‘பெசன்ட் நகர்தானே. எலெக்ட்ரிக்ல ஒரு சௌகரியம். ஒன்றரை மணி நேரத்துல சாம்பலைக் கைல கொடுத்துடுவா. பக்கத்திலேயே பீச் இருக்கு. அஸ்தியைக் கரைச்சுட்டு வந்துடலாம்.’

‘கரெக்ட். இன்னிக்குச் செத்தா நாளைக்கு பால்லாம் இப்போ கிடையாது. செத்த அன்னிக்கே சாம்பல்; அன்றே பால்!’

‘இருபது பேருக்கு வெளில சாப்பாடு சொல்லிடு. காலைல வேணும்னா ஹோட்டல்ல இட்லி கிட்லி சொல்லிடலாம். எப்படியும் ‘எடுக்க’ பன்னிரண்டு மணி ஆயிடும். எல்லாம் முடிச்சுட்டு வீடு திரும்ப மூணு ஆயிடும்.’

இப்படி இலவச ஆலோசனைகள் குவிந்தன. அழுகுரல் அதிகமாகக் கேட்கவில்லை. அரை மணிக்கு ஒரு தடவை யாராவது பெண்மணி உள்ளே நுழைந்தால், லேசான விசும்பல் மட்டும் கேட்கிறது. எனில், என்னுடைய மரணம் காரணமாக யாருக்கும் வருத்தம் இல்லையா? அப்படிக் கிடையாது. பொதுவாகவே இப்போது எல்லாம் நெருங்கிய சொந்தபந்தம் யாராவது செத்துப்போனால்கூட யாரும் பெரிதாக அழுது ஆர்ப்பாட்டம் செய்து அலட்டிக்கொள்வதில்லை. நிறைய வீடுகளில் நானே கவனித்திருக்கிறேன். ஆக வேண்டியதைப் பார்ப்பதில்தான் எல்லோரும் குறியாக இருக்கிறார்கள். உடலை அப்புறப்படுத்திவிட்டு வீட்டைக் கழுவிவிடுவதில்தான் அனைவரின் கவனமும். இங்கே என் மைத்துனரும் பக்கத்து வீட்டு பரமேஸ்வரனும் அதை முன்நின்று செய்துகொண்டிருந்தார்கள்.

‘ஏண்டா… பேப்பர்ல கொடுக்கணுமே!’ என்று என் மகனிடம் மைத்துனன் கேட்டு அடுத்த விவாதத்துக்குக் களம் அமைத்துக் கொடுத்தான்.

‘பின்னே வேண்டாமா?’ என்றார் பரமேஸ்வரன்.

‘சிட்டி எடிஷன் போதுமா? இல்லே ஆல் இண்டியாவுல வரணுமா?’

இடையில் புகுந்தாள் மருமகள்.

‘சென்னை எடிஷனே அதிகம். தாம்பரம் தாண்டினா, எத்தனை பேரை உங்க அப்பாவுக்குத் தெரியும்?’ என்றாள்.

‘அப்படிச் சொல்ல முடியாது. மும்பை, சண்டிகர்னு நார்த்ல நிறைய ஊர்கள்ல அவர் சர்வீஸ்ல இருந்திருக்கார்.’

‘மே பி. பட், அங்கே எல்லாம் யார் இவரை ஞாபகம் வெச்சுட்டு இருக்கப்போறாங்க?’

என்னை மாதிரி பிரபலம் அற்றவர்களுக்கு இதுதான் சங்கடம். இதுவே நான் வி.ஐ.பி-யாக இருந்து இறந்திருந்தால், இலவசமாக எல்லா பேப்பர்களிலும் செய்தி போட்டிருப்பார்கள். டி.வி. சேனல்களிலும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்திருப்பார்கள். டி.வி. கேமராவும் மைக்கும் வீடு தேடி வந்திருக்கும். எனக்குக் கொடுப்பினை இல்லை.

விவாதம் தொடர்ந்தது.

‘போட்டோ வேணுமானு பார்த்துக்குங்க. ரொம்பச் செலவாகும். ஸ்போர்ட்ஸ் பேஜ்ல சின்னதா வந்தா போதும்’ என்று என் மருமகள் தன் கருத்தை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறாள். மௌன சாட்சியாக என் மனைவி.

‘தாத்தா போட்டோவைப் போட்டு பேப்பர்ல இன்சர்ஷன் கொடுக்கலாம் அப்பா’ என்றாள் என் பேத்தி. ‘தாத்தாவுக்கு போட்டோ எடுத்துக்கறது ரொம்பப் பிடிக்கும்’ – தன் செல்ல மகளின் வேண்டுகோளை என் மகனால் நிராகரிக்க இயலவில்லை. போட்டோ ஓ.கே. ஆனது.

லேப்டாப் திறந்து, பிகாஸா ஆல்பங்களில் என் புகைப்படம் தேட ஆரம்பித்தாள் பேத்தி. சொந்தங்கள் வீட்டுக் கல்யாணங்களில் எடுத்தவை, குடும்பத்துடன் ஊட்டி சென்றபோது க்ளிக் செய்தவை, பாஸ்போர்ட்டுக்காக நான் எடுத்துக் கொண்டவை… இப்படி எல்லாவற்றையும் ஆராய்ந்துவிட்டு ஒரு போட்டோவைத் தேர்வு செய்தாள். அதில் நான் சிரித்துக்கொண்டிருந்தேன். 15 வயது குறைவாகத் தெரிந்தேன். அந்தப் படத்தை அவள் ‘க்ராப்’ செய்துகொண்டிருக்க, ஆபிச்சுவரியின் வாசகத்தை எழுதிப்பார்த் தார்கள். யார் பெயரைச் சேர்ப்பது, யாருடையதை விடுவது என்று விவாதித்தார்கள். விளம்பரத்தில் என் மருமகனின் பெயரும் ‘வருந்துபவர்களின்’ பட்டியலில் இணைக்கப்பட்டது.

என்னுடைய மும்பை மகளின் பெயரும், மருமகனின் பெயரும் சேர்க்கப்பட வேண்டுமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு, வேண்டாம் என்று இறுதியில் நிராகரிக்கபட்டது. திருமண அழைப்பிதழ்களில், ‘பெஸ்ட் காம்ப்ளிமென்ட்ஸ்’ போடும்போதுதான் இப்படி விவாதம் நடக்கும். இப்போதெல்லாம் துக்க விஷயத்துக்குள்ளும் அது நுழைந்துவிட்டது.

