சாருநிவேதிதாவும் மைக் ஆரிங்டனும் பின்ன ஃபிரான்ஸும்!
கடந்த சனியன்று கேள்விப்பட்ட ஒரு விவாதம் சாருநிவேதிதாவின் ஃபிரெஞ்சுக் காதலை நினைவிலிருத்தியது!
விஷயம் இதுதான்! (TechCrunch இன் மைக் ஆரிங்டன், ஃபிரான்ஸில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கைப் பற்றிக் குறிப்பிடுகையில் “பொதுவாகவே ஐரோப்பிய மக்கள் ‘மதிய உணவுக்கு இரண்டு-மணி-நேரம், அதீத வசதிகள், சொகுசான வாழ்க்கை’… சுருங்கச் சொன்னால் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள்!” என்று குறிப்பிட்டிருந்தார்! இத்துடன் நிறுத்தியிருந்தால் ஏது சுவாரசியம்?! அதற்கடுத்து சொன்னதுதான் முக்கியம்! “இதனாலேயே ஐரோப்பியாவின் சிறுதொழில் நிறுவனர்கள் சிலிக்கன் பள்ளத்தாக்கிற்கு குடிபெயர்ந்து விடுகிறார்கள்! (ஸ்கைப், MySQL என உதாரணங்களை ஆணித்தரமாகவே அடுக்கியிருந்தார்!) எனவே சிலிக்கன்வேலி மக்களைப் பார்த்தாவது நீங்க கொஞ்சம் திருந்தி கருத்தா வாழப் பழகிக்கங்கப்பா!” என்று சாடியிருந்தார்! வந்தது வினை! மைக்கை இந்த கருத்தரங்கிற்கு அழைத்தது சரியா? அடுத்த முறை இந்தாளைக் கூப்பிடலாமா? என்று ஓட்டெடுப்புத் தொடங்கிவிட்டனர் விழா அமைப்பினர்! மனுசனும் அசரக் காணோம்! “இது நான் ஐரோப்பியர்களிடமிருந்து எதிர்பார்த்ததுதான்! உங்கக்கிட்ட இருந்து இன்னும் அதிகமா… எதிர்பார்த்தேன்” என்று அவரும் போட்டுத் தாக்கியிருக்காரு!
இதில் சாரு எங்கப்பா வராரு? என்று நீங்கள் என் உரிச்சொல்லுக்காக இன்னும் எதிர்பார்த்துக் காத்திருந்தால்… சாரு நிவேதிதாவை கொஞ்சமேனும் வாசிப்பவர்களுக்கு அவரின் ஃபிரெஞ்சுக் காதல் பற்றித் தெரிந்திருக்கும்! “ஃபிரான்ஸ்தான் என் கனவு தேசம்! அவர்கள் எழுத்தாளர்களைக் ‘கொண்டாடுபவர்கள்’” என்ற சாருவின் கருத்து இங்கே ஏதோவொரு வகையில் தொடர்புள்ளதாகவே தெரிகிறது!
பி.கு. “சிலிக்கன்வேலியா? நீங்கள் இன்னும் ஜப்பானைப் பார்க்கவில்லையா மைக்?” என்ற, Zoho நிறுவனரின் இடுகை உங்கள் சிந்தனைக்கு! முக்கியமாய் இதன் மறுமொழிகள் தவறவிடக்கூடாதவை!



