மலேஷியாவிலிருந்து வெங்கட்ரமணன்!

Posted on June 8, 2008. Filed under: Personal | Tags: , , , , |

தற்சமயம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் டோக்கியா செல்வதற்காக(விமான நிலையம் பெயர் நமீதா அல்ல, நரிதா!)காத்துக் கொண்டிருக்கிறேன்! இங்கு ‘எங்கெங்கு காணினும் தமிழரடா’ என்று தமிழ்மக்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றனர்! சும்மா போகிற போக்கில், “என்னப்பா நல்ல இருக்கியா? அப்புறம் எப்படிப் போகுது?” என்ற தயக்கமில்லாமல் விசாரிக்கலாம். அவரும் “ம். ஏதோ ஓடுது பாஸ்!” என்று பதிலளிப்பார்! தமிழில் விசாரித்தால் மின்னலாய் ஒரு புன்னகை… தோன்றி மறையவில்லை! அந்த புன்னகையுடனேயே உதவி செய்கின்றனர்! (C26 எந்தப்பக்கம் என்று விசாரித்ததற்கு ஒரு அம்மா – “அங்கிட்டு போய் டர்ன் பண்ணி போங்க தம்பி”)
தமிழர்கள் கடை முதலாளிகளாய் இருக்கும் மகிழ்ச்சி மறையும் முன் ஒரு உறுத்தல் – பெரும்பாலான விளிம்புநிலைத் தொழிலாளர்கள் (தரை துடைப்பவர்கள், கழிவறை பேற்பார்வயாளர்கள்…) தமிழர்களாய் உள்ளனர். இவர்களுக்கு ஆனால் இவர்களுக்கும் நல்ல ஊதியம் இருக்கும் என்றே நினைக்கிறேன் (கண்டிப்பாய் இந்தியாவைக் காட்டிலும்).
இங்கு “வர்டா தமிழ்” தொலைக்காட்சியில் கலைஞர், அண்ணாதுரை புகைப்ப்படங்கள் காட்டபடுகின்றனர். ஒரு பணியாளர் நின்று பார்த்து பின் நகர்கிறார்!) கூடவே 1950 வருடமும் காட்டப்படுகின்றன (அநேகமாய் திமுக ஸ்தாபிதம் ஆன வரலாறு என்றே நினைக்கிறேன்) சே! காமிரா இல்லை! இருந்திருந்தால் மலேஷியாவில் கலைஞர் என்று ஸ்கூப் போட்டிருக்கலாம்! புதசெவியை சந்திக்கலாம் என்று நினைத்தேன். முடியவில்லை! பரவாயில்லை! வரும்போது பார்ப்போம்!

எப்படியோ மலேஷியாவில் போய் ஒரு பதிவு போட்டாயிற்று!

Make a Comment

Make a Comment: ( 1 so far )

blockquote and a tags work here.

One Response to “மலேஷியாவிலிருந்து வெங்கட்ரமணன்!”

RSS Feed for …மற்றுமொரு துளையுள்ள பானை! Comments RSS Feed

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

///
! புதசெவியை சந்திக்கலாம் என்று நினைத்தேன். முடியவில்லை! ///


Where's The Comment Form?

Liked it here?
Why not try sites on the blogroll...