ஃப்ரான்சைஸுக்கு, என் மகன் டெலிபோனில் சொல்ல, வீடு தேடிவந்து விளம்பரத்தையும் ‘செக்’கையும் வாங்கிச் சென்றார்கள். வீட்டைவிட்டு என் ‘பாடி செல்வதற்கு முன், போட்டோ முந்திக்கொண்டு நாளை காலையில் பேப்பரில் வந்துவிடும். என்னைத் தெரிந்த பலர் ‘அடப் பாவமே… சிவராமன் போயிட்டானே!’ என்று லேசாக அதிர்ந்துவிட்டு, பக்கத்தில் வேறு யாராவது தெரிந்த முகம் மண்டையைப் போட்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு அடுத்த பக்கத்துக்குத் திருப்பிவிடுவார்கள். சிலர், போனில் விசாரிப்பார்கள். வேறு சிலர், ‘அந்தப் பக்கம் போறப்ப போய் துக்கம் விசாரிக்கலாம்’ என்று சொல்லிவிட்டு, வேறு வேலை பார்க்கப் போய்விடுவார்கள்.

அன்று இரவு வீட்டில் யாரும் தூங்கவில்லை. பரமேஸ்வரன், காலையில் வருவதாகச் சொல்லிவிட்டு வீட்டுக்குப் போய்விட்டான். மற்றவர்கள் என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘அப்பாவுக்கு கோபமும் கண்டிப்பும் அதிகம். இருந்தாலும் நம்ப மேல கொள்ளைப் பிரியம் அவருக்கு’ என்று மும்பையிலிருந்து வந்துவிட்டிருந்த தன் சகோதரியிடம் சொல்லிக்கொண்டிருந்தான் என் மகன்.

‘ஆமாண்டா, போன வருஷம் அப்பாவுக்கு ஆபரேஷன் ஆன சமயம், ஒரு வாரம் நான் கூடவே இருந்தேன். அப்போ உன்னைப் பத்தியும் மன்னியைப் பத்தியும் ரொம்ப உயர்வாப் பேசினார்.’

எதிர்காலம் பற்றிக் கவலைப்பட்டுவிட்டு, என் மனைவி லேசாகக் கண் அயர்ந்தாள்.

‘அவருக்கு ஒரே குறை. நான் ஒரு டேப்ளட் வாங்கிக் கொடுக்கலேங்கிறதுதான். ‘ஏண்டா டாக்டர் கொடுக்கிற மாத்திரைகள் மட்டுமே எனக்குப் போதும்னு வெச்சுட்டியா?’னு ஜோக் அடிப்பார்.

‘ஆமாம்… நான்கூட அடுத்த பிறந்த நாளைக்கு அப்பாவுக்கு ஒரு ஐ-பேட் வாங்கிக் கொடுக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்’ என்று என் மகள் சொன்னது, எந்த அளவுக்கு உண்மை என்பது அவளுக்கு மட்டுமே தெரியும்.

‘திடீர்னு இப்படிப் போயிடுவோம்னு அப்பா கொஞ்சம்கூட நினைச்சிருக்க மாட்டார். 100 வயசு வரை வாழணும்னு அவருக்கு ஆசை. எல்லாத்தையும் அனுபவிக்க ஆசைப்பட்டவர் அப்பா’ – என்னைப் பற்றி என்னைவிட என் மகளுக்கு அதிகம் தெரிந்திருக்கிறது.

விடியலுக்காக எல்லோரும் காத்திருக்கிறார்கள். சோர்வையும் மீறி அனைவரும் சுறுசுறுப்பாகிவிடுவார்கள்.

காலை நாளிதழ் வந்ததும் என் மகனும் மற்றவர்களும் பாய்ந்துவந்து என்னுடைய இறப்புத் தகவல் சரியாகப் பதிவாகி இருக்கிறதா என்று பார்த்தனர். தான் தேர்வு செய்த போட்டோ சரியாக அச்சாகியுள்ளதா என்று பேத்தி பார்த்துக்கொண்டாள். என்னுடன் இறுதிப் பயணத்துக்கு எத்தனை பேர் செல்லப்போகிறார்கள் என்பதற்கு என் மைத்துனன் கணக்கு எடுத்துக்கொண்டான். பரமேஸ்வரனும் வந்து சேர்ந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சேர்ந்தது. வந்திருந்தவர்களின் தலைகளை எண்ணிப் பார்த்தபோது கொஞ்சம் ஆச்சர்யமாகக்கூட இருந்தது. பரவாயில்லையே… எனக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு இத்தனை பேரா?

‘ரெண்டு மணிக்கு நாலு வாய் காபி குடிச்சார். அப்படியே சுவாசம் நின்னுடுச்சு’ என்பது திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டது. ‘அப்படியே தூங்கற மாதிரிதான் இருக்கு’ என்றும் மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டது. இவர்கள் யாருமே என்னைத் தூங்கும் கோலத்தில் பார்த்தது இல்லை. எப்போதும் நான் பக்கவாட்டில் படுத்துதான் உறங்குவேன் என்பதும் யாரும் அறியாத ஒன்று.

வாசலில் ஷாமியானாவெல்லாம் போட்டு காசு விரயம் பண்ணவில்லை என் மகன். வாடகைக்கு பிளாஸ்டிக் நாற்காலிகள் எடுக்கவில்லை. வீட்டில் டைனிங்டேபிளுடன் இருந்த நாற்காலிகளைப் பயன்படுத்திக்கொண்டான். கால் உடைந்த நாற்காலிகள் இரண்டு கொடுத்து உதவினார் பரமேஸ்வரன்.

ஐஸ் பாக்ஸ் மீது முதல் மாலை வைக்கப்பட்டது. இறந்த உடல் மீது வைக்கப்படும் பூமாலைகளுக்கு எப்போதும் தனி வாசம் உண்டு. இஸ்திரிக்காரர் செல்வராஜ் தன் குடும்பத்துடன் வந்து மரியாதை செலுத்தினார். வீட்டில் வேலைசெய்யும் சின்னம்ம£வின் புருஷன் ரங்கன் குடித்துவிட்டு வந்து, எனது முகம் பார்த்துக் கும்பிடு போட்டான். லேசாக அழுதான். ‘அவசர ஆபத்துக்கு பத்து, இருபது வேணும்னா யார்கிட்டே கேட்பேன்? ஐயாவை விட்டா எனக்கு யாரையும் தெரியாதே’ என்றான். ரங்கனை, செல்வராஜ்தான் கைபிடித்து வெளியே அழைத்துப் போனார்.

