IPL கிரிக்கெட் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கின் அரைச் சதம் மற்றும் cricinfoவின் நகைச்சுவை!

Posted on May 26, 2008. Filed under: cricket | Tags: , , , , , , , , , |

கடந்த சனியன்று நடந்த ராஜஸ்தான் – சென்னை இடையேயான ஆட்டத்தில் சென்னையின் போராட்டம்  மீண்டும் சூப்பர் கிங்ஸை நம்ப வைத்துள்ளது [கழுத்தறுத்து விடுவார்களோ? ஆனாலும் சென்னைக்கு அதிர்ஷ்டத்தின் அருள் தாராளமாகவே உண்டு!]. அன்றைய இரண்டாவது ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் சொல்ல சொல்லக் கேட்காமல், தன் புகழே (;-)) பெரியதென்று ஆடி தில்லியின் கனவுகளை உயிர்ப்பித்தார்! இதில் தில்லி தோற்றிருந்தால் ஆட்டம் முடிந்தது (ஐ.பி.எல் தகுதிச் சுற்று ஆட்டங்களே முடிந்த மாதிரிதான். யார் யார் அரையிறுதியில் எதிர்கொள்வார்கள் என்பதைத் தீர்மானிக்கவே மீதமிருக்கும் ஐந்து ஆட்டங்கள் உபயோகப்படும்! ஆனால் தினேஷ் கார்த்திக்…நற..நற..) என்றென்றும் அன்புடன் பாலா, இந்த ஆட்டத்தை அழகாகப் பதிவு செய்துள்ளார். கண்டிப்பாக படித்துப் பாருங்கள்! இனி நாம் கில்லியை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும்!

Wacky comment on cricinfo - Punjab trounced Mumbai by 66 runs. In return, Harbhajan slapped Sreeshanth!

அருகிலிருக்கும் படத்தைப் பாருங்கள்! cricinfoவில் வந்த வர்ணனை இது – Punjab trounced Mumbai by 66 runs. In return, Harbhajan slapped Sreeshanth! For latest news on who slapped / Threw sheep at who, who wrote on who’s wall, refer Amit Varma’s IndiaUncut blog! நான் அண்மையில் ரசித்த ஒரு அருமையான நகைச்சுவை!

Make a Comment

Make a Comment: ( 2 so far )

blockquote and a tags work here.

2 Responses to “IPL கிரிக்கெட் தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தினேஷ் கார்த்திக்கின் அரைச் சதம் மற்றும் cricinfoவின் நகைச்சுவை!”

RSS Feed for …மற்றுமொரு துளையுள்ள பானை! Comments RSS Feed

வாசன்,
என் பதிவை இணைத்தமைக்கு நன்றி. தினேஷ் கார்த்திக் அடித்த கூத்தினால், சென்னைக்கும் மும்பைக்கும் டென்ஷன், அன்றைக்கு என்று பார்த்தா, அவர் ஃபார்முக்கு வர வேண்டும் ? :)
எ.அ.பாலா

பாலா!

வருகைக்கு நன்றி.
என் பெயர் வெங்கட்ரமணன்; வாசன் எனது அப்பா பெயர்!
இப்போது பார்த்தீர்களா? தில்லி அரையிறுதிக்கு உறுதி! மும்பையா சென்னையா என்பதில்தான் போட்டியே!
இன்னொரு சுவாரசியம் – நீங்கள்தான் ETamil பாலா என்று ரொம்ப நாள் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில்தான் தாங்கள் வேறொருவர் என்று அறிந்து கொண்டேன்.

அன்புடன்
வெங்கட்ரமணன்.


Where's The Comment Form?

Liked it here?
Why not try sites on the blogroll...