நான் சர்வீஸில் இருந்த காலத்தில் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரிந்த, என்னுடன் ஆத்மார்த்தமாகப் பழகிய 13 பேர் பெர்மிஷன் போட்டுவிட்டு வந்திருந்தார்கள். வரிசையாக வந்து எனக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, என் மகனிடம் ‘என்ன ஹெல்ப் வேணும்னாலும் தயங்காமக் கேளுங்க. உங்க அப்பாவுக்கு நாங்க ரொம்பக் கடன் பட்டிருக்கோம்’ என்று சொல்லிவிட்டு வெளியே நாற்காலிகளில் சிலர் உட்கார, நின்றுகொண்டிருந்தார்கள் மற்றவர்கள்.

இவர்கள் என்னைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு ஊர் உலகத்தைப் பற்றி நிறைய வம்படித்தார்கள்.

வாத்தியார் வந்துவிட்டார். கூடவே மூங்கில், ஓலை, கயிறு மாதிரியான அத்தியாவசிய சாமான்களும். உதவிக்கு ஒடிசலாக ஓர் ஆள். அவரின் கன்னத்தில் டொக்கு விழுந்திருந்தது. சட்டையைக் கழற்றிச் சுருட்டி தன் மஞ்சள் பைக்குள் வைத்தபோது அவரது மார்புப் பகுதி எலும்புகளை எண்ணிவிட முடிந்தது. அசாத்திய சுறுசுறுப்புடன் புரோகிதருக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் மடமடவெனச் செய்தார்.

‘ரகுராமா, நீ போய் ஸ்நானம் பண்ணிட்டு ஈர வேஷ்டியோட வா’ என்று என் மகனிடம் வாத்தியார் சொல்லிக்கொண்டிருந்தபோதே, இடுப்பில் இருந்த அவரது செல் அலறியது.

‘ஆமாம்… ராமகிருஷ்ணன்தான் பேசறேன். முகூர்த்தம் பதினொன்றரை மணிக்குத்தானே? அதுக்குள்ள நான் வந்துடுவேன்’ என்று போனில் சுபகாரியம் பற்றி பேசிவிட்டு, ‘நேத்திக்கு எத்தனை மணிக்கு உயிர் நின்னுது?’ என்று இங்கே மைத்துனனிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதுவும் நிறைய சாவு வீடுகளில் நடப்பதுதான். இதுமாதிரி சந்தர்ப்பம் தெரியாமல் பேசுபவர்களிடமிருந்து செல்போனைப் பிடுங்கி, வங்காள விரிகுடாவில் வீசி எறிய வேண்டும் என்று எனக்குத் தோன்றும். இதைவிட மோசம், கல்யாண மேடையில் மந்திரம் சொல்லிக்கொண்டே மொபைல் போனில் ‘பாடியை எப்போ எடுக்கறாளாம்?’ என்று கேட்கும் பிரகிருதிகள்.

ஐஸ் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து வெறும் தரையில் கிடத்தப்பட்ட உடலைக் குளிப்பாட்டிவிட்டார்கள். புரோகிதர் மந்திரம் சொல்ல, அர்த்தம் தெரியாமல் மகன் அதைத் திருப்பிச் சொல்ல மகளும் மனைவியும் குரல் உயர்த்தி அழுதார்கள். பார்த்த வேறு சிலருக்கும் அது தொற்றிக்கொண்டது.

‘லேடீஸ் எல்லாம் வாய்க்கரிசி போட்டுடலாம். ஜென்ட்ஸ்ல காட்டுக்கு வராதவா இங்கே போட்டுடலாம். அப்பா, அம்மா இருக்கறவங்க போடக் கூடாது’ என்று வாத்தியார் சாஸ்திரம் சொன்னார்.

‘பாடி’ வேனில் ஏற்றப்பட்டது. குமுறி அழுத மனைவியின் முகம் பார்க்கப் பரிதாபமாக இருந்தது எனக்கு. மாமியாரின் தோள் அணைத்து மருமகள் ஆறுதல் சொன்னபோது பெருமையாக இருந்தது. மருமகள் அப்படி ஒன்றும் மோசமானவள் கிடையாது!

சட்டென்று என்னுடைய கற்பனை கலைந்தபோது, பாத்ரூம் சென்று தலைமுழுக வேண்டும் போலிருந்தது. பசி வயிற்றைப் பிசைந்தது. நான் கற்பனையில் கண்டது எல்லாம் எங்கும் நடப்பதுதான். நாளைக்கு என் விஷயத்திலும் அது நடக்கவே செய்யும். அனைத்தும் இப்போது இயந் திரத்தனமாகிவிட்டது. இனி, யாரும் யாருக்காகவும் வருத்தப்படப்போவது இல்லை. அடுத்தடுத்த வேலைகள் அவரவருக்குக் காத்துக்கிடக்கின்றன.

உடல் சாம்பலாகிவிட்டது. நல்லது. எனில், பிரிந்து சென்ற உயிர் என்ன ஆயிற்று?

அடுத்த முறை மோட்டுவளையம் பார்த்து உட்காரும்போது கற்பனை செய்துபார்க்க வேண்டும். அதற்கு முன்னர், நிறைய நூல்கள் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

‘பஜ கோவிந்தம்… பஜ கோவிந்தம்… பஜ கோவிந்தம்… மூடமதே..!’

செம்மொழியான தமிழ்மொழியாம்! – Zoho’s participation in the World Tamil classic Conference, Coimbatore

Team

We (Myself & 3 of my colleagues) represented ZohoCorp in the recently held World Tamil Classical conference, Coimbatore.
Zoho was one of the (120+) participants in the Tamil Internet conference (along with software companies – HCL, TCS, Wipro, MicroSoft Bhasha, CTS & other language-specific-software-tool-vendors).
We had internationalized five of our services (Writer, Sheet, Mail, Chat & Challenge) in Tamil & have launched it in this conference.
(Check how far the translation is by changing your language )

Overall the response was good.
Visitors included patrons, students who have got used to our services & the remaining 90% being our prospects 🙂

The main concern (for most of the exhibitors) was the diversity of the audience.
The visitors included everyone – Right from people from rural areas who see Computers surprisingly, students who came for the ‘exhibition’, party people (No comments!), Policemen, college students, professors, teachers, govt. staff, house wives, politicians, ministers, you name a category, they were present!

This was the challenge faced by many exhibitors – how we make them understand what we are into!
I inferred this reluctance in many of the stalls (you are not my immediate / near-future prospect. Why should I spend my energy in you?) – I can also be wrong here, Not sure.

Whoever asked about Zoho (or to whomever reading the Zoho name board), we tried to explain what Zoho is.
We started with EMail as an analogy – Just like you use EMail in the Internet without any installation, free of cost, you can also create, store & edit your project reports, documents, balance sheets (to cater the middle-aged people who hear this often), presentations in the Internet for free – This was our main Mantra.

In addition, we highlighted the following:

1. Power of Net (if you  had your online-booked-railway-ticket in your own computer, you cannot print it out from Station if you forgot. Whereas in the Internet its always easy)
2. No installation problems, No CD needed, You can just discard MS Office – I accept this is not true! But we cautiously said most-of-MS-features when we compared this to MS-Office
3. Free for personal use & to share among friends / colleagues / small groups.
4. One id you can access all the 21 services free of cost – You can also use your GMail / Yahoo Id where you need not create a separate id.
5. Once you use in bulk in office / college, you will be paying a minimal price which will be 1/50th or less when compared to MicroSoft. This also depends on the number & type of services you use

A very few (say 10 people) asked us what is our profit, to which we had said, “once you use it & finds it good, you can recommend it to your manager / SysAdmin people as an alternative to MS Office”
Many Govt. organizations including ELCOT have seen us. Lets hope a good number of people were aware of us!

Some other points not related to Zoho:

1. Do not get frustrated by the media coverage (where only the patti mandram & other kaviyarangams were covered) & decide that the whole thing was CM’s effort to establish his name.
2. There has been a lot more happenings
3. Badri (a stall exhibitor-cum-observer-for-research papers) has been posting about this conference tagged as செம்மொழி
4. Collection of pamphlets – Many secretly consider the pamphlet more worthy than what we explain & they rate themselves high when they get many of them!
5. As Thirumavelan (a journalist) in Vikatan, rightly pointed out, Whether Tamil flourished or not, Coimbatore had developed a lot – atleast it appears so – good roads, good bus-stand toilets, Painted walls, it shows!
6. Mu.Elangovan has got many photos
7. Madhan Karky (s/o Vairamuthu, a paper presenter) had got some photos.
8. Some other blog posts on the conference.

Sujatha was once criticized in IISc, Bangalore for keeping his science related articles too simplistic for which he replied – “Thats not targeted for you people; those are for the auto-drivers, housewives, mostly the common man who reads the weekly magazines“. I could apply the same analogy for this Internet conference – Its the common man who should have got more benefited, his children who witnessed many possibilities for them, learnt many new things (every common word we used – login, EMail, account, internet, online – are all buzz words for them) here.

Nova refuses to sell Insulin at subsidised rates to Greece

நவீன இன்சுலின் ஊசி

நவீன இன்சுலின் ஊசி

கிரேக்கம் கேட்கும் விலைக்கு நவீன இன்சுலின் மருந்தை விற்க முடியாது என டென்மார்க் மருந்து உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீரிழிவு நோய்க்கு எதிரான இன்சுலின் மருந்தைத் தயாரிக்கும் உலகின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான நோவா நோர்டிஸ்க் நிறுவனம் தனது நவீன இன்சுலின் ஊசிக் கருவியை கிரேக்கத்திற்கு இனிமேல் வழங்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.

பயங்கரமான பொருளாதார நெருக்கடியில் உள்ள கிரேக்க அரசு தனது செலவினங்களைத் குறைத்துக்கொள்ளும் கடும் முயற்சியின் ஒரு கட்டமாக அனைத்து மருந்துப் பொருட்களின் விலைகளும் கட்டாயமாக கால் பங்கு குறைக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

ஆனால் கிரேக்கம் கேட்கும் விலைக்கு தங்களால் இந்த நவீன இன்சுலின் மருந்தை விற்க முடியாது என்பதால் நோவா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கையால் அதன் கருவியைப் பயன்படுத்தும் 50 ஆயிரத்துக்கும் மேலான கிரேக்க நீரிழிவு நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள், ஏன் மரணத்தையும் எதிர் நோக்குவார்கள் என்று கிரேக்க நீரிழிவு நோயாளர் நல அமைப்புத் தெரிவித்துள்ளது.

“நோவா நோர்டிஸ்க் செய்வது ஒரு கொடிய அச்சுறுத்தல், தங்களுக்குள்ள சமூகப் பொறுப்புணர்வை அவர்கள் மீறும் நடவடிக்கை இது” என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஆனால் நோவா நிறுவனமோ கிரேக்க அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தைக் குற்றம் சாட்டியிருக்கிறது.

தமது அந்த நவீன கருவிக்குப் பதிலாக பொது இன்சுலின் மருந்தான குளுக்காஜனை கிரேக்கத்துக்கு இலவசமாக வழங்க தாங்கள் முன்வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Came across this news that Nova Nordisk refuses to provide Insulin for Greece at a subsidised rate.
What sin, Greece people committed?
Has the cost of the irresponsible actions by Govt. should be bear by the people?
One more incident to prove the irrationality of the life & the urge to keep us informed of the reality!

Gaping Void TDHurst and a lot more!

Tyler replied me whether I will be interested in his “GapingVoid-100 people” project & I gladly accepted it.
I think I came to know about Hugh MacLeod in 2006 (when I just eavesdropped for the BlogCamp Chennai 2006 event) & syndicated him

Hugh was an ex-copywriter who now draws “cartoons on the back of business cards”.

I could not understand most of his posts but still followed him. After sometime I just did mark-all-as-read when I traverse his blog in my feed reader account.
In 2007, one of my favourite blogger Guru referred Hugh’s You lie for a Living post & from then on I do make sure that I do not miss his posts.

Even now, I could not get the context for all his cartoons (May be I can figure out less than 50% posts) but mainly I could identify myself in some his thought processes
I remember a few like:

Sex-cash-theory– Your work is like money & your passion is like sex where you cannot compromise either

Although the last one is off-repeated, when Hugh (who is a copywriter, a creative freaky guy, whose profession is totally unique) says it, we cannot refuse it.

Ignore Everybody - Click the image for a bigger version!

Ignore Everybody

So how Hugh influences me?
There is no direct answer to this.
I read his posts, could identify myself in some of his ideas, when slogging late night for a work-related-issue, could remember his ideas (that this too will pass away :-)) & draw inspiration to help people, to socialize… You get that – its not easy to point one post. The best I can do is to introduce him to my friends and blog/tweet & more importantly follow his ideas by heart!

So here you go! If you are college student / an employee / an entrepreneur / any one who look for good inspiration, syndicate his blog, Make a point to read it every day (or every week, if you are not frequently checking feeds), Register for his newsletter, tweet your favourites, buy / print his cube grenades, discuss it with your community, spread ideas! Good luck!

Links: Hugh’s Books, meatball sundae: ten questions for seth godin, Remember who you are, Gaping Void Gallery, @gapingvoid

http://gapingvoid.com/about/Tyler replied me whether I will be interested in his “GapingVoid-100 people” project & I gladly accepted it.
I think I came to know about Hugh MacLeod in 2006 (when I just eavesdropped for the BlogCamp Chennai 2006 event) & syndicated himHugh was an ex-copywriter who now draws “cartoons on the back of business cards”.I could not understand most of his posts but still followed him. After sometime I just did mark-all-as-read when I traverse his blog in my feed reader account.
In 2007, one of my favourite blogger Guru referred Hugh’s You lie for a Living post & from then on I do make sure that I do not miss his posts.
Even now, I could not get the context for all his cartoons (May be I can figure out less than 50% posts) but mainly I could identify myself in some his thought processes
I remember a few like:Sex-cash-theory– Your work is like money & your passion is like sex where you cannot compromise either
How to be creative
Cube grenades (This one takes the cake!)
I just want ten thousand people giving me money every year.”
Blue monster
And how come I forgot his Ignore Everybody poster!
Social Objects
But none of it works discipline. Early on in my career, I was told that success demanded 1 thing above all others: turning up every bloody day,regardless of everything.Although the last one is off-repeated, when Hugh (who is a copywriter, a creative freaky guy, whose profession is totally unique) says it, we cannot refuse it.

So how Hugh influences me?

There is no direct answer to this.
I read his posts, could identify myself in some of his ideas, when slogging late night for a work-related-issue, could remember his ideas (that this too will pass away :-)) & draw inspiration to help people, to socialize… You get that – its not easy to point one post. The best I can do is to introduce him to my friends and blog/tweet & more importantly follow his ideas by heart!

So here you go! If you are college student / an employee / an entrepreneur / any one who look for good inspiration, syndicate his blog, Make a point to read it every day (or every week, if you are not frequently checking feeds), Register for his newsletter, tweet your favourites, buy / print his cube grenades, discuss it with your community, spread ideas! Good luck!

Links: Hugh’s Books, meatball sundae: ten questions for seth godin, Remember who you are, Gaping Void Gallery

ஸ்த்ரீ ரத்னம்!

அனுராதா ரமணன் – லெண்டிங் லைப்ரரியில் புத்தகம் வாங்கி படிக்கும் வீட்டம்மாக்கள், தமிழ் படிக்கும் ஓரளவு நவீன யுவதிகள் போன்றவர்கள் தவிர்த்திருக்க முடியாத எழுத்தாளர். விகடனில் லே-அவுட் ஆர்டிஸ்டாக பணியாற்றியவர்.

இவரின் சில நாவல்களை லெண்டிங் லைப்ரரியிலும் ‘மாம் ஃப்ரம் இண்டியா‘வை கல்கியிலும் படித்திருக்கிறேன். எழுத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை. த்ரில்லர், க்ரைம் சப்ஜெக்ட்களிலும் புதினங்களை எழுதியிருந்தாலும் இவரின் ஹோம் பிட்ச் குடும்ப நாவல்கள்தான். அதில் சில கதைகளை தைரியமான, வித்தியாசமான முடிவுகளுக்காக ரசித்ததுண்டு.

ஒரு விஷயம் நினைவிற்கு வருகிறது – ஒரு ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண் எழுத்தாளரின் அற்புதமானதொரு சிறுகதையை விகடன் வெளியிட்டிருந்தது. அதில் விசேஷம் என்னவென்றால் அந்த பெண்மணியின் முதல் கதையும், அனுராதா ரமணனின் முதல் கதையும் ஒரே ஆனந்த விகடன் இதழில் வந்திருக்கிறது! ஆனால் அந்த பெண்ணின் மாமியார் மற்றும் கணவனின் (கொடுமையான) கட்டளைப்படி அந்த அம்மாள் எழுத்தைத் தொடர முடியவில்லை. இதை தனது இரண்டாவது கதையில் (ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் வந்த அந்த கதையின் பெட்டிச் செய்தியில்) அவர் சொல்லியிருந்தார். (‘என்னோட கதை வெளியான அதே விகடனில் முதல் கதை வெளியான அனுராதா ரமணன் எட்டியிருக்கும் உயரத்தை பார்த்தால் ஆதங்கமாகத்தான் இருக்கிறது’). டோண்டு ராகவன் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கிட்டத்தட்ட அனுராதா ரமணனும் புகுந்த வீட்டின் கொடுமைகளை அனுபவித்திருபாரெனத் தெரிகிறது. இதுவே கூட அவரது கதைகளில் பிரதிபலிக்கிறது. என்ன செய்வது. சங்ககாலம் தொட்டு பெண்கள் இந்த மாதிரித்தானே தங்கள் சோகங்களை கரைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது!

அவள் விக்டனில் இவர் எழுதிய ஸ்த்ரீ ரத்னங்கள் மற்றும் பேசி ஜெயிக்கலாம் வாங்க உங்கள் பார்வைக்காக.
Update on 30.5.2010: இன்றைய தினமலர் வாரமலரில் அனுராதா ரமணனின் தங்கை ஜெயந்தி சுரேஷ் (எழுத்தாளர் சு(பா)ரேஷின் மனைவி) அவரது அக்காவைப் (அனும்மா என்றே அழைக்கிறார்!) பற்றிய சித்திரம்.
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=258&ncat=2

23/06/2010 தேதியிட்ட விகடனில் மதன்:

த.சத்தியநாராயணன், அயன்புரம்.
ஊறுகாயைக் கண்டுபிடித்தவர்கள் யார்? உமக்குப் பிடித்த ஊறுகாய் எது?

உப்பும் மிளகாயும் வந்த உடனேயே ஊறுகாயும் தோன்றிவிட்டது. குளிர்ச் சாதனப் பெட்டிகள், ஐஸ் கட்டிகள் போன்றவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு ‘கெட்டுப்போகாமல் பாதுகாக்கக்கூடிய’ (preserve) ஒரே உணவுப் பதார்த்தம் ஊறுகாய்தான். அதாவது, காய் கறிகளை நறுக்கி உப்புத் தண்ணீரில் ஊறவைத்து, உலர்த்தி புளித் தண்ணீர் கலந்து ஜாடிகளில் போட்டுவைப்பார்கள். எதோடு வேண்டுமானாலும் கலந்து சாப்பிடலாம். நான் சிறுவனாக இருந்தபோது, தஞ்சா வூரில் என் தாத்தா வீட்டில், தனியாக ஓர் அறையில் அலிபாபா கதையில் வருவதுபோன்ற இடுப்பு உயர ஜாடியில் மாங்காய் தொக்கை பாட்டி தயாரித்து நிரப்பிவைத்திருப்

பார். மாதக்கணக்கில் கெட்டுப் போகாமல் ஜம்மென்று இருக்கும். அவ்வப்போது அந்த அறைக்குச் சென்று மூடியைக் கழற்றி, ஊறுகாய் வாசனையை மெய்மறந்து முகர்ந்து பார்ப்பது என் வழக்கம். ஊறுகாய் என்று இல்லை, எந்த உணவு சம்பந்தப்பட்ட பதிலாக இருந்தாலும் சரி, படித்த உடனே எனக்கு ஒரு போன் வருவது வழக்கம். எதோடு எந்த ஊறுகாயைத் தொட்டுக் கொள்ள வேண்டும், எப்படி எல்லாம் ஊறுகாய் தயாரிப்பது என்று அவ்வளவு ஊறுகாய்ச் சுவையோடு, நுணுக்கமாக போனில் விளக்குவார் அவர். நம்மிடையே அவர் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது வருத்தம் மேலிடுகிறது. மறைந்த சிறுகதை ராணி அனுராதா ரமணனைக் குறிப்பிடுகிறேன்!

விமலா ரமணி – வல்லமை.காம் இல்

புகழ்மிகு எழுத்தாளரான அனுராதா ரமணன்(62), சென்னையில் 2010 மே.16 அன்று மாரடைப்பால் மறைந்தார்.  சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காணரமான அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே.16 அன்று மாலை இறந்தார்.
அனுராதா ரமணன், 1977ம் ஆண்டிலிருந்து சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நூற்றுக்கணக்கான நாவல்களும் எழுதியுள்ளார்.  ‘சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள்’ உள்ளிட்ட பல நாவல்கள் திரைப்படங்களாகவும் வந்துள்ளன. பற்பல விருதுகளையும் பெற்றவர்.
அனுராதா ரமணனின் மறைவுக்கு அவரின் தோழியும் எழுத்தாளருமான விமலா ரமணி இரங்கல் கடிதம் வரைந்துள்ளார். அந்தக் கடிதம் இங்கே:============================================================அன்புள்ள அண்ணாகண்ணன் அவர்களுக்கு,
வணக்கம் பல.

வல்லமை.காம் இல் விமலா ரமணி

அனுராதா ரமணனின் மரணம் பற்றிய செய்தியைப் படித்து மிகவும் மனம் வருந்தினேன். என் பெண் ரூபாவின் திருமணத்திற்குக் கோவை வந்திருந்தார். அதற்கு முன்பே மேட்டூரில் ஒரு நிகழ்ச்சிக்காக நான் சென்றிருந்தபோது (அவர் அப்போது மேட்டூரில் இருந்தார்), என்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து உபசரித்தார். அதன் பின் அவர் கதாசிரியராக அவதாரம் எடுத்தபின் பல முறைகள் அவரைச் சந்தித்திருக்கிறேன்.
சாவி அவர்கள் ஆரம்பித்த பத்திரிகையான சாவியில் நாங்கள் சில எழுத்தாளர்கள் இணைந்து ஒரு தொடர் எழுத வேண்டி வந்தபோது, சாவி அவர்கள் வீட்டில் நாங்கள் இருவரும் ஒன்றாக உணவருந்தியது நினைவுக்கு வருகிறது. நான் மலர் மல்லிகையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற போது, அவரிடம் ஒரு சிறுகதை கேட்டு வாங்கிப் போட்ட அனுபவமும் நினைவில் நிற்கிறது. நல்ல எழுத்தாளர். காலப் போக்கில் பல கருத்து மாற்றங்கள் இருந்தாலும் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்ற கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. என் அன்பிற்குரிய தோழி, நல்ல சிநேகிதி… இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும்போது, வேதனையாக இருக்கிறது….அன்புத் தோழியே, என் மகள் திருமணத்திற்கு உன் குருவான சாந்தா நாராயணனுடன் நீ போட்ட ரங்கோலிக் கோலம், இன்னமும் ஆல்பத்தில் இருக்கிறது. ஆனால், வண்ணம் காட்டிய விரல்கள், இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும்போது எண்ணத்தில் வேதனை எழுகிறது.அவரின் தந்தையாரின் அறுபதாம் ஆண்டு விழாவிற்கு என்னை அழைத்திருந்தபோது, நான் சென்னையில் இருந்த காரணத்தால், அவரின் வீட்டிற்குச் சென்று விருந்துண்ட நினைவுகள் எழுகின்றன…
கோவையில் நடந்த தெய்வசிகாமணி விருது விழாவில் நாங்கள் இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள்…. எனக்கு உரத்த சிந்தனை அமைப்பு பரிசு தந்தபோது, என்னைப் பாராட்டிப் பேசிய என் அன்புத் தோழியே, இனிக்கின்ற நினைவுகளை எல்லாம் கண்ணீரில் கரைத்துவிட்டு, நீ எங்கே காணாமல் போய்விட்டாய்? உன் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். என் ஆழ்ந்த இரங்கலை இக்கடிதம் மூலம் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

அன்புடன்,
விமலா ரமணி17.05.2010

===================
காலச்சுவடில் அம்பை: அனுராதா ரமணன் என்றொரு மனுஷி – அம்பை

Plus 2 Examination Results Expected on 14th May 2010 at 9.30 A.M

Plus 2 Examination Results Expected on 14th May 2010 at 9.30 A.M

Courtesy: Dinamani: http://3.ly/VJsv

http://DinaMani.com
http://PalliKalvi.in
http://TNResults.nic.in

http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://dge3.tn.nic.in

http://Results.Dinakaran.com
http://CollegesInTamilNadu.com
http://365Chennai.com

SMS: TN12<space>REGNO – 56263
AND
PLUS<space><RegistrationNumber> – 58585

EMail: http://www.examresults.net/register/

Consolidated Marksheet to schools 14 May (today) @ 10 AM

To get Answer sheet Xeros: Rs.550 (English & 2nd Language) Rs.275(Other papers)
Retotalling: Rs.305(English, 2nd Language & Biology) Rs.205/-(Other papers)
Revaluation: (Xerox of Answer sheet compulsory) – Rs.1010 (English & 2nd Language) Rs.505(Other papers)

May 17-20 – revaluation application will be given
DD To be Taken for “Director of Government Examinations, Chennai-6

Immediate Re-exam: (Failed in less than 3 subjects) – June-July 2010. Applications given between 17-20 May
1 subject: Rs.85, 2 Subjects: Rs.135 & 3 Subjects: Rs.185

Marksheet to be given by 26th May.

புத்தகக்காட்சியும் க.சீ.சிவக்குமாரும்

சென்ற சனி(!)யன்று புத்தகக்காட்சிக்கு வருகை புரிந்தேன்! (சரி!சரி!)
குமுதமும் ‘புதியதலைமுறை’யும் பளிச்!
வாங்கிய புத்தகங்கள்:

எழில்வரதனின் கருங்கல்கோட்டை சிங்க பைரவன் கதை:

இதை வெகு நாட்களாக வாங்க நினைத்துக்கொண்டிருந்தேன்! காகிதப்பூ (‘மல்லிகை மகள்’ பத்திரிகைக்காரர்கள்) பதிப்பகம் கோடம்பாக்கத்தில் இருந்ததால் நேரில் செல்லவில்லை!
மல்லிகைமகள் ஸ்டாலில் இதைப் பார்த்தவுடன் தூக்கிவிட்டேன்!
மற்றுமொரு காரணம்: எனது (புத்தக) பையை கிழக்கில் அடைகாக்க மாட்டேனென்று பில்போடுபவர் நிர்தாட்சண்யமாய் மறுத்துவிட்டார் (அவ்வளவு கூட்டத்தில் நான் அவரிடம் கேட்டதே தவறு!). எனவே சுமைதாங்கியாய் ஒரு காப்பிடம் தேவைப்பட்டது! (‘மல்லிகை மகள்’காரர்கள் இதைப் படிக்காமலிருக்கவும் சொக்கன் இதைப்படித்தாலும் அவர்களிடம் சொல்லாமலிருக்கவும் வேண்டுகிறேன் ;-))

தினமணிடூன் -1: (மதியின் கேலிச்சித்திரங்கள் ஆரம்பத்தொகுப்பு)
கடந்த மூன்று வருடங்களாக இதைத் தேடிக்கொண்டிருக்கிறேன். பயனில்லை! இந்தமுறையும் கேட்டதற்கு முன்னடியில் இருந்தவர் ‘இல்லை’பாட்டுதான் பாடினார். தற்செய்லாக உள்ளே பார்த்தால் முன்னட்டை கிழிந்த ஒரு பிரதி! கேட்டால் கட் அன்டு ரைட்டாக ‘For Office Use only‘ என்ற பதில் வந்தது. நல்லவேளையாக மற்றொருவர் ‘இல்லங்க. ரொம்ப கிழிஞ்சுடுச்சுன்னுதான் வெச்சிருக்கோம்’.
நான் “பரவாயில்லை கொடுங்க’னு கொடாக்கண்டனாக வாங்கினேன்! பாவம் எனக்காக அட்டைப்பெட்டிகள் ஒட்டும் ‘டேப்’பைத் தேடியெடுத்து ஒட்டிக் கொடுத்தார்!

இங்கே வாங்கிய மற்ற புத்தகங்கள்:
தினமணி இசை மலர் – 2009 (ரூ.50/. வைத்தியநாதன் சீனியர்களின் ‘அனுதினக் கச்சேரி’ பற்றி வருந்தியிருந்தார்!)
தினமணி தீபாவளி மலர்2009 (ரூ.20க்கு இந்த புத்தகம் நிச்சயம் ஒரு ஜாக்பாட் Collector’s special!)

கிழக்கில் இந்த முறை ராஜீவ்காந்தி புத்தகம் ஞாபகம் வைத்து வாங்கினேன். மெதுவாய் படிக்கலாம் என்று எடுத்து வைத்தேன்.
அசிரத்தையாய் நடுவில் இரண்டு அத்தியாயம் படிக்க, பரபரப்பில் உந்தப்பட்டு அடுத்த நாளே முடித்துவிட்டேன்.
No comments! நிச்சயம் வாங்கிப் படிக்கலாம்!

கிழக்கில் வாங்கிய மற்றொன்று – சுஜாதாவின் ‘ஆஸ்டின் இல்லம் வாத்தியாரைப் பற்றி என்ன சொல்ல?!
இதில் வரும் அந்த நந்துவின் சில வசனங்கள் மற்றும் எண்ணங்களில் சுஜாதாவின் சில கவலைகள் subtleஆகத் தெரிவது பிரமையோ?!

குமுதத்தில் கிருஷ்ணா டாவின்சியின் ‘நான்காவது எஸ்டேட்‘ (65)- தெஹெல்கா.காம் பங்காரு லட்சுமணை சிக்கவைத்த ‘திரைமறை சாகசத்தை’ மையமாக வைத்து பின்னப்பட்ட த்ரில்லர்! விகடன் மொழியில் சொன்னால் – விறுவிறு பரபர மொறுமொறு!

தீம்தரிகிடவில் இந்த முறை ‘மா’ என்று ஒரு கட்டுரை தொகுப்பும்(15) ஞாநியின் பெரியார் நாடகமும் (20) வாங்கினேன்!
ஓ பக்கங்கள் இதுவரை வந்த அனைத்து கட்டுரைகளும் கிடைக்கின்றன (விகடனில் இரண்டு, குமுதத்தில் ஒன்று, கிழக்கில் ஒன்று)
‘அறிந்தும் அறியாமலும்’ ஞானபானு வெளியீடாகக் கிடைக்கின்றது.
ஞாநி தனது ஓ பக்கங்களில் (இரண்டு வாரங்களுக்கு முன்பு 31/12/2009 தேதியிட்ட குமுதத்தில்) அந்தக் கட்டுரையைக் கொண்டு செல்பவர்களுக்கு 30% தள்ளுபடி என அறிவித்திருந்தார்!
சற்று முன்னேற்பாடாக இல்லாததனால் சோதிக்க முடியவில்லை (30 ரூவாய்க்கு ரொம்பத் தேவை!)

‘சந்தியா’விலிருந்து கிட்டத்தட்ட வெளியேறிய போது கல்யாண்ஜியின் ‘நிலாப் பார்த்தல்‘ கண்ணில் பட்டது
ஏனோ பரிசல்காரனின் நினைவு வந்தது. மேலும் கல்யாண்ஜி கவிதைகள் மற்றும் விக்கிரமாதித்தனின் ‘தன்மை முன்னிலை படர்க்கை‘ (கட்டுரைத் தொகுதி) அனைத்தும் வாங்கிக்கொண்டேன்!

விகடனில் புத்தகப்பட்டியலைத் தவிர ஒன்றுமே வாங்கவில்லை!

இந்த முறை குறிப்பிட்டு சொல்லவேண்டியது க.சீ.சிவக்குமாரை மிக யதேச்சையாக சந்தித்தது, அப்புறம் நடந்த ஆச்சரியங்கள்! (தலைப்புக்கு வந்தாச்சு!)
கிழக்கிலிருந்து வெளியே வந்ததும் யாரோ ஒருவரின் மேல் நான் தடுமாற சட்டென்று சுதாரித்து மன்னிப்புக் கோரினேன்!
மனுசன் சிரித்து ‘பரவாயில்லீங்க! நீங்களாச்சும் சாரி சொன்னீங்க! ஒருத்தர் கண்டுக்காமலே (‘எருமைமாடு மேல் மழை பேஞ்சா’ மாதிரி என மனதில் சொல்லிக்கொண்டிருக்கக் கூடும்!) போயிட்டார்’ என்றார் பெருந்தன்மையுடன்.
அங்கிருந்து அகல எத்தனிக்கையில் சிவக்குமார் கண்ணில் பட்டார்!

“நீங்க சிவக்குமார்தானே?”
“ஆமா! நீங்க?”
“நான் வெங்கட்ரமணன்…” இதற்கப்புறம் அவர் என்னைப் பேசவே விடவில்லை
ஏதோ எனக்கென்றேக் காத்திருந்தவர் போல், “வாங்க அப்படியே போயிட்டு வரலாம்” என்று (கிட்டத்தட்ட) தள்ளிக்கொண்டு போனார்.
நடுவில் அருள் எழிலன், சுகிர்தராணி அனைவருக்கும் ஒரு “Hi, Bye” சொல்லிவிட்டு நாங்கள் (நானல்ல! அவர்தான்! நான் இவர்களை நேரில் இப்போதுதான் முதலில் பார்க்கிறேன்!) போய்ச்சேர்ந்த இடம்: கிழக்கின் விருட்சம் ஸ்டால்!
குணச்சித்தர்கள் வாங்கிக்கொண்டேன் (“இந்தாள் எழுதின ‘என்றும் நன்மைகள்’ எங்கேப்பா?” என கிழக்கிலிருந்தவரிடம் விசாரித்தார்! வழக்கம் போல அவருக்கு காமெடி புரியவில்லை!)

பிறகு வம்சி பதிப்பகம் (இதற்குள் கிட்டத்தட்ட எனது பட்ஜெட்டை நெருங்கி விட்டேன்!)
போனதும் அவரது “உப்புக் கடலைக் குடிக்கும் பூனை“யின் முன்னுரையைப் படிக்கச் சொன்னார்.

இந்த இடத்தில் ஒரு வார்த்தை:
பொதுவாகவே எனக்கு சிவக்குமாரின் எழுத்தை எந்தவொரு வடிவத்திலும் (விகடனில் வெளிவந்த கதைகள், ஆதிமங்கலம், கட்டுரைகள், எழில்வரதனின் புத்தகத்தின் முன்னுரை…) வாசிக்கப் பிடிக்கும்.
(சுஜாதாவின் ஸ்ரீரங்கம் போன்று இல்லாவிட்டாலும் எனக்கென்று நினைவிலிருக்கும் என்)கொங்கு மண்டலத்தை கண்முன் நிறுத்தும் எழுத்து என்பதால் க.சீ.யின் எழுத்து எனக்கு சற்றே அந்தரங்கமானது! எனவே மறுபேச்சு பேசாமல் படித்தேன்!
பார்த்தால் மனுசன் நான் தனது சிறுகதைகளைத் தொகுத்ததைக் குறிப்பிட்டிருந்தார்! ஆச்சரியம்!
அப்புறம் எப்படி இந்தப் புத்தகத்தை விடுவது? வாங்கிவிட்டேன்!

மற்றபடி ‘ஸ்பெக்ட்ரம் ஊழலை‘ப் பற்றிய ஒரு (ஒல்லி) 5ரூ. புத்தகம், தகவலறியும் உரிமைச்சட்டம் பற்றிய ஒரு சிறிய கையேடு (ரூ.30) என பொறுக்கி முடித்தேன்!

இல்லாததனால் வாங்காமல் விட்டது: கிழக்கில் ஜெயமோகனின் ‘பனிமனிதன்‘ மற்றும் கர்நாடக் சங்கீதம்: ஒரு எளிய அறிமுகம்!
விலை அதிகமென நினைத்து வாங்காமல் விட்டது: ஜெயமோகனின்  இன்றைய காந்தி, தமிழினி வெளியீடு (ரூ.300)

ஆக ஒரு முறை போய் வந்தாயிற்று! முடிந்தால் அடுத்த சனி ஞாயிறில் அடுத்தமுறை!

நிச்சயம் போய் வாருங்கள்! குழந்தைகளை அழைத்துச்செலுங்கள் (உங்கள் அண்டைவீட்டுப் பெற்றோர் சுணங்கினால் நீங்கள் பொறுப்பேற்று அந்தப் பசங்களை கூட்டிப்போங்கள்